dinamalar telegram
Advertisement

சும்மா எடுத்து சாப்பிடுங்க

Share

சென்னை கிண்டி கத்திப்பராவில் இருந்து போரூர் போகும் வழியில் பட் ரோட்டின் முகப்பில் உள்ள ஒரு பேக்கரி கடையிலன் வாசலில் எதையோ எதிர்பார்த்து ஒரு சிறு கூட்டம் காத்திருக்கிறது.
கூட்டத்தினரைப் பார்த்தாலே அன்றாடம் சாப்பாட்டிற்கு அல்லல்படுபவர்கள் என்று முகத்தில் எழுதி ஒட்டியுள்ளது.காலை 7 மணியளில் பூட்டியிருந்த பேக்கரி கடையில் வாசலில் ஒரு பெஞ்ச் போடப்பட்டு அதன் மேல் ஒரு துணி விரிக்கப்பட்டது அந்த துணயின் மீது பிரஷ்ஷான பிரட் பாக்கெட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டன.பிரட்டின் சுவையை அதன் மணமே தெரியப்படுத்தியது.அடுக்கிவைக்கப்பட்ட பிரட் பாக்கெட்டுகளின் பக்கத்தில் ஒரு டப்பா காணப்பட்டது. அதில் ஒரு பிரட் பாக்கெட் விலை நாற்பது ரூபாய் காசு இருப்பவர்கள் டப்பாவில் காசை போட்டுவிட்டு பிரட்டை எடுத்துக் கொள்ளுங்கள் காசு இல்லாதவர்கள் தயக்கமே இல்லாமல் பிரட் பாக்கெட்டை இலவமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தது.
அங்கு காத்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பிரட் பாக்கெட்டை உரிமையோடு இலவசமாக எடுத்துச் சென்றனர் பிரட் பாக்கெட்டுகள் தீர்ந்ததும் மீண்டும் கொண்டு வந்து அடுக்கிவைக்கப்பட்டது எங்கெங்கோ இருந்து வந்து பிரட்டை எடுத்துச் சென்று கொண்டே இருந்தனர்.இடையில் வாகனங்களில் வந்த பலரும் டப்பாவில் பணத்தை போட்டு விட்டு பிரட் எடுத்துச் சென்றனர்.
எங்கள் பேக்கரி கேக்குகள் சுவையானவை மிகப்பிரபலமானவை ஆனால் ஊரடங்கு காரணமாக கேக்குகள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு பிரட் மட்டும் தயாரித்து சென்னையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்
ஒரு மனிதாபிமான அடிப்படையில் கடை வாசலில் பிரட் பாக்கெட்டை அடுக்கிவைத்து இல்லாதவர்கள் இயலாதவர்களுக்கு வழங்கிவருகிறோம் இங்குள்ள பிரட்டை காசு கொடுத்து வாங்குபவர்களின் பணமும் இவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது,இந்த பிரட் மூன்று நாளானாலும் கெடாது என்பதால் சாப்பாடு கிடைக்காத போது இதைச் சாப்பாடாக இவர்கள் பயன்படுத்திக் கொள்வர்.
பத்து நாளாக இதைச் செய்து வருகிறோம் காசு கொடுத்து பிரட் வாங்குபவர்களுக்கு மிச்சம் கொடுப்பதற்காகவும், ஒருவரே அதிகம் பிரட்டை இலவசமாக எடுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காகவும் கண்காணிப்பதற்காக ஒருவர் இருப்பார் மற்றபடி இலவசமாக பிரட் எடுத்துக் கொள்பவர்களிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை.
இந்த மனிதாபிமானத்தின் பின்னனியில் உள்ளவர்கள் யார்? இதற்கு எவ்வளவு செலவாகிறது? என்று கேட்ட போது இது ஒரு சின்ன விஷயம் இதற்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை என்று சொல்லி தங்களைப் பற்றிய எந்த விவரத்தையும் தர மறுத்துவிட்டனர்.
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (6)

  • sankar - ghala,ஓமன்

    சென்னையில் வெள்ளம் வந்த பொது , நான் கட்டிய வரி பணம் எங்கே , ஏன் நான் நிதி குடுக்க வேண்டும் என்று 550 கோடி சம்பளம் வாங்கும் கமல்ஹாசன் வாழ்வதும் தமிழ்நாட்டில் தான் , தினம் வருமானத்தில் தானம் செய்யும் இவர்களை போன்றவர்களும் வாழ்வதும் தமிழ்நாட்டில் தான்.

  • vijay - coimbatore,இந்தியா

    //..... சின்ன விஷயம் இதற்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை....// வெல் டன். சூப்பரப்பு

  • R.Easwar - dewas,இந்தியா

    வாழும் தெய்வங்கள்.

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    இவர்களால் தான் உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறது....

  • Ruban Samuel - Maldives,மாலத்தீவு

    இன்றும் தெய்வங்கள் இருக்கின்றன என்பதர்த்தற்கு உதாரணம். நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement