dinamalar telegram
Advertisement

கோவையை கலக்கும் ‛பிரியாணி பாய்'.

Share

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் முகமது ரபி
நிலம் வாங்கி விற்பதன் மூலம் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை சமூக சேவைகளுக்கு பயன்படுத்துபவர்.
கடந்த வருடம் கொரோனா ஆரம்பித்த போது யாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை
எதைச் சமாளித்தாலும் பசியால் துடிப்பவர்களின் துயரத்தை அடக்குவதுதான் பெரிதாக இருந்தது அதிலும் வடமாநில தொழிலாளர்கள் நிறைந்த கோவையில் கொரேனா காரணமாக வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தவர்கள் அவர்கள்தான்.சொந்த ஊருக்கும் போகமுடியாமல் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் அவர்கள் தவித்த தவிப்பு பெரும் தவிப்பு
சக மனிதன் வயிறு பசித்திருக்கும் போது தான் சாப்பிடுவதை அவமானமாகக் கருதிய முகமது ரபி தனது வருமானம், சேமிப்பு என்று எல்லாவற்றையும் எடுத்து வடமாநில தொழிலாளர்களின் சாப்பாட்டிற்கு செலவிட்டார்.
தனது பகுதிகளில் இருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு சாப்பாடு போட்டவர் பலரின் வேண்டுகோள் காரணமாக கோவை முழுவதும் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தெருவோர மக்கள் என பலருக்கு சாப்பாடு வழங்கினார்.நன்கொடை வாங்குவதில்லை தனது சொந்த பணத்தில் இருந்து மட்டுமே செலவு செய்வது என்பதில் உறுதியாக இருந்த முகமது ரபி ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாமல் தவித்தார்
அந்த நேரம் அவரது மனைவி பாத்திமா தன்னிடம் இருந்த நுாற்று ஏழு பவுன் நகையை கொஞ்சமும் தயக்கமின்றி கொடுத்து,‛ இதை விற்று வரும் பணத்தில் அன்னதானம் செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டார்.
நகை விற்று வந்த பணத்தில் அன்னதானம் செய்து முடிக்கவும், கொரோனாவும் கொஞ்சம் அடங்கி நாடும் மக்களும் தொழில்களும் இயல்பு நிலைக்கு திரும்பவும் சரியாக இருந்தது இவரது அன்னதான சேவையும் தேவையில்லாமல் போனது.எல்லாம் கொஞ்ச காலம்தான் கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து இப்போது கோவையை தொற்றாளர்கள் அதிகம் கொண்ட நகரமாக்கியிருக்கிறது.
இந்தக் கொரோனா தந்த வித்தியாசமான அனுபவம் என்னவென்றால் ரயில்கள் ஒடுவதால் பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு போய்விட்டனர், ஆனால் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களும் மருத்துவ மனை நோயாளிகளும் அதிகரித்துவிட்டனர்.
இவர்களுக்கு முதல் மருந்தே சத்தான சாப்பாடுதான்.சாப்பாடு என்ற உடனேயே பலருக்கு நினைவிற்கு வந்த பெயர் முகமது ரபிதான்.
தனக்கு தற்போது தொழில் சரியில்லை எப்படி நம்மால் சாப்பாடு தரமுடியும் என்று தயக்கத்துடன் முகமது ரபி தயக்கத்துடன் மீண்டும் போய் நின்ற இடம் அவரது மனைவி பாத்திமாவிடம்தான்.
அவரோ அதே சிரித்த முகத்துடன் இதைச் செய்ய இறைவன் உங்களை தேர்ந்து எடுத்துள்ளான், நன்றி சொல்லுங்கள் தானே எல்லாம் நடக்கும் என்று நம்பிகை வார்த்தை சொன்னவர் நிலப் பத்திரங்களை விற்று அன்னதானம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
இரண்டொரு நாள் போயிருந்தால் முகமது ரபி அதையும் செய்திருப்பார் ஆனால் அதற்குள் அவரது சகோதரர்கள் அக்பர் அலி,அசேன் ஆகியோர், இடத்தை விற்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் உனக்கு சாப்பாடு போட பணம்வேண்டும் அவ்வளவுதானே என்று ஆளாளுக்கு பணமும் கொடுத்து உடல் உழைப்பையும் கொடுக்க முன்வந்தனர்.
பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டுகளான இவர்களது சகோதரர்கள் தந்த ஒத்துழைப்பு காரணமாக சிக்கன் பிரியாணி செய்து முதலில் ஐநுாறு பேர்களுக்கு கொண்டு போய்க் கொடுத்தார்
இவர்களது சத்தான ருசியான பிரியாணியைக் கண்டதும் லெமன் சாதம்,தக்களி சாதம்,தயிர்சாதம் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டன நிறைய இடங்களில் இருந்து எங்களுக்கும் பிரியாணி என்ற வேண்டுகோள் வரத்துவங்கியது.
பத்து நாட்கள் தெருவோர மக்களில் துவங்கி தொற்று பாதித்து தனிமையில் இருப்பவர்கள் வரை என்று எல்லா தரப்பினருக்கும் பிரியாணி சென்றது.கடந்த சில நாட்களாக சிக்கன் கிடைப்பதில்லை என்பதால் சிக்கனுக்கு பதில் முட்டை பிரியாணி செலவாகி வருகிறது
ஆயிரத்திற்கும் அதிகமான பேர்களுக்கு ஒவ்வொரு நாளும் பிரியாணி வழங்கப்படுகிறது இன்னும் நிறைய நிறைய தேவைகள் இருக்கிறது ஆனால் எங்களால் இவ்வளவுதான் முடிகிறது இதற்கே எங்கள் மொத்த குடும்பமும் காலை நான்கு மணிக்கு எழுந்து மாலை நான்கு மணிக்குதான் ஒரு வாய் சாப்பிடுகிறது.
யாருக்கும் சிரமம் இல்லாமல் கொரோனா விரவைில் முடிவிற்கு வரவேண்டும் அதில் இருந்து மக்கள் விடிவு பெறவேண்டும் என்று எல்லோரையும் போல நானும் பிரார்திக்கிறேன் என்று கூறிய முகமது ரபியின் செயல்பாடுகளை பாராட்ட நினைப்பவர்களுக்கு அவரது போன் எண்:98428 67574.
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (21)

 • DMK Venum Poda - Tamil Nadu ,இந்தியா

  பாய் பிரியாணியை பலர் புகழ்ந்தாலும் பிரியாணி அண்டாவை தூக்க காத்திருக்கும் ஓநாய் கூட்டம் அமைதி காத்து நிக்கிறது.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  முகமது ரபி, அவரது மனைவி பாத்திமா அவரது சகோதரர்கள் அக்பர் அலி,அசேன் ஆகியோரை பற்றி படிக்கும்போது ஒரு அளவு கடந்த மரியாதையும் , கடவுளை நேரில் காணும் ஒரு தோற்றமும் வருகின்றது ........ "ஆண்டவன் ஏழைகளிடம் ரொட்டி வடிவில் வருகிறான்" என்ற விவிலிய வாசகத்தை தனது பாணியில் நிலை நாட்டிய இவர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பது நமது அனைவரின் கடமையாகும் ...................

 • சுனாமி - சிட்னி ,ஆஸ்திரேலியா

  பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

 • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

  கடவுள் மனித உருவத்தில்.

 • RAVIKUMAR KANDASAMY - Wardha,இந்தியா

  அற்புதமான சேவை. இறைவன் கருணை உங்களுக்கு உண்டு. உங்கள் சேவை தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .

 • M Ramachandran - Chennai,இந்தியா

  பிரியாணி என்றாலே நம் யூபீஸுக்கு வாயில் எச்சி ஊரூம் அதுவும் ஊசி பிரியாணி என்றால் அடிதடி தான்.

 • seenivasan - singapore,சிங்கப்பூர்

  இவர்கள் மொத்த குடும்பம் எந்தக்குறையும் இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திப்போம். எளியோர் சேவையே, இறைவனை சேவை வாழ்க வளமுடன்

 • satheesh kumar - Kanyakumari,இந்தியா

  தனக்கு மிஞ்சிய பின் தான் தானம் என்பதை பொய் ஆக்கி விட்டார்.வாழ்க வளமுடன்.

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  நல்ல ,முஸ்லீம் என்று சொல்லுவதை விட நல்ல மனிதர் என்று சொல்லுவதே மேல். வாழ்த்துக்கள்.

 • R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்

  வணங்குகிறேன் அய்யா ஓம் நமசிவாய காத்தருளும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement