தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது.கொரோனா காரணமாக பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஜல்லிகட்டின் வழக்கமான உற்சாகத்தை குறைத்துவிடுவார்களோ?என்ற எண்ணத்திற்கு மாறாக வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் புதிய வீரர்கள் புதிய நிற பனியனுடன் களத்தில் இறங்கியதால் மாடுகளும் வீரர்களும் உற்சாகமாகவே களமாடினர்.
இந்த வீர விளையாட்டைக் காண டில்லியில் இருந்து ராகுல்காந்தி வந்திருந்ததுதான் ைஹலைட் விளையாட்டை ரசித்து பார்த்ததுடன் மாடு வளர்த்து போட்டிக்கு கொண்டு வந்த ஒரு பெண்ணுக்கு பரிசும் வழங்கி மகிழ்ந்தார்.
விளையாட்டில் யாரும் பலியாகவில்லை என்பது பெரிய ஆறுதல்.நம் பாரம்பரியத்தின் சிறப்பையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்ட அனைவருமே வாழ்த்துக்குரியவர்கள்.
படங்கள்:ஆர்.அருண்முருகன்,மதுரை.
-எல்.முருகராஜ்.
அசத்தலாய் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!