Load Image
Advertisement

உங்களை நாங்கள் நம்ப வேண்டுமா ஸ்டாலின்

'பா.ஜ. - ஆர்.எஸ்.எஸ். - இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு தி.மு.க. ஏதோ ஹிந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கின்றனர்; அது உண்மை அல்ல. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய துணைவியார் போகாத கோவிலே கிடையாது. தி.மு.க.வில் இருக்கக்கூடிய பல மாவட்டச் செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பர். அந்த பக்தியை நாங்கள் குறை சொல்ல தயாரில்லை; அது அவர்களின் விருப்பம். ஹிந்து விரோதி என திட்டமிட்டு சதி செய்து தி.மு.க. மீது பழி சுமத்திக் கொண்டு இருக்கின்றனர்...'இது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சென்னை திருவள்ளூரில் நடந்த பொங்கல் விழாவில் பேசியது.

அதாவது ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க.வினர் குறிப்பாக தலைவர்கள் இதுவரை எதுவுமே பேசியதில்லை; செயல்பட்டதில்லை என்பதைப் போலவும் சிலர் வேண்டுமென்றே தங்களுக்கு எதிராக சதி செய்வதாகவும் பொரிந்து தள்ளியிருக்கிறார் ஸ்டாலின்.கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பார்த்தோமானால் கருணாநிதி முதல் உதயநிதி வரை 'கடவுள் மறுப்பு' எனும் பெயரால் எப்படியெல்லாம் ஹிந்து விரோத கருத்துக்களை வன்மத்தை பரப்பினர் என்பதை இப்போதும் கூட சமூக ஊடகங்களில் குறிப்பாக 'யூ டியூப்'பில் காணலாம்.

நெற்றியில் என்ன ரத்தமாஒரு முறை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் தி.மு.க. - எம்.பி. ஆதிசங்கரின் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வியர்வையில் நனைத்து வழிந்தோடியது. இதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத கருணாநிதி அவரை பார்த்து 'நெற்றியில் என்ன அடிபட்டு விட்டதா?

ரத்தம் வருகிறதே...' என கேலியும் கிண்டலும் பேசினார்.

காட்டுமிராண்டித்தனம்கடந்த 1997ல் தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தீ மிதித்த படம் ஊடகங்களில் வெளியானது. இதையறிந்த கருணாநிதி திருமண விழா ஒன்றில் பேசும் போது 'தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம்' என்றார்.

ராமர் இன்ஜினியராராமர் பாலம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது 'டைம்ஸ் நவ்' ஆங்கில செய்தித் தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி 'ராமர் என்றொருவர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியரிங் படித்ததாகவோ அவர் ஒரு பிரிஜ் கட்டியதாகவோ சரித்திரம் இல்லை...' என்று கூறி பல கோடி ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் ராமரை அவமதித்தார்.அதற்கு முன் ஒரு முறை 'ஹிந்து என்றால் திருடன்' என்று வியாக்கியானமும் பேசி ஒட்டுமொத்த ஹிந்துக்களையே அநாகரிகமாக விமர்சித்தார் என்பது வேறுவிஷயம்.

முதலாம் ராஜ ராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் 216 அடி உயர கோபுரம் மீது 80 டன் எடையுள்ள கல் அந்தக் காலத்தில் மின் வசதியும் தொழில்நுட்பமும் இல்லாத சூழலில் மேலே ஏற்றி நிலை நிறுத்தப்பட்டு இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இவ்வளவு ஆண்டுகளாக மழை, வெயில், புயலுக்கு தாங்கும் அளவிற்கு இதை அந்தக் காலத்தில் எந்த இன்ஜினியர் கட்டினாரோ அதே இன்ஜினியர்தான் ராமர் பாலத்தையும் கட்டியிருப்பார் என்பது கருணாநிதி அறிந்திருக்கவில்லை என்பதுதான் பரிதாபம்.


'தந்தைக்கு நானும் சளைத்தவன் அல்ல' என்பது போல அவரது மகன் ஸ்டாலினும் தன் பங்கிற்கு ஹிந்துக்களுக்கு எதிராக விஷ வார்த்தைகளை கக்குவதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்.

திருநீறு அழிப்புஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது தன் நெற்றியில் இடப்பட்ட திருநீற்றை மறுவிநாடியே அழித்துக் கொண்டார் ஸ்டாலின். அதுமட்டுமின்றி தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற இவர் அங்கு தனது நெற்றியில் திருநீறு பூச மறுத்து கையிலிருந்ததை உதறி அவமதித்தார்.

ஹிந்து திருமணம் கேவலம்ஒரு முறை இஸ்லாமியர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியிருந்தால் பரவாயில்லை. அதைவிடுத்து அந்த மேடையில் ஹிந்துக்களுக்கு எதிராக ஹிந்துக்களின் திருமண நிகழ்வு முறையைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி தனது இந்து விரோத வக்கிரத்தை வெளிக்காட்டினார்.

ஸ்டாலினின் அந்த பேச்சு…''ஹிந்துக்களின் திருமணத்தின்போது மணமேடையில் மணமக்களுக்கு பக்கத்தில் புரோகிதர் அமர்ந்து திருமணத்தை நடத்தி வைப்பார். மணமக்கள் இடையே நெருப்பை மூட்டி புகை மண்டலத்தை கிளப்புவார். மணமக்கள் கண்ணீர் சிந்துவர். வந்திருப்போரும் கண்ணீர் சிந்த… அங்கு சோகச் சூழ்நிலை உருவாகும். புரோகிதர் ஓதும் மந்திரத்தின் உள் அர்த்தம் தெரிந்தால்… நம் உடம்பெல்லாம் நடுங்கும்; அந்த அளவிற்கு மிக கேவலமான மந்திரம் அது...''
இவ்வாறு வன்மம் நிறைந்த வார்த்தைகளை அள்ளிக்கொட்டிய ஸ்டாலின்தான் 'தி.மு.க. ஹிந்துக்களுக்கு விரோதி அல்ல…' என முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்.திருமண மந்திரங்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன.


சமஸ்கிருதம் தமக்கும் தெரியுமென ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா அதன் உள் அர்த்தம் தெரிந்து தான் பேசினாரா அல்லது வேறு ஒருவர் தெரிவித்ததை நம்பி பேசினாரா என தெரியவில்லை.

தங்கை கனிமொழியும் ஸ்டாலினுக்கு சளைத்தவர் அல்ல. திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி'திருப்பதி கோவில் உண்டியலுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு எதற்கு? உண்டியலைக்கூட கடவுளால் பாதுகாக்க முடியாதா?' என ஏளனம் செய்தார்.

உதயநிதியும் விதிவிலக்கல்லகடந்த விநாயகர் சதுர்த்தியின்போது ஸ்டாலின் மகன் உதயநிதி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் விநாயகர் சிலையை மார்போடு அணைத்திருப்பதைப் போன்ற போட்டோவை பதிவிட்டிருந்தார். பெரும்பான்மையான தி.மு.க.வினர் மத்தியில் வரவேற்பையும் சிலர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏ ற்படுத்தியிருந்த இந்த பதிவு அவசர அவசரமாக நீக்கப்பட்டது.

அடுத்த டுவிட்டர் பதிவில் 'எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. டுவிட்டரில் வெளியிட்டது 'என் அம்மாவின் விநாயகர் சிலை' என குறிப்பிட்டு 'ஜகா' வாங்கினார் உதயநிதி.இவ்வாறெல்லாம் செய்தவர்கள் தான் இன்று தேர்தலுக்காக தி.மு.க. ஹிந்து விரோதி அல்ல… என்று பசு தோல் போர்த்திய புலியாக நடிக்கத் துவங்கியிருக்கின்றனர்.


ஹிந்து என்றால் இவர்களுக்கு கசக்கும்; ஹிந்துக்களின் ஓட்டு மட்டும் இனிக்கும்?ஏறத்தாழ 50 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் தீபாவளி பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி என எந்த ஒரு ஹிந்துக்களின் பண்டிகைக்கும் ஹிந்துக்களுக்கு வாழ்த்துக் கூறியதாக வரலாறு உண்டா?

இவர்களின் நிழலில் ஒட்டிப் பிழைக்கும் பிரசன்னாவோ சுப வீரபாண்டியனோ கறுப்பர் கூட்ட கோஷ்டிகளோ ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசிய பேச்சுக்களை ஸ்டாலின் இதுவரை கண்டித்தது உண்டா… தடுத்தது உண்டா?'சனாதன தர்மம் என்பதில் ஹிந்துக்களுக்கு சம்பந்தமில்லை; அது பிராமணர்கள் தொடர்புடையது' என்ற பேச்சினை ஒரு நாளும் ஸ்டாலின் கண்டித்ததில்லையே!இங்கு பிரச்னை துர்கா ஸ்டாலின் கோவிலுக்குச் செல்கிறாரா இல்லையா என்பதல்ல. தி.மு.க. ஹிந்து விரோத கட்சியா ஆதரவு கட்சியா என்பதுதான்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின் அண்ணாதுரை கூறிய 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதை சுட்டிக்காட்டித்தான் பேசினாரே தவிர ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக தி.மு.க. தலைவராக இருந்த அவரது தந்தை கருணாநிதி சொன்னதாக எதையும் மேற்கோள் காட்ட முடியவில்லை! இதிலிருந்தே கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி ஒரு சொல் கூட ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசியதில்லை என்பது தெளிவாகிறது. இது ஒன்றே போதும் மறைந்த கருணாநிதி முதல் தற்போதைய தலைவர் வரை இதுவரை ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசியதில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்த!

இவ்வளவு காலமாக வெறுப்பு காட்டி நீங்கள் திடீரென நேற்று கையில் வேல் ஏந்தியதன் பின்னணி என்ன... பயம் தானே?பிரசாந்த் கிஷோர் சொல்லி தான் நீங்கள் கேட்க வேண்டுமா? ஓகே... கேளுங்கள் தவறில்லை! கூடவே...

* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கீழ்கண்டவாறு செயல்படுவேன்; இல்லாவிடில் பதவியை ராஜினாமா செய்வேன்

*தீபாவளி கிருஷ்ணஜெயந்தி விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ஹிந்துக்களின் பண்டிகை எதுவாக இருப்பினும் வாழ்த்து தெரிவிப்பேன். இஸ்லாமியரின் ரம்ஜான், கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் 'கேக்' நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்று ஹிந்துக்களின் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்பேன்

* ஹிந்து பண்டிகைகளுக்கான வாழ்த்துக்களை கட்சி தொலைக்காட்சி நாளிதழ்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்

* விருப்பமுடைய தி.மு.க.வினர் நெற்றியில் விபூதி குங்குமம் இட்டுக் கொள்ளலாம்.

* ஹிந்து விரோத புத்தகங்களை குறிப்பாக கடவுள் மறுப்பு எனும் பெயரில் தி.க.வினர் வெளியிட்ட ஈ.வே.ரா. நுால்களை தடை செய்வேன்

* ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமல்ல மற்ற எந்த மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக யார் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்


* கோவில்களுக்கு முன் இந்து விரோத கட்சிகளால் நிறுவப்பட்டுள்ள ஈ.வே.ரா. சிலைகளை அகற்றி அரசு அலுவலக வளாகத்துக்கு மாற்றுவோம்

* முதல்வராக பதவியேற்க நேர்ந்தால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அ.தி.மு.க.வினரைப் போல 'இறைவன் மீது ஆணையிட்டு பகவத் கீதை குரான் பைபிள் மீது உறுதிமொழி ஏற்று பதவி ஏற்போம்

* ஹிந்துக்களுக்கு எதிராகவும் சனாதன தர்மம் குறித்து தவறாகவும் பேசுவோரின் பேச்சை பொதுக்கூட்டமாக இருப்பினும் சமூக ஊடகமாக இருப்பினும் தடை செய்வோம்- என அறிவிப்பீர்களா ஸ்டாலின்?

இவ்வாறு அறிவித்தால் 'ஹிந்துக்களுக்கு தி.மு.க. விரோதி அல்ல…' என்ற உங்கள் பேச்சை ஒருவேளை மக்கள் நம்பினாலும் நம்புவர். இல்லாவிடில் தி.மு.க.வுக்கு எதிராக சமூக ஊடகங்களில் முன் வைக்கப்படும் விமர்சனங்களையே நம்புவர்.- என்.டி.வாசன், திருக்குவளை நாகப்பட்டினம் மாவட்டம்.வாசகர் கருத்து (15)

 • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

  'தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம்' என்றார் கருப்பு கட்சிக்காரங்க தீ மிதிச்சாங்க ஆன்மிக பிஜேபி இந்துக்களும் தீ மிதிச்சாலென்ன?

 • Karthikeyan K Y - Chennai,இந்தியா

  சுடலையே சொல்லிட்டார், டேய் சுடலைக்கு ஒரு முதல் அமைச்சர் பதவி பார்சல் செய்ஞ்சுரு

 • E Mariappan -

  திமுக காரன் இவ்வளவு தூரம் கேவலப்படுத்திய பிறகும் கூட மக்கள் அவனுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்றால் இந்து மதத்திற்கு உரிமையாளராக நினைக்கும் ஒரு பிரிவினர் தன்னுடைய சொந்த மதத்தை சேர்ந்த மக்களை எவ்வளவு கேவலமாக நடத்தி இருப்பர் என்று யோசனை செய்து பாருங்கள். உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே இந்து மதத்திற்கு நல்லது

 • ஆரூர் ரங் -

  இந்து மந்திரங்களை கேட்டால்..என திருவாய் மலர்ந்த 😎சுடலை.. உமக்கு மாற்று மதப் புத்தகங்களிலுள்ள ஆபாச வாக்கியங்கள், பெண்ணுரிமைக்கு எதிராகவும் மேலும் குழந்தைத் திருமணம் பற்றியும் உள்ள வாசகங்களை அனுப்புகிறேன். விமர்சிக்கத் தயாரா ? வாக்குவங்கி ஒரே நிமிடத்தில் பணால்.

 • N S Sankaran - Chennai,இந்தியா

  திரு சோ சொன்னாற்போல் காவடியும் எடுப்பார்கள் ஓட்டுக்காக. அவர்கள் செய்வதை விட கேவலம், இன்னும் சொரணையே இல்லாமல் தி மு க வுக்கு ஒட்டு போடுவது தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement