dinamalar telegram
Advertisement

விடைபெறும் முன் பார்த்துவிடுவோம் நம் விருந்தாளிகளை...

Share

பிப்ரவரி மாதம் முடியும் பொது பெரும்பாலும் இப்போது நிலவும் இந்த இதமான குளிரும் விடைபெற்றுவிடுவது சென்னையில் இயல்புதான்.அதன் பிறகு சூடு அதிக சூடு மிக அதிக சூடுதான், தகிப்பால் தவித்துப் போய்விடுவோம்.எப்படியிருந்தாலும் இந்த சூழலில் நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் ஆனால் பறவைகளுக்கு அப்படியொரு கட்டாயமில்லை அவைகள் தலைமுறைகளுக்கு சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை அதனால் சந்தோஷத்திற்கு குறைவில்லை உலகமே அவைகளுக்கு சொந்தம்தான் வானம்தான் எல்லை. எங்கே தனக்கான இதமான சூழ்நிலைகள் இருக்கிறதோ அங்கே சென்றுவிடும் கடந்த நான்கு மாதமாக கொரோனா காரணமாக அடக்கி வாசித்து அமைதியாக இருந்த சென்னையில் அதிலும் பெரும்பாக்கம் ஏரியில் நிறைய பறவைகள் வந்து முகாமிட்டு இருந்தன.பெரும்பாக்கம் ஏரியானது மேடவாக்கம்,வேங்கவாசல் வழியாக சென்றால் அடையலாம், உத்தேசமாக அண்ணா சாலையில் இருந்து 22 கிலோமீட்டர் துாரம்.ஏரியில் நீர் தெரியாத அளவிற்கு குழுமியிருக்கும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது அவைகள் குழுக்களாக கிளம்பி வருகின்றன.அதிகம் போனால் இன்னும் பத்து பதினைந்து நாட்களுக்கு இவைகள் இருக்கும் என்று தோன்றுகிறது.இங்குள்ள நீர்ப்பறவை இனங்களில் மடையான்,கூழைக்கடா,நாமக்கோழி,தாழைக்கோழி,தட்டை வாயன்,சாம்பல் நாரை,வெள்ளை அரிவாள் மூக்கன்,முக்குளிப்பான்,புள்ளி மூக்கு வாத்து,கதிர் குருவி ஆகியவை முக்கியமானவை.நேரமிருந்தால் குழந்தைகளோடு சென்று வாருங்கள் நமது விருந்தாளிகளுக்கு விடை கொடுத்து வாருங்கள்
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement