dinamalar telegram
Advertisement

இளமையின் அடையாளம் ஹோலி

Share

இளைஞர்கள் விருப்பமாகக் கொண்டாடும் ஹோலி பண்டிகையை கொரோனா காரணமாக விட்டுத்தர விரும்பவில்லை என்பதையே இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை கொண்டாட்டம் விளக்கியது.ஒருவர் மீது ஓருவர் வண்ணப் பொடிகளை வாரியிறைத்து பூசியும்,வண்ண நீரைபீய்ச்சி அடித்தும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தம், தமிழகத்திலும் வடமாநிலத்தவர் வாழும் பகுதிகளில் குறைவில்லா மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையின் போது ஒருவரை ஒருவர் தொடுவது தவிர்க்கமுடியாது என்பதால் பல இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.தடை விதிக்கப்படாத பகுதிகளில் வழக்கம் போல வண்ணம் பூசி மகிழ்ந்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோல்கட்டா சுகாதார பணியாளர்கள் உடுத்தியிருந்த பிபி கிட் எனப்படும் கவச உடையை தளர்த்தி தங்கள் மீது வண்ணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர பூசிக்கொண்டனர்.முககவசத்தை கழட்டாமலே தங்கள் குழந்தைகள் முகங்களில் வண்ணத்தை பூசி ஜெய்ப்பூர் தாய்மார்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டில்லி நடைபாதைவாசிகள் தங்களுக்கு குடியிருக்கு வீடுதான் இல்லை ஆனால் ஹோலி கொண்டாட மனதில் நிறைய இடமிருக்கிறது என்று சொல்லும் விதத்தில் தங்களுக்குள் வண்ணம் பூசி மகிழ்ந்தனர்.இப்படி பல ஊர்களில் பல இடங்களில் பலர் வழக்கம் போல ஹோலி பண்டிகையை கொண்டாடினர் அதிலும் குறிப்பாக இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.இவர்களது இந்த நியாயமான கொண்டாட்டத்தைப் பார்த்து கொரோனா ஒதுங்கியிருக்கும் என்றே எண்ணலாம்.
-எல்.முருகராஜ்.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement