dinamalar telegram
Advertisement

பாம்பை வேட்டையாடும் கழுகு

Share

சென்னையில் உள்ள பழமையான போட்டோகிராபி அமைப்புகளில் மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியும் ஒன்றாகும்.டாக்டர் ஏ.அழகானந்தம் தலைமையிலான இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் எடுக்கும் படங்கள் மாதந்தோறும் அண்ணாநகர் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் திரையிடப்பட்டு விளக்கம் தரப்படும்.புகைப்பட ஆர்வலர்களுக்கும் கற்றுக் கொள்பவர்களுக்கும் பெரிதும் பயன்படும் இந்த அமைப்பின் மாதந்திர கூட்டம் நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கம் போல நடைபெற்றது.ஒவ்வொரு உறுப்பினர்களின் படங்களாக பார்த்துக் கொண்டிருந்த போது தினேஷ் முனுசாமி என்பவர் எடுத்த ஒரு படம் மிரளவைத்தது.ஒரு கழுகு, பாம்பை உணவாக்கி விழுங்கிக் கொண்டிருந்த படம்தான் அது.சோழிங்கநல்லுார் பகுதியை ஒட்டி இவரது வீடு இருப்பதால் அந்தப் பகுதியில் வரும் பல்வேறு நாட்டு பறவைகளின் அழகில் மனதை பறிகொடுத்து அவற்றை படம் எடுக்க ஆரம்பித்தார்.இதற்காகவே நிறைய செலவு செய்து புகைப்படக்கருவிகளை பெற்றார், அதைவிட நிறைய நேரம் செலவழித்து புகைப்படக்கலையை கற்றார். எடுத்த படங்களுக்கு பாராட்டுகள் வரவே தான் படம் எடுக்கும் எல்லையை விரிவு படுத்திக் கொண்டே சென்றார், தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களுக்கும் பறவைகளை படம் எடுக்க சென்றுள்ளார்.கழுகுகளில் நிறைய வகைகள் உண்டு அவைகளில் பெரும்பாலானவை காடுகளிலேயே தனது உணவை தேடிக்கொள்ளும்.காடுகளில் உணவு கிடைக்காவிட்டால்தான் காடுகளை விட்டு வெளியே வரும்இந்த சூழலில் சென்னையில் இருந்து வேலுார் போகும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் ‛ஒணான் தின்னும் கழுகு' இருப்பதாக தகவல் கிடைத்தது பெயர்தான் ஒணான் தின்னும் கழுகே தவிர இதன் விருப்பமான உணவு பாம்புதான். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தரையில் ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்துவிட்டால் மிக லாவகமாக பறந்து வந்து அதனை கொத்தி தின்றுவிடும்.சிறிய பாம்பாக இருந்தால் கொத்தி எடுத்துக் கொண்டு சென்றுவிடும் பெரிய பாம்பாக இருந்தால் முதலில் அதனை ஒடவிடாமல் கண்களை கொத்தி தடுமாறவைக்கும் தொடர்ந்து தலைப்பகுதியை சேதப்படுத்தி கொன்று விடும் பின் தலைப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவிடும்.தண்ணீர் பாம்பில் இருந்து நல்லபாம்பு வரை எந்த பாம்பாக இருந்தாலும் இது குறிவைத்துவிட்டால் கதை முடிந்தது என்றே சொல்லலாம்.
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பர் ஆனால் எப்பேர்பட்ட பாம்பாக இருந்தாலும் இந்தக் வகை கழுகைக் கண்டால் நடுநடுங்கி ஒடிஒளியவே முற்படும் ஆனால் அதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவே. கழுகு துாக்கிச் செல்லும் போது பாம்புகள் சில நேரம் உயிருடன் இருக்கும், உயிர்தப்ப மிக உக்கிரமாக போராடும், அந்தப் போராட்டத்தில் பிடிநழுவி போட்டோகிராபர் மீது விழுந்தால் விடுபட்ட வேகத்தையும் கழுகு மீதான கோபத்தையும் போட்டோகிராபர் மீது காட்டிவிடும் அதாவது உக்கிரமாக கொத்தும்.
இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் காவேரிப்பாக்கத்தில் உலாவரும் கழுகை படமெடுக்க சென்றேன்.நமது கண்களுக்கு கழுகு தெரியுமே தவிர பாம்பு இருப்பது தெரியாது. அது கழுகுக்கு மட்டுமே தெரியும் ஆகவே கழுகு எங்கெல்லாம் வட்டமிடுகிறது என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் பெரும்பாலும் புதர்ப்பகுதியாக இருப்பதால் கழுகின் பாம்பு வேட்டையை படமாக்குவது சிரமமாகவே இருந்தது.
ஆனால் இந்த இடத்தில் கழுகு பாம்பை வேட்டையாடப்பபோவது உறுதியாகிவிட்டதால் அடுத்து அடுத்து இந்த இடத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்றேன் படம் சரியாக கிடைக்கவில்லை இப்படியாக ஒரு வருட பயணத்திற்கு பின் கடந்த சில நாட்களுக்கு முன்தான் நான் எதிர்பார்த்தபடி படம் கிடைத்தது.
ஒரு காலை வேளையில் வானில் நீண்ட நேரம் இடம் மாறி மாறி பறந்து கொண்டிருந்த கழுகு திடீரென ஒரே இடத்தில் வட்டமடித்தது நான் அந்த இடத்திற்கு விரைவதற்கும் கழுகு வானில் இருந்து பாய்ந்து வந்து பாம்பை கபளீகரம் செய்வதற்கும் சரியாக இருந்தது. கொஞ்சம் பெரிய சைஸிலான விஷமுள்ள சாரைப்பாம்பு , கழுகிடம் இருந்து உயிர்தப்ப ஆனமட்டும் போராடிப் பார்த்து தோற்றது.கடைசியில் கழுகு பாம்பை விழுங்கி முடித்தது, எனக்கும் நல்ல படங்கள் கிடைத்தது என்ற சொன்னு தினேஷ் முனுசாமியுடன் பேசுவதற்கான எண்:97106 85094.
-எல்.முருகராஜ்.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

    சூப்பர் ஹாபி.....த்ரில்லிங்காகவும் உள்ளது

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அருமையான கடுமையான உழைப்பு .விருதுகள் பல கிடைக்க வாழ்த்துக்கள் அய்யா .

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement