dinamalar telegram
Advertisement

வணங்குவதற்குரிய ஆம்புலன்ஸ் தம்பதி

Share

கொரோனா காரணமாக ஊர் அடங்கிக் கிடக்கிறது
கொரோனா பாதிப்பிற்கு அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்
அவர்களுக்கு அன்றாடம் காய்கறி மளிகை பொருட்கள் வாங்கிவிட்டால் போதும் வாழ்க்கையை இன்று வென்று விட்டோம் என்ற மனநிலைஅவர்களைச் சொல்லி தப்பில்லை கொரோனா இரண்டாவது அலை அந்த அச்சத்தை அப்படி ஏற்படுத்தி இருக்கிறது
பாதிக்கப்பட்டால் மருத்துவ மனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடையாது,ஆம்புலன்ஸ் கிடைத்து மருத்துவமனை சென்றால் படுக்கை கிடைக்காது, படுக்கை கிடைத்தாலும் முழுமையான சிகிச்சை கிடைக்காது, சிகிச்சை கிடைத்தால் தேவைப்படும் ஆக்ஸிஜன் இருக்காது இதை எல்லாம் சமாளிக்க முடியாமல் செத்துப்போனால் கூட எரிப்பதற்கு உடனடியாக தகன மேடை கிடைக்காது என்ற நிலையில் மக்கள் தங்கள் மனங்களையும் வீட்டு வாசலையும் இறுக சாத்திக் கொண்டு விட்டனர்.இந்த நிலையில் டில்லியில் உள்ள ஹிமான்ஷ்(42)காலியா (39) தம்பதியினர் மகத்தான சேவை செய்து வருகின்றனர்.காப்பீட்டு திட்ட முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு காலியாவின் தாயார் திருமண பரிசாக பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கினார்.
அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தம்பதியினர் இருவருமே இயக்க கற்றிருந்தனர் அவசரமாக அவர்களை அணுகுபவர்களுக்கு இலவசமாக அழைத்துச் சென்று உதவி வந்தனர்.
எவ்வளவு நெருக்கடியான போக்குவரத்திலும் ஹிமான்ஷ் வேகமாகவும் லாவகமாகவும் ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்று நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பார் என்பதினால் இவரது பெயரை பல மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
இப்படி அவசரத்திற்கு அவ்வப்போது ஆம்புலன்ஸ் ஒட்டிக்கொண்டிருந்த இந்த தம்பதிகள் கடந்த ஒரு வருடமாக ஆம்புலன்ஸிலேயே வாழ்ந்து வருகின்றனர் அந்த அளவிற்கு அடுத்தடுத்த அழைப்புகள்.
கொரோனா நோயாளிகளை ஏற்றுவதற்கு ஆம்புலன்ஸ்களும் அதன் டிரைவர்களும் தயங்கிய நிலையில் இந்த தம்பதியினர் இன்னோரு ஆம்புலன்ஸ் வாங்கி ஆளுக்கொரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்காக இயங்கினர்.கொரோனா பாதித்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களை அட்மிட் செய்வது ரத்தம் வாங்கி வர உதவுவது என்று எந்த நேரமும் இவர்களது ஆம்புலன்ஸ் ஒடிக்கொண்டே இருக்கும்.
இதையெல்லாம் கூட சில சமயம் மனிதாபிமானமுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செய்துவிடுவர் ஆனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு போய் தகனம் செய்வதற்கு எந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் வரமாட்டார்கள் அதற்கும் இவர்கள் இருவரும்தான் முன்னால் போய் நிற்பர்
இறந்தவர்களின் ரத்த சம்பந்தமான உறவினர்கள் கூட துாரத்தில் இருந்து அழுவார்களே தவிர அருகில் வரமாட்டார்கள் இந்த தம்பதியினர்தான் இறந்தவரை துாக்கிக் கொண்டு போய் பல நேரங்களில் தகனமும் செய்வர்.
எத்தனை பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் எத்தனை பேரை காப்பாற்றினோம் என்றெல்லாம் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை கடவுள் நமக்கு உதவ வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இதில் போய் கணக்கு எதற்கு என்பதுதான் எங்கள் லட்சியம் என்று சொல்லும் இந்த தம்பதியரின் சேவையை பாராட்டி வந்தது மற்றும் இவர்களாகவே வாங்கியது என்று இப்போது 12 ஆம்புலன்ஸ்கள் இருக்கிறது.
ஆறு ஆம்புலன்ஸ்கள் பரபரப்பான தெருக்களிலும் ஆறு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வீட்டிலும் நிறுத்திவைத்துள்ளனர் பதினாறு பேர்களை டிரைவர்களாக வைத்துள்ளனர் டிரைவர்கள் கூடுதலாக இருக்கக்காரணம் டிரைவர் இல்லை என்ற காரணத்தால் ஆம்புலன்ஸ் ஒடாமல் இருக்கக்கூடாது என்பதினால்.
இதில் இன்னோரு தகவலும் உண்டு திருமதி காலியா கேன்சரில் இருந்து மீண்டவர் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு.உடம்பை முழுமையாக மூடிய பிபிஇ கிட்,முக கவசம், என்று எப்போதும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆளுக்கொரு திசையில் பறந்து கொண்டு இருக்கும் அப்பா அம்மாவை இந்த குழந்தைகள் இயல்பாக பார்த்தே பல நாட்களாகிவிட்டன.
இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் என்று காலியாவிற்கும் மனிதநேயமிக்க டிரைவர் என்று ஹிமான்ஷ்க்கும் பல விருதுகள் வழங்கப்பட்டு இருந்தாலும், குணமநை்த நோயாளி சரியான நேரத்தில் என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்த அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை பார்க்கணும் என்று சொல்லி நேரில் வரவழைத்து கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவிப்பார்கள் அதற்கு முன் எந்த விருதும் இரண்டாம் பட்சம்தான் என்று சொல்லும் இந்த தம்பதிகளை எவ்வளவு போற்றினாலும் தகும்.
-எல்.முருகராஜ்.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • karutthu - nainital,இந்தியா

    இவர்கள் சேவையை சிறப்பித்து இவர்களுக்கு பாரத் ரத்னா பட்டம் வழங்கலாம்

  • vijay - coimbatore,இந்தியா

    நன்றி கடவுள்களே

  • S.K. Praba - Madurai,இந்தியா

    உங்கள் இருவருக்கும் வீர வணக்கம் செலுத்துவதில் ஒரு பெருமை இருக்கு. மரணம் கூட உங்களின் இந்த சேவையால் தோற்றுத்தான் போகும். வாழ்க வளர்க. இந்தியன் என்பதில் பெருமிதம் கோள்வோம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement