dinamalar telegram
Advertisement

ரெயின் டிராப்ஸின் மகளிர் தின கொண்டாட்டம்

Share

'ரெயின்டிராப்ஸ்' சமூக அமைப்பின் சார்பில் ,பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் நடைபெற்றதுரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். குழந்தைகளுக்கு இலவச கல்வி, ஊக்கத்தொகை, சாதனைப் பெண்கள் விருது, சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ரீச் தீ பீச் திட்டம், போன்றவைகளை நடத்திவருகிறது.ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக, ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.இந்த அமைப்பு எட்டாவது முறையாக நடத்திய மகளிர் தின விழாவில்,வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல், சிறந்த நடிகைக்கான விருதினை ஊர்வசி, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை இந்திய கூடைப்பந்து மகளிர் அணி கேப்டன் அனிதா பால்துரை, நம்பிக்கைக்கான விருதினை சென்னை உயர்நீதிமன்ற முதல் பார்வை சவால் கொண்ட வழக்கறிஞர் கற்பகம், சிறந்த இயற்கை விசாயிக்கான விருதினை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரிமளா தேவி, வீரத்திற்கான விருதினை சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரெம்யா ஸ்ரீகாந்தன், கருணைக்கான விருதினை டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன், இளம் விஞ்ஞானிக்கான விருதினை திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர், இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் ஜோதிமணி கௌதமன், தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலனஸ் ஒட்டுனர் வீரலட்சுமி, இடுகாடுகளில் வெட்டியாள் வேலை செய்யும் கோவை வைரமணி, வீணை இசை கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டவர்கள் 'சாதனை பெண்கள் விருதுகளை' பெற்றனர்.
ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்துக் கூறுகையில், சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளார்களை அடையாளம் கண்டு நாங்கள் விருது வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவையாற்றிய பெண் முன்கள பணியாளர்களையும் இவ்விழாவில் கௌரவித்ததில் பெருமை அளிக்கிறது என்றார். விழாவிற்குள் நுழைந்தவர்களை மிரள வைத்தவர்கள் பவுன்சர்கள் எனப்படும் பாடிகார்டுகள்தான் கரணை கரணையான கைகளுடன் சபாரி உடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தது யாரைக்காப்பாற்ற என்பது தெரியவில்லை.சாதனை பெற்ற பெண்கள் தங்களின் இந்த பெருமைக்கு காரணமாக கணவர்களை குறிப்பிட்ட போது அரங்கில் விசில் சப்தம் காதைப்பிளந்தது. குறித்த நேரத்தில் ஆரம்பிக்காததால் விழா முடிவிற்குள் வாரமல் இழுத்துக் கொண்டே போனதாலும் அரங்கின் குளிர்காரணமாகவும் வாழ்நாள் சாதனை விருது பெற வந்தவர்கள் நான்கைந்து முறை ‛பாத்ரூம்' பக்கம் போய்வந்து கொண்டு இருந்தார்கள்.இப்படி சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பலரும் மனதார பாராட்டும்படியாக விழா இருந்தது.
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement