dinamalar telegram
Advertisement

துயரமும் சேர்ந்து கரையை கடக்கட்டும்

Share

கொரோவை சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கும் நம் தேசத்திற்கு இன்னுமொரு துயரமாக ‛டாக்டே' புயல் அமைந்துள்ளது.
கோடை காலத்தில் மழை வந்தால் சந்தோஷப்படுவோம் ஆனால் புயல் வந்தால் அதுவும் தோட்டம் வீடு வாசல் வாகனங்களை அடித்து துவைத்து துவம்சம் செய்யும் புயலாக வந்தால் யார்தான் தாங்குவர்.தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டாக்டே புயலாகி கேரளா,மகராஷ்ட்ரா,கர்நாடகா,கோவா,குஜராத் ஆகிய கடற்கரை மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி,நீலகரி மாவட்டங்களை பதம் பார்த்துள்ளது.நாளை 18 ந்தேதி அதிகாலை குஜராத் கடற்கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த புயலால் இன்னும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ.
எரிக்க இடமில்லாமலும் புதைக்க வழியில்லாமலும் உறவுகளும் நட்புகளும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யார்தான் கைகொடுப்பர்.புயலுக்கு முன் வரும் கனமழையால் சேதமடைந்த வீடுகளும் தோட்டங்களும் முன்பெல்லாம் தலைப்பு செய்தியாகும் இப்போது மனித உயிர்களே மலிவாகிப் போனபிறகு சேதமெல்லாம் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டது.இரண்டாவது அலையால் பாதிக்கப்படவில்லை அப்பாடா என்று நினைத்த மக்களை கனமழை ஒரு கைபார்த்துவிட்டது அடிமேல் அடி வாங்கிய மக்கள் அழக்கூட திராணியின்றி இருக்கின்றனர்.முன்பெல்லாம் இது போன்ற புயல் நேரங்களில் மக்கள் பாதிக்கப்படும் போது மொழி,இனம் கடந்து நாடு முழுவதிலும் இருந்து நேசக்கரங்களும் பாசமனங்களும் நீளும் இப்போது அப்படியில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னோரு வகையிலான பாதிப்பே.
நாளை கரையை கடக்கும் புயலோடு சேர்ந்து துயரமும் கடந்து போகட்டும்.
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement