dinamalar telegram
Advertisement

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க

Share

ரத்தத்தில் போதிய ஆக்சிஜன் இல்லை என்றால், மூளையில் பாதிப்பு ஏற்படும். ஆக்சிஜன் குறைவால் மூளைக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க, அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்து, இதயத் தாக்குதல் மற்றும் மூளைத் தாக்குதல் ஆகியவற்றால் மூளைக்கு ஏற்படும் சேதாரத்தை தடுக்க உதவும் என, மாசாசூசெட்ஸ் ஆராய்ச்சியாளர்கள், தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய ஆய்வு, எலிகள் சோதனைகளின் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. எலிகளுக்கு ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வீதம், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனால், எலிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. என்றாலும், ஐந்து நாட்களுக்குப் பிறகும், எலிகள் சுதாரித்துக் கொண்டன. கடந்த 2005ல் நடந்த இந்த ஆய்வை மீண்டும் விஞ்ஞானிகள் நடத்தி, ஆராய்ந்ததில், ஆக்சிஜன் போதாமையால் ஏற்படும் பாதிப்புகளை, எஸ்.க்யூ.ஓ.ஆர்., என்ற என்சைம் ஒன்று உற்பத்தியாகி, எலிகளின் மூளை பாதிப்பை காப்பது தெரிய வந்தது.

தற்போது, மருத்துவ உலகில் இந்த ஆய்வை பலரும் பாராட்டியுள்ளனர். ஏனெனில். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது, மனித மூளையை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். அதற்கு எஸ்.க்யூ.ஓ.ஆர்., என்சைம் உதவும் எனில், அதை மனிதர்களுக்கும் தந்து சோதிக்கும் அடுத்த கட்ட ஆய்வுக்கு அறிவியல் உலகம் நகரவுள்ளது. இது வெற்றி பெற்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையை எளிய என்சைம்கள் சமாளித்து நோயாளியை காப்பாற்றிவிடும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement