தமிழகத்தில் பெரும்பான்மையினராக இருந்தும் ஹிந்துக்களை அவமதிக்கும் செயலில் தி.க. - தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவில்லை.
ஹிந்துக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சி பா.ஜ. மட்டும் தான். இப்போது அக்கட்சியின் செயலை சிலர் விமர்சிக்கின்றனர். அதுக்கு என்ன காரணம் என்றால் ஹிந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான்.'பா.ஜ.வில் இருந்தால் தான் ஹிந்துவா? பா.ஜ.வின் செயல்களுக்கு பின்னணியில் இருப்பது ஆன்மிகம் அல்ல அரசியல்' என அரிய ரகசியத்தை கண்டுபிடித்தது போல சிலர் கத்துகின்றனர்.
அதாகப்பட்டது பாவப்பட்டஹிந்துக்களுக்கு எந்த கட்சியும் ஆதரவு கொடுக்கலாம். யாரும் வேண்டாம் எனச் சொல்லவில்லை.கேலி கிண்டல் அவமானம் என அனைத்தையும் சந்தித்து குட்ட குட்ட குனிந்திருந்த ஹிந்துக்கள் பா.ஜ. வந்த பின் தான் எங்களுக்காக ஒரு கட்சி இருக்கிறது என நினைக்கின்றனர். அதில் என்ன தவறு?'ஹிந்து மதத்தில் இருந்து இன்னும் நிறைய பேரை மதமாற்றம் செய்ய வேண்டும்; பயங்கரவாதிகளுக்கு துணை போக வேண்டும்' என பல திட்டங்கள் இன்னும் முழுமையடையாமல் இருக்கிறது... அதற்குள் ஹிந்துக்களுக்காக ஒரு கட்சி முன்வந்தால் அவர்களுக்கு பொறுக்குமா?மதம் சார்ந்த பண்டிகை அவரவர்களுக்கு முக்கியம். ஆனால் ஹிந்து பண்டிகை என்றால் மட்டும் திடீரென 'நடுநிலையாளர், சமூக ஆர்வலர், இயற்கை ஆர்வலர்' என பல்வேறு போர்வைகளில் பதுங்கியபடி பலர் குரல் எழுப்புகின்றனர்.
இவர்களின் கத்தல் அதிகரித்து ஹிந்து பண்டிகைக்கு மட்டும் அதிக கெடுபிடி போட ஆரம்பித்துவிட்டது அரசு.'காற்று மாசு, ஒலி மாசு' எனப் பேசி சுதந்திரமாக கொண்டாடிய தீபாவளியை இன்று இத்தனை மணிக்கு ஆரம்பித்து இத்தனை மணிக்கு முடிக்கவேண்டும் என்ற அளவுக்கு சட்டம் போட வைத்துவிட்டனர்.'விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எங்களது தெருவில் சாலையில் செல்ல வேண்டாம்.
இந்த ஊர்வலத்தால் மத மோதல் ஏற்படும்; மதநல்லிணக்கம் பாதிக்கும்' என அன்றைய தினத்தை ஏதோ கலவர நாள் போல பீதியை கிளப்புகின்றனர்.மத நல்லிணக்கம் பேணும் மற்ற மதத்தினர் ஹிந்து மக்களோடு 'மாமன், மச்சான்' என்ற உறவாடுவோர் விநாயகர் ஊர்வலத்தை மலர் துாவி அல்லவா வரவேற்க வேண்டும்.இத்தனை இடையூறுகளை கடந்து சென்றால் நீர்நிலையில் சிலையை கரைக்கவும் எதிர்ப்பு வழக்கு என பிரச்னை செய்கிறார்கள்.
உண்மையில் தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றனர். அவர்களை அடித்தால் கேள்வி கேட்பாரில்லை.நடுநிலையாளர் என்பவர் அனைத்து மதத்தையும் அல்லவா விமர்சிக்க வேண்டும். அவர்களின் நோக்கம் ஹிந்துக்களை மட்டும் தாக்குவது என்றால் அவர்கள் பிற மதத்தினரின் கையாளாகத் தான் இருக்க வேண்டும். ஹிந்து மதத்தை இழிவுப்படுத்துவதற்காக அவர்கள் பணம் பெற்று பிழைப்பு நடத்துகின்றனர்.
கந்த சஷ்டி கவசம் பாடல் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை எதிர்த்து ஒரு கண்டன குரல் கூட எழுப்பவில்லை. இதே நிகழ்வு பிற மத நுால்களை கிண்டல் செய்திருந்தால் இங்கே உள்ள அத்தனை அரசியல் வியாபாரிகளும் தெருவில் இறங்கி ரகளை நடத்தியிருப்பர்.எங்கள் கடவுள் முருகன் பற்றி பாடலை கிண்டல் செய்தோரை கைது செய்ய வலியுறுத்தியது பா.ஜ.வும், ஹிந்து முன்னணியும் தான். நாங்கள் அக்கட்சிகளின் பின் செல்லாமல் தி.க. அல்லது தி.மு.க. பின்னால் செல்ல வேண்டுமா?தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படும் என தடை கேட்கும் நடுநிலையாளர்கள் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்கும் போது எங்கே பதுங்கிக் கொள்கின்றனர்?
உலக சுகாதார அமைப்பு, காலநிலை கண்காணிப்பாளர்கள் காற்றின் தர ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் விரிவாக ஆராய்ச்சி செய்து பல்வேறு அறிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதாவது உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடு மற்றும் தேவாலங்களில் அன்று ஒரு நாளில் மட்டும் 300 கோடிக்கும் அதிகமான மெழுகுவர்த்திகள் எரிக்கப்படுகின்றன.ஒரு பட்டாசால் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு 0.4 கிராம் மட்டுமே. ஆனால் ஒரு மெழுகுவர்த்தி வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு அளவு 12 கிராம்.ஒரு பட்டாசு வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு போன்று 300 மடங்கு அதிகமான நச்சுவாயு மெழுகுவர்த்தியால் வெளியாகிறது. இந்த நடுநிலையாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தலையிட முடியுமா?பெரும்பான்மை ஹிந்துகளையும், அவர்கள் மதம் சார்த்த பண்டிகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம், காற்று மாசு, விரைய செலவு என்று மூளைச்சலவை செய்து அழித்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து ஹிந்துக்களை பாதுகாக்க பா.ஜ. போராடுகிறது. வேல் யாத்திரை நடத்தி நம் வழிபாடு, ஹிந்து மத பண்டிகை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பா.ஜ. அரசியல் செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதனால் ஹிந்துக்களான எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. எங்களின் உரிமை பறிபோகாமல் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பிற மதங்களுக்கு என அரசியல் கட்சி ஓட்டு வங்கி இருப்பதால் தான் அவர்களை தொடக் கூட அஞ்சுகின்றனர். ஹிந்துக்களுக்கு யாருமில்லை என்பதால் இதுநாள் வரை ஆட்டம் போட்டனர். வரும் தேர்தல் அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும்.- க.சுப்பு கோவை
இந்துக்களை மேடைப் பேச்சின்போதோ பட்டிமன்றத்திலோ அசிங்கப்படுத்துகின்ற போது அதிகம் கை தட்டுபவர்கள் இந்துக்களே. இதை முதலில் சரிசெய்ய வேண்டும். அதேநேரத்தில் பிற மத நண்பர்களையும் மதிக்கவேண்டும்.