dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு?

Share

இந்தியாவில், முதல் கட்டமாக, கொரோனா தடுப்பு போராளிகள், மூன்று கோடி பேருக்கு, தடுப்பூசிகள் போடப்படும் என்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த, மூன்று கோடி பேரில், 70 லட்சம் பேர் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள். மேலும், 2 கோடி பேர் முன் கள சுகாதார பணியாளர்கள் என்று பூஷண் கூறினார்.
நம் நாட்டில் ஏற்கன வே, தடுப்பூசி போடும் பரவலான கட்டமைப்பு உள்ளது. அத்தோடு, 'கோவிட்- - 19' தடுப்பூசிக்கு தேவைப்படும் குளிர்பதன வசதி கொண்ட வாகன போக்குவரத்து, வைப்பகம் மற்றும் ஊசிபோடும் செவிலியர் போன்ற அமைப்பும் ஏற்கனவே நம் நாட்டில் உள்ளது. இவற்றை, 'டிஜிட்டல்' மேடை மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு சிறப்பு நிர்வாக கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது.
கோவிட் - 19 தடுப்பு மருந்து குப்பிகள், ஊசிகள் போன்றவற்றை போதிய அளவுக்கு இருப்பில் வைத்திருக்க, மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, இப்போதே தனியார் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு, தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆவன செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு பூஷண் தெரிவித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement