dinamalar telegram
Advertisement

தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படி

Share

மருத்துவ தொழில்நுட்ப உலகம், விரைவில் கண்டுபிடித்து கொடுத்த கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படி? இது குறித்து சந்தேகம் உள்ளோர் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை உதவும். ஏப்ரல் 30, 2021 அன்றோடு, அமெரிக்காவில் 10.10 கோடி பேர், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக போட்டு முடித்துள்ளனர்.

அதன் பின் வந்த மே மாதத்தின் பிற்பகுதியில், தடுப்பூசி போட்டோரில் வெறும், 10 ஆயிரத்து, 262 பேருக்கே மீண்டும், 'கோவிட் - 19' தாக்குதல் வந்துள்ளது. இதிலும் அறிகுறிகள், கடும் பாதிப்புகள் இல்லாதோரே அதிகம். மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கும் அளவுக்கு கோவிட் தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை, 1,000 பேர் மட்டுமே!இந்த நோயாளிகளில், 160 பேர் மரணமடைந்தனர்.

என்றாலும், இந்த நோயாளிகளின் சராசரி வயது 82. இவர்களின் மரணத்திற்கு காரணம் கொரோனா வைரஸ் தாக்குதல் அல்ல எனவும், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு துறை தெரிவித்து உள்ளது. இதனால், தடுப்பூசிகளை தவிர்ப்போரைவிட, ஏதாவது ஒரு தடுப்பூசியை போட்டுக் கொள்பவருக்கு, கொரோனா தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் என, மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement