dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,

Share

தி.மு.க.,வின் ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை பற்றி அப்படியென்ன தப்பா சொல்லிட்டாரு. ஒரு பேச்சுக்கு வாயில வந்துருக்கும். இதப்போய் பெரிசு பண்றீங்க என சப்பை கட்டும் தொண்டர்களுக்கு தி.மு.க.,வின் ஆபாச வரலாறு மறந்து போயிருக்கலாம்.

இதை புள்ளிவிவரத்தோட புரியவச்சா நல்லாயிருக்கும். ஈ.வெ.ராமசாமியோட அண்ணாதுரைக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்ணாதுரை புதுசா தி.மு.க.,வை துவங்கினார். உடனே இவருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருக்குனு கிசுகிசு உருவானது. அதுக்கு அண்ணாதுரை சொன்ன பதில் தான் ஷாக். 'நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல, அவள் படிதாண்டா பத்தினியுமல்ல' னு பஞ்ச் டயலாக் சொன்னார். அப்பவே இது பெரும் பிரச்னையா வெடிச்சது.

எமர்ஜென்சி நிலை அறிவிச்சப்போ அப்போதைய பிரதமர் இந்திரா, தி.மு.க., ஆட்சியை கலைச்சார். அப்போ முதல்வரா இருந்தவர் கருணாநிதி. அடுத்து 1979ல் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பங்கேற்றார். ஆட்சியை கலைத்த இந்திராவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டிய தி.மு.க.,வின் ரத்தத்தின் ரத்தங்கள் இந்திரா மீது கற்களை வீசினர். நெற்றியில் காயம்பட்டு ரத்தம் வந்த நேரத்தில் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா. 'அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும், அதனால் வந்த ரத்தம் போலிருக்கிறது' என தரம் தாழ்ந்து பேசினார்.

இவர் வீட்டுப் பெண்களுக்கு நெற்றியில் தான் மாதவிலக்கு வருமோ என அன்றைய கால கட்டத்தில் பெண்கள் கொதித்து பேசினர்.தாமரையிலையில் தண்ணீர் மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது காங்கிரஸ், தி.மு.க., உறவு. பிரதமர் இந்திராவையே தரம்கெட்டு விமர்சித்த கருணாநிதி, எம்.எல்.ஏ.,க்களை சும்மா விடுவாரா. சட்டசபையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அனந்தநாயகி ஒரு கேள்வி கேட்கிறார். 'எங்கே இருக்கிறது திராவிட நாடு' என்று. அதுக்கு ஒரு முதல்வராக கருணாநிதி சொன்ன பதில், அநாகரிக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய அளவுக்கு மோசமாக இருந்தது. 'நாடாவை அவிழ்த்து, பாவாடை துாக்கினால் திராவிட நாடு தெரியும்' என்றார். இது பெரிய பிரச்னை ஆனது.

இவர் தான் நாக்கால் நாலுவிதமாக பொய் சொல்கிறவராச்சே. 'நாடாவால் கட்டி வைக்கப் பட்டுள்ள நுாலை அவிழ்த்து, பக்கங்களை புரட்டிப் பார்த்தால் திராவிட நாடு தெரியும்' என்று சொல்லி சமாளித்தார்.கருணாநிதி எட்டடி ஆபாசமாக பேசினாரென்றால் மகன் ஸ்டாலினும் பேரன் உதயநிதியும் 16 அடி பாய்கின்றனர். முதல்வர் பழனிசாமியை 'சசிகலாவின் காலுக்கடியில் ஊர்ந்து பதவியை பிடித்தவர்' என ஆபாசமாக விமர்சித்தனர்.

தி.மு.க., கழக பேச்சாளர் வெற்றி கொண்டான், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை, 'இனி குழந்தை பெறுவது சாத்தியமா?, அவருக்கு பல பாஷை தெரியும். ஏனெனில் தொழில் அப்படி' என விமர்சித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்களின் இடுப்பை ஆபாசமாக விமர்சித்தார். தி.மு.க., ஆதரவாளர் வைரமுத்து ஆண்டாளை இழிவாக பேசினார். கூட்டு சேர்ந்து கூட்டணி வைத்த திருமாவளவனும் 'இந்து பெண்களை விபச்சாரி' என்றார்.

கள்ள உறவில் பிறந்தவர் முதல்வர் பழனிசாமி என முதல்வரின் அம்மாவை சமீபத்தில் இழிவுபடுத்தி பேசினார் ஆ.ராசா. வெட்கம்கெட்டு பேசிவிட்டு மன்னிப்பும் தெரிவித்தது தான் கொடுமை. தி.மு.க.,வில் இருப்பவர்களும் அதனோடு கூட்டணியில் இருப்பவர்களும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது தொடர்கதையாகி வருகிறது.

விண்வெளிக்கு சென்று வியத்தகு சாதனைகள் செய்யும் பெண்களை இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவர்கள் இழிவுபடுத்தி பேசுவர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா எனவும் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.-- - நல்லவன்

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement