dinamalar telegram
Advertisement

பூலாம்வலசு சேவல் சண்டை.

Share


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமம் சேவல் சண்டைக்கு பெயர் பெற்றதாகும்.சேவலின் காலில் கட்டப்படும் கத்தி குத்தியதில் இளஞைர்கள் இரண்டு பேர் இறந்ததை அடுத்து ஐந்து ஆண்டுகள் இங்கு சேவல் சண்டை நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டதை அடுத்து சேவல் சண்டை களை கட்டியது.தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சேவல் சண்டையைக் காணவும் பந்தயம் கட்டி விளையாடவும் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர்.சேவல் வளர்ப்போர் தமது சேவலுக்குரிய சரியான ஜோடியுடன்தான் சண்டையிட சம்மதிப்பார்.
இப்படி இரு தரப்பிலும் சம்மதம் கிடைத்ததும் காலில் கத்தி கட்டப்படும் கத்தி என்றால் சாதாரணமான கத்தி அல்ல அவ்வளவு கூர்ப்பாக இருக்கும் இதை சேவல் காலில் கவனமாக கட்டவேண்டும் இல்லாவிட்டால் கட்டியவரையே கத்தி பதம் பார்த்துவிடும்.சேவல் காலில் கத்தி கட்டப்பட்டதும் மைதானத்தில் இறக்கிவிடப்படும்.கொண்டையை சிலிப்பியபடி சேவல்கள் ஒன்றை ஒன்று வீழ்த்த படு ஆக்ரோசமாக சண்டையிடும் ,தனது காலில் உள்ள கத்தியை எதிரியின் உடம்பில் பாய்ச்ச முற்படும்.இந்த சண்டை அநேகமாக ஒன்று இரண்டு நிமிடங்களிலோ அல்லது ஒன்றிரண்டு மோதல்களிலோ ‛முடிவுக்கு' வந்துவிடும்.ஆம் முடிவிற்கே வந்துவிடும் ஏதாவது ஒரு சேவல் சண்டையில் கத்தி பாய்ந்து இறந்துவிடும்.வெற்றி பெற்ற சேவலுக்கு உரியவர் தோற்ற சேவலையும் பந்தயப்பணத்தையும் பெற்றுக் கொண்டு பெருமிதமாக வீடு திரும்புவார்.
இது போல மைதானத்தில் அடுத்தடுத்து சேவல் சண்டைகள் அரங்கேறியபடி இருக்கும்.சேவலுக்கு உரியவர்கள் மட்டுமின்றி வேடிக்கை பார்ப்பவர்களும் எந்த சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டி பணப்பரிமாற்றம் செய்து கொள்வர்.
பந்தயத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த சேவலின் மதிப்பு பல ஆயிரத்திற்கு ஏறிவிடும் தோற்றுவிட்டால் குழம்புதான்.
எப்படி ஜல்லிக்கட்டு காளையை தயார் செய்கிறார்களோ அதே போல இந்த வட்டாரத்தில் சேவலையும் சண்டைக்கு தயார் செய்கின்றனர்.
போட்டியின் போது சேவல்கள் உஷராக இருக்கிறதோ இல்லையோ? பார்வையாளர்கள் உஷராக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் கத்தி பாய்ந்துவிடும்.
படம்,தகவல்:சுரேஷ் கண்ணன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    முதலில் இந்த சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும் அரசாங்கமோ அல்லது நீதிமன்றங்களோ விரைவில் முடிவெடுக்கவேண்டும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement