dinamalar telegram
Advertisement

கொரோனா மருந்து கண்டுபிடித்த அமெரிக்க இந்திய மாணவி!

Share

இந்திய வம்சாவளியை சேர்ந்த, பதின்வயது அமெரிக்க மாணவிக்கு, '3எம்' இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. கொரோனா தொற்று சிகிச்சைக்கு உதவும் ஒரு கண்டுபிடிப்புக்காக இந்த விருது தரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், 8வது படிக்கும் அனிகா செப்ரோலுவிற்கு இந்த விருதுடன், ரூ.18.4 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு புளூ நோயால் வெகுவாக பாதிக்கப்பட்டார் அனிகா. அப்போதே, புளூ நோயை உண்டாக்கும் கிருமியை தடுக்கும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என, தீர்மானித்தார். ஆனால், அவர் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குள், கோவிட் - 19 வைரஸ் தாக்குதல் உலகை உலுக்க தொடங்கியது.
எனவே, தன் ஆராய்ச்சியை கொரோனா வைரஸ் பக்கம் திருப்பினார் அனிகா. அவரது ஆராய்ச்சிக்கு 3எம் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வழிகாட்டினார். கடந்த சில மாதங்களாக அனிகா மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் விளைவாக, இவர் உருவாக்கிய ஒரு மூலக்கூறு, கொரோனா வைரசின் வெளி பகுதியில் உள்ள நீட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு, அந்த வைரசை செயல் இழக்கச் செய்யும் திறன் கொண்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (7)

  • Jay - SFO,யூ.எஸ்.ஏ

    ஆரியராய் இருப்பாரோ???

  • karthikeyan - male city,மாலத்தீவு

    மனமார்ந்த வாழ்த்துக்கள்... வழிகாட்டுதலும், அதற்குண்டான மூலதனமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் சாதிக்கலாம், இந்திய வம்சாவளி ஏன் இந்தியாவில் சாதிக்கமுடியவில்லை? இந்தியாவில்தான் யாரை, எங்கே, எப்போது கவிழ்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதால் யாரையும் முன்னேறவிட மாட்டார்கள்.

  • Govendha raja C - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    அருமை... இனிய வாழ்த்துக்கள்...

    • p.singaaravelan Velan - kanchipuram,இந்தியா

      weldone

  • Prabhagharan - Madurai,ஓமன்

    வாழ்த்துக்கள்

  • mjayaps - Coimbatore,இந்தியா

    சூப்பர்..

  • Gabriel Boss - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள் சகோதரி கீபிட் அப் .

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement