நரம்புச் சிதைவு நோய் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியை பாதிக்கும். 'மல்டிபிள் ஸ்கெலெரோசிஸ்' எனப்படும் இந்த நோயால், சிந்தனை மற்றும் செயல் திறன்கள் மெல்ல மெல்ல பாதிப்பிற்கு உள்ளாகும்.
இந்த பாதிப்பு நாட்பட எந்த அளவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் விஞ்ஞானிகள் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர். நரம்புச் சிதைவு நோய் உள்ளோர், தங்கள் தொடுதிரை மொபைலில் தட்டச்சு செய்யும் வேகத்தையும், விதத்தையும் கண்காணித்தால், அவருக்கு, சிதைவின் தன்மையையும் அளவையும் கணக்கிட முடியும் என்று ஆம்ஸ்டர்டாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மொபைலில் தட்டச்சு செய்வது, மூளையின் பல பகுதிகளின் கூட்டு முயற்சியால் செய்யப்படும் சிக்கலான செயல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால்தான், இந்த செயலை கண்காணிப்பது, நரம்புச் சிதைவின் அளவை மதிப்பிட மிகவும் உதவுகிறது.
மூளை நலனை காட்டும் தட்டச்சு!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!