dinamalar telegram
Advertisement

கொரோனாவை அறவே ஒழிக்க முடியாதா?

Share

கொரோனா ஒழிப்புக்காக உருவாக்கப்படும் எந்த ஒரு தடுப்பூசியாலும், அந்த வைரசை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என, பிரிட்டன் அரசின் தலைமை விஞ்ஞான ஆலோசகரான சர் பேட்ரிக் வாலன்ஸ் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள், கோவிட்- 19 வைரஸ் பரவும் வேகத்தை மட்டுப்படுத்தினாலும், இந்த வைரஸ் பிற புளூ வைரஸ்களைப் போல, குறிப்பிட்ட பருவங்களில் வளைய வரும் தொற்றாக நீடிக்கவே செய்யும் என, வாலன்ஸ் மதிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, ஒரு திடமான தடுப்பூசியை உருவாக்க, பல கட்ட சோதனைகளும், குறைந்தது ஐந்து ஆண்டுகளுமாவது தேவை. ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டுக்குள் ஒரு நம்பகமான தடுப்பூசி உருவாக்கப்பட்டுவிடும் என்கிறார், வாலன்ஸ்.
இருந்தாலும், சின்னம்மையை அறவே ஒழித்துக்கட்ட ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டது போல, கொரோனாவை சுவடில்லாமல் அழிக்கும் தடுப்பூசி உருவாக வாய்ப்பில்லை என்று வாலன்ஸ் கருதுகிறார்.
இப்போது மழைக்காலம், குளிர்காலம் போன்றவற்றின்போது பரவி, பலரையும் வதைக்கும் பருவ கால தொற்றுக்களைப்போல, கொரோனா தொடர்ந்து தன் தலையைக் காட்டியபடியே இருக்கும் என்று வாலன்சைப் போலவே பல வல்லுனர்களும் கருதுவது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement