dinamalar telegram
Advertisement

ஜல்லிக்கட்டும், புகைப்படக்கலைஞர்களின் அனுபவமும்...

Share


‛அந்த மாட்டு கொம்புக்கு நடுவில சிக்கிட்டு ஒருதன் சுத்துறான் பாரு சூப்பர் ஷாட்'‛அதவிட என்னை விட்டுருன்னு மண்ணுல படுத்து மாட்டை கையெடுத்து கும்பிடறான், மாடோ இவ்வளவுதானா உன் வீரம் என்று முறைத்து பார்க்குது எனக்கு அந்த படம் இன்னும் ஜோரு‛வாடி வாசல விட்டு வரும்போதே ஒரு காளை சும்மா ஒருத்தன கொம்புலு குத்தி பறக்கவிடுது பாரு அதுதான் எனக்கு பெஸ்ட்'இப்படி ஜல்லிக்கட்டு எனப்படும் மாடுபிடிக்கும் விளையாட்டு தொடர்பான படங்களை பத்திரிகையில் பார்த்துவிட்டு வாசகர்களும் மக்களும் பாராட்டுகின்றனர்ஆனால் இதற்காக பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் படும்பாடு பெரும்பாடு. மதுரையில் நடந்த அவனியாபுரம்,பாலமேடு,அலங்கநல்லுார் ஜல்லிக்கட்டுகளை படம்பிடித்த தினமலர் ஆர்.அருண்முருகனின் அனுபவம் இதோ
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் அவனியாபுரத்திற்கு எப்பபோதுமே வரவேற்பு அதிகம் இந்த வருடம் காங்.தலைவர் ராகுல் வருவதால் கடுமையான பாதுகாப்பு.ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தை சுற்றியுள்ள வீடுகளின் மொட்டை மாடியில் கூட மக்கள் நிற்கக்கூடாது என ஏகப்பட்ட கெடுபிடி.
அடையாள அட்டை வழங்கப்பட்ட பத்திரிகை போட்டோகிராபர்கள் மட்டும் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் ஜல்லிகட்டிற்கு முதல் நாள் இரவே சென்று இடம் பிடித்து உட்கார்ந்தனர்.
கிட்டத்தட்ட பதினாறு மணி நேரம் கழித்து மலை 4 மணிக்கு மேல்தான் கேலரியைவிட்டு இறங்க முடிந்தது.
தண்ணீர் குடித்தால் கூட சிறுநீர் கழிக்க அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவேண்டும் என்பதால் தண்ணீர் கூட பலர் குடிக்கவில்லை பிறகு எங்கே சாப்பிடுவது ,மைதானத்தின் எல்லா புழுதியையும் உடம்பில் வாங்கிக்கொண்டு வெளியே வந்த போது பத்து மாட்டுக்கு மேல் பிடித்தவர்கள் போல உருமாறிப்போனோம்.
மறுநாள் நடந்த பாலமேடு ஜல்லிகட்டும் இதே போலத்தான் என்ன கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நடுவில் கொஞ்சம் பிரேக் கிடைத்தது, பன்னும் டீயும் பசிக்கு பிரமாதமாய் ருசித்தது.
அலங்கநல்லுார் ஜல்லிக்கட்டு ஊரில் உள்ள அனைத்து விஜபிக்களும் வந்துவிட கேலரியில் பெரிய மல்லுக்கட்டே நடைபெற்றது.
இட நெருக்கடி காரணமாக உட்காரக்கூட இடமில்லை ஒரு மாதிரியாக உட்கார்ந்து கொண்டு அவ்வப்போது லென்ஸ்களை மாற்றிக் கொண்டு ஆக்சன் படங்களை மிஸ் பண்ணாமல் எடுப்பது என்பது ஒரு சவாலான விஷயமே.
சாவலை எதிர்கொள்வதிலும் வெற்றி கொள்வதிலும் தானே இருக்கிறது பத்திரிகை போட்டோகிராபர்கள் வேலையும் வாழ்க்கையும்...
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement