dinamalar telegram
Advertisement

கோவிட் தடுப்பூசிக்காக பல லட்சம் சுறாக்கள் கொல்லப்படுமா?

Share

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 2.5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாக, 'ஷார்க் அலைஸ்' என்ற சுறாக்கள் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்து உள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க, ஒவ்வொருவருக்கும், இரண்டு, 'டோஸ்' தடுப்பு மருந்துகளை போட வேண்டும் என, சில முன்னணி மருந்தாய்வு அமைப்புகள் தெரிவித்து உள்ளன.அப்படியெனில், 5 லட்சம் சுறாக்களுக்கு மேல் கொல்லப்படும் பேராபத்து உள்ளது.தடுப்பூசிகளின் வீரியத்தைக் கூட்டுவதற்காக, சில வகை சுறாக்களின் ஈரலிலிருந்து தயாரிக்கப்படும், 'ஸ்குவாலின்' என்ற பொருள், தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சுறா மீன்களில், குறிப்பாக இரண்டு ரக சுறாக்களில் இருந்தே ஸ்குவாலின் தயாரிக்கப்படுகிறது.அந்த இரண்டு ரகங்களுமே அழியக்கூடிய நிலையில் இருப்பவை. எனவே, திடீரென, கொரோனா தடுப்பூசிக்காக, பல லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டால், நிச்சயம் அந்த இரு இனங்களும் வழக்கொழிந்து போய்விடும்.இது கடல் உயிரியத்தில் பெரிய சமனின்மையை கொண்டு வந்துவிடும் என, ஷார்க் அலைஸ் அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
கரும்பிலிருந்தும் செயற்கையாக ஸ்குவாலினை தயாரிக்க முடியும். அதற்கான ஆய்வுகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும், சுறாக்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • AkbarAntony - Chennai,இந்தியா

    மனிதனை காப்பாற்ற மற்ற உயிர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம், தயவு செய்து மாற்று வழியை கண்டு பிடியுங்கள். இந்த கொரோனா நோய் மனிதனின் முந்தைய வினை பயன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இயற்கை அழிந்தால் மனிதனும் அழிவான் என்ற ஞாபகம் இருக்கட்டும், இந்த நடவடிக்கை மேலும் பல வினை பயன்களை கொண்டு வரும்.

  • palani - junrong,சிங்கப்பூர்

    முதல்ல மனிதனை காப்பாத்துங்கப்பா

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement