LOGIN
dinamalar telegram
Advertisement

தமிழ் நாளிதழ்களில், 'தினமலர்!'

Share

உலகில், முதன்முதலில் நாளிதழ் துவக்கியது, ஜெர்மனியின் ஜோகன் கார்லஸ் நகரில், 1605ம் ஆண்டில் தான். தமிழகத்தில் முதன்முறையாக, 1881ல், 'சுதேசமித்ரன்' என்ற தமிழ் பத்திரிக்கையை, ஜி.சுப்ரமணிய ஐயர் என்பவர் துவக்கினார். இவர், பச்சையப்பன் கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி, பத்திரிகை ஆர்வத்தால் நாளிதழை துவக்கினார்.

அதன் பின், நான்கு ஆண்டுகள் கழித்து, 'ஹிந்து' ஆங்கில நாளிதழை ஆரம்பித்து, நிர்வாக ஆசிரியராக, பல ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி, நற்பெயர் பெற்றார்.அந்தக் காலத்தில், சென்னையில் பிரபலமான, 'மதராஸ் மகாஜன சபா, மதராஸ் பிரசிடென்சி' என, இரு கம்பெனிகளை நடத்தியவர், ஜி. சுப்ரமணிய ஐயர். இவர் சமூக போராளி, சீர்திருத்தவாதி, முற்போக்குச் சிந்தனையாளர்.


இவர், 13 வயதில் விதவையான தன் மகளுக்கு, அந்தக் காலத்திலேயே மறுமணம் செய்து, பிராமணச் சமூகத்தின் எதிர்ப்பையும் பெற்று, மயிலாப்பூரில் தள்ளி வைக்கப்பட்டார்; தலித் மக்களுக்காகப் பாடுபட்டவர்.

பிரசாரத்திற்கு வலிமை'ஹிந்து' பத்திரிகை நடத்தும் போது, பல அறிஞர் பெருமக்களை கட்டுரையாளர்களாக சேர்த்துக் கொண்டார். 1905ல், கஸ்துாரி ரங்க ஐயங்கார், 'ஹிந்து' நாளிதழை வாங்கியிருந்தாலும், 'சுதேசமித்ரன்' பத்திரிகையை, 1915ல், ரங்கசாமி ஐயங்காருக்கு விற்று விட்டார், சுப்ரமணிய ஐயர். அதன் பின், வாரிசுகள், 1977 வரை நடத்தி வந்தனர்.பின், பிலிப் தாமஸ் என்ற காங்கிரசால் நடத்தப்பட்டது. பல அரசியல் காரணங்களால், ஆளும் கட்சியின் இடர்களால், இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளிதழை, சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆரம்பித்தார். இவரின் ஜனன பூமி, சேலம், ராசிபுரம்; புகழ் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி. காந்தியை ராசிபுரம் அழைத்து வந்தவர், வலிமை மிக்க தலைவர்; ராஜாஜியின் நண்பர். காங்கிரஸ் கட்சியினருக்கு, அப்போது, சென்னையில், ஜி.சுப்ரமணிய ஐயர் ஆதிக்கத்திலிருந்த சுதேசமித்ரன், ஹிந்து பத்திரிகை முக்கியத்துவம் தராததால், காங்கிரஸ் பிரசாரத்திற்கு வலிமை மிக்க பத்திரிகை வேண்டும் என்று, டாக்டர் நாயுடு, 'இந்தியன் எக்ஸ்பிரசை' ஆரம்பித்தார்.


மும்பையைச் சேர்ந்த சதானந்த் என்ற தமிழர், தமிழ் மீது கொண்ட பற்றால், 'இந்தியன் எக்ஸ்பிரசை' நாளிதழை விலைக்கு வாங்கினார். தமிழில் சுதந்திரப் போராட்டத்திற்கும், காங்கிரசுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பத்திரிகையைத் துவக்க ஆசைப்பட்டார். இந்தியன் எக்ஸ்பிரசில், ஒரு புதுமையான விளம்பரத்தில், தமிழில் தினசரி பத்திரிகையைத் துவக்க நல்ல பெயர் எழுதி அனுப்புமாறு, வாசகர்களுக்கு விளம்பரம் கொடுத்து, 10 ரூபாய் சன்மானம் அறிவித்தார்.

மயிலாப்பூரை சேர்ந்த அட்சய லிங்கம், சுவாமிநாதன் என்ற இருவர் தான், 'தினமணி' என்ற பெயரை எழுதிக் கொடுத்தனர்; இதற்காக, 10 ரூபாய் சன்மானம் பெற்றனர். அதன் பின், தினமணி நாளிதழ் வெளியானது.இந்தப் பத்திரிகையில் வாசகர்களின் கருத்துக்கள், கட்டுரைகள், ஆலோசனைகளை வெளியிட, வாசகர் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், பத்திரிகையை வசீகரிக்க, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பெண்களை வைத்து கதைகள், சுலோகம், ஆன்மிகம் பற்றி எழுத வைத்து, பெண்களிடம் பிரபலபடுத்தப்பட்டது.மேலும், உ.வே.சா., டி.எஸ்.சொக்கலிங்கம், வி.கல்யாண சுந்தரனார் போன்ற அறிஞர்களும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறாக, 'தினமணி' நாளிதழ் தமிழில் முதலிடம் பெற்றது.


அரசியல் கட்சிகளும், பத்திரிகைககளும்: தினசரி, வார இதழ்கள் என, பத்திரிகை வாசகர்கள் இல்லாமல், எந்த அரசியல் இயக்கமும் வளர்ந்து காலுான்ற முடியாது. அதற்கு சிறந்த உதாரணம், ஈரோடு ராமசாமி நாயக்கர். பழைய காங்கிரஸ்வாதி, பகுத்தறிவாளர், சுயமரியாதை, சீர்திருத்தவாதி என, பல முகம் கொண்டவர்.


இவர் பகுத்தறிவு, சுயமரியாதை என, வாரப் பத்திரிகைகளை துவக்கி, குத்துாசி குருசாமி, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், அரங்கண்ணல், கருணாநிதி போன்றோரை சம்பளம் கொடுத்து, வீட்டின் மேல் மாடியில் தங்க வைத்து எழுத வைத்தார். நாகம்மை இவர்களுக்கு தினமும் உணவு வழங்கினார். பின், ஊர் ஊராக பிரசாரம் மேற்கொண்டு, பத்திரிகை சந்தாதாரர்களை உயர்த்தினார். இப்படி, திராவிட இயக்கம் பத்திரிகை மூலம் தொண்டர்களிடம் கருத்துகளை கொண்டு சேர்த்தனர்.


காமராசர் தான் உயிரோடு இருக்கும் வரை, 'நவசக்தி' நாளிதழை நடத்தினார்; பின், அவர் மறைவிற்கு பின் விற்கப்பட்டது. இன்று வரை, மக்கள் மத்தியில், பா.ஜ, தமிழகத்தில் வளராததற்கு காரணம், இதுவே. அவர்களுக்கான பத்திரிகை இல்லை. அவர்களைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க, வசீகரமிக்க பேச்சாற்றல் கொண்ட தலைவர்கள் இல்லை.மேலும், தியாக மனப்பான்மை கொண்ட காமராஜர், ராஜாஜி, மோடி போன்ற தலைவர்கள், தமிழக, பா.ஜ.,வில் தோன்றவில்லை.

கையேந்தும் இழி நிலைபொய்களை உண்மை போல் கூறி, தொண்டர்களை முட்டாள்களாக்கி விட பத்திரிகைகளைத் துவக்கின, திராவிடக் கட்சிகள். இவர்கள் நாளிதழ் ஆரம்பித்து, நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு, பின் ஆட்சி, அதிகாரம் வந்த பின், கட்சி உறுப்பினர்களை சந்தாதாரர்களாக மாற கட்டாயப்படுத்தினர். பின், கட்சி உறுப்பினராக்கினர். கட்சிப் பத்திரிகை சந்தாதரர்கள் தான். கட்சியின் பதவிக்கு அதாவது வட்ட, மாவட்ட, யூனியன், கவுன்சிலர் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,போட்டியிட, இவர்களுக்கு, 'சீட்' கொடுத்தனர்.

இவ்வாறு லட்சக்கணக்கில் சந்தாதாரர்களை உருவாக்கினர். பணம் பலம் படைத்த கட்சி நாளிதழ்கள் வளர்ந்தன.மக்கள் மத்தியில் ஒரு முகம் காட்டி, பின் பக்கம் வேறு முகம் என, நாணயமின்றி ஊழல் புரிந்தனர். அன்றாடம் உழைத்து சம்பாதித்து வரி கட்டிய பணத்தை வைத்து, அதிகாரத்தில் உள்ளவர்கள், கான்டிராக்ட், கமிஷன், கலெக் ஷன் என, மாநில ஆளும் கட்சியும், மாநில எதிர்க்கட்சிகளும் பங்கு போடும் தமிழகத்தில் எந்தத் தேசியக் கட்சியும் வளர முடியாது.


அவர்களும், இவர்களிடம் எப்படி சலுகைகள் பெற்று, கட்சியை, கூட இருந்து அழிக்கிறார் என்பது, மேலிடத்துக்குத் தெரியுமா அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனரா... இதனால் தான் இன்று வரை தேசியக் கட்சிகளுக்கு கையேந்தும் இழி நிலை.

பத்திரிகை உலகில் போட்டிகடந்த, 1881 - 1917 வரை போட்டியின்றி ஆட்சி புரிந்தது, சுதேசமித்ரன். 1917ல், 'தேச பக்தன்' என்ற நாளிதழை துவக்கினார், வி.கல்யாண சுந்தரனார். இவர், காங்கிரஸ் தியாகி. இவருக்குப் பின், உ.வே.சா. ஐயர். இந்த இதழின் மூலம், வாசகர்களுக்கு நல்ல தமிழறிவை ஊட்டினார். இது, 1921ல் நின்றது.ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 'தமிழ்நாடு' என்ற தமிழ் நாளிதழை, டாக்டர் வரதாஜுலு நாயுடு என்பவர் துவக்கினார். இவர் நோக்கம், தமிழர்கள் நல்ல தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்க வேண்டும் என்பதே.

'சுதேசமித்ரன்' காந்திக்கு எதிரான நிலை எழுந்ததால், 'தமிழ்நாடு' நாளிதழ் பிரபலமடைந்தது. அதிலிருந்து சில காங்கிரசினர் வெளியேறி, 'இந்தியன்' என்ற பத்திரிகையை துவக்கினர்; துவக்கத்தில் வளர்ச்சியடைந்து, பின் அதுவும் நின்றது.கடந்த, 1933ல், 'ஜெயபாரதி' என்ற பத்திரிகை, காலணாவுக்கு எட்டு பக்கங்களில் வெளியானது. இப்பத்திரிகை உள்நாட்டு கம்பெனிகளின் விளம்பரங்களை மட்டும் வெளியிட்டது. இதனால், வெளிநாட்டு கம்பெனிகளின் விளம்பர வருமானமின்றி, தோல்வி அடைந்தது.

இந்நிலையில், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' சந்தானந்தால், 1932ல், பாரதி நினைவுநாளில், 'தினமணி' நாளிதழ் துவங்கியது. இவர், ஆட்சியாளர்களை தட்டியெழுப்பும் மணியோசையாக திகழ வேண்டுமென, வாசகர்களைப் பங்கேற்க வைத்தார்.மேலும், அந்தக் காலத்து, 'பேனா மன்னன்' டி.எஸ்.சொக்கலிங்கம், 'தமிழ்நாடு' பத்திரிகை துணை ஆசிரியர் ஏ.என்.சிவராமன், 'சங்கு' பத்திரிகை ஆசிரியர் சங்கு சுப்பிரமணியம் போன்றோர், 'தினமணி'யில் சேர்ந்து, 'சுதேசமித்ரன்' பத்திரிகையை சரிய வைத்தனர்.

'தினமலர்'பல்லாயிரக்கணக்கான தியாகிகள் வாழ்ந்த தமிழகத்தின் தென்கோடியில், நாஞ்சில் நாட்டு குமரி மண்ணில் பிறந்தவர், டி.வி.ராமசுப்பையர். இவர் தேசியவாதி, சிந்தனையாளர். தமிழ் மக்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு அரும்பாடு பட்டவர்.இவர், திருவாங்கூர் சமஸ்தான திவானாக பணியாற்றிய, சர்.சி.பி.ராமசாமி ஐயரோடு இணைந்து, கட்டாயக் கல்வி முறையை கொண்டு வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அப்போது திருவாங்கூர் கொச்சி மாநிலமாக இருந்தது. மேலும், இருவரும் மாவட்டம் முழுவதும் கல்வி சாலைகளை துவக்க அரசுக்கு உதவினர். இதனாலேயே, தமிழகத்தில் மிகுந்த கல்வியறிவு கொண்ட மாவட்டமாக, குமரி திகழ்கிறது.

ராமசுப்பையர், செப்., 6, 1951ல், 'தினமலர்' நாளிதழை திருவனந்தபுரத்தில் துவக்கினார். தமிழகம் தனி மாநிலமாக பிரிந்த போது, தன் நாளிதழை திருநெல்வேலிக்கு மாற்றினார்.தென் தமிழகத்தின் துறைமுக நகரான துாத்துக்குடியில் துறைமுகத்தை மேம்படுத்தவும், தன் பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதினார்.பஞ்சம் தாங்கிய பூமியான கோவில்பட்டி, எட்டையபுரம், ஒட்டப்பிடாரம், திருச்செந்துார், விளாத்திக்குளம் போன்ற ஊர்களை இணைத்து, தனி மாவட்டமாக்கவும் எழுதினார்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகளை கொண்ட திண்டுக்கல், தேனி, கம்பம், பழனி முதலான நகரங்களை, மாவட்டமாக்கவும் தொடர்ந்து எழுதினார்.மேலும், இவர் எந்தக் கட்சியிலும் சாராமல், நடுநிலையில் நாளிதழை நடத்தினார்.


என் நண்பர், நெல்லை சித்த மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஒருமுறை கூறியது: ராமசுப்பையர் முயற்சியில் தான் திருநெல்வேலியில் சித்த மருத்துவக் கல்லுாரி துவக்கப்பட்டது. அந்த காலத்தில் சென்னையிலிருந்து, நெல்லை வரை தான், ரயில் சேவை. அந்தச் சேவையை நாகர்கோவில் வரை இணைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். மேலும், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்ல, திருவனந்தபுரம் வழியாகவே செல்ல வேண்டும். நெல்லை - குமரிக்கு ரயில் தொடர்பு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

'தினமலர்' நாளிதழ் ஏழை, எளிய மக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப் பட்டது. தனி மனிதனாகவும், அவர் பிள்ளைகளின் உதவி மற்றும் உழைப்பாலும், இன்று, தமிழ் மக்கள் உள்ளத்தில் குடிபுகுந்து வளர்ந்த தினமலர், 70 ஆண்டுகள் நிலைத்து வெற்றி கண்டது பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

ராமசுப்பைய்யர் கூர்மையான மதிநுட்பம் உள்ளவர். தமிழ் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் உள்ளவர். கடந்த கால நாளிதழ்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பாடமாக்கி, தினமலர் இன்று நல்ல நாளிதழாக மாற்றியவர். வாழ்க, தினமலர் ராமசுப்பையர் நாமம்.

என் அனுபவ ரீதியாக, மருத்துவராக, பலரது கருத்துக்களை அறிந்ததால், இதை எழுதுகிறேன். சில நிர்வாகிகளிடம் உண்மை, உழைப்பு, தன்னம்பிக்கை, தரமான நடுநிலை இருப்பதை அறிகிறேன். அரசியல் சாராத சமூக விழிப்புணர்வு உள்ளதால் தான், 'தினமலர்' மக்கள் உள்ளத்தில் அவர்களது குடும்பத்தில் ஓர் அங்கமாய் விளங்குகிறது. தமிழ் மக்கள் உள்ளங்களில், 'தினமலர்' நீங்காது வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புக்கு:prabhuraj.arthanaree@gmail.com
98843 53288

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • மோகன் -

  அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

 • ருத்ரா -

  அரசியல் கட்சிகளால், அதிகாரிகளால்? அடியாட்களால், பணத்தால், மதத்தால் எத்தனை விதமான எதிர்ப்புகள், இடையூறுகள். அத்தனையையும் மீறி பத்திரிகைகள் நடுநிலைமையோடு குறிப்பாக தினமலர் சாதித்து வெற்றிப் பாதையில் பயணிப்பது சந்தோஷமான அனுபவம். வாழ்த்துக்கள்.

 • ருத்ரா -

  வாழ்த்துக்கள்.

 • ஆரூர் ரங் -

  1990 வரை அரசின் விளம்பர வருமானத்தை நம்பியே பல நாளிதழ்கள் வெளியாயின. அரசின் தவறுகளை எதிர்க்கும் பத்திரிக்கைகளுக்கு அரசு (மற்றும் பயந்த தனியார்) விளம்பர மறுப்பும் வன்முறைத் தாக்குதல், போலி வழக்குக்களும் 1970 களில் துவங்கியது. எக்ஸ்ப்ரஸ், தினமணி , தினமலர், துக்ளக், (பழைய) தினகரன் போன்ற எத்தனையோ பத்திரிக்கைகள் பாதிக்கப்பட்டன. எக்ஸ்ப்ரஸ் கட்டிடத்தையே இடித்துத் தள்ள இந்திரா உத்தரவிட்டார். துக்ளக் குமுதம் பறிமுதலானது. தினகரன் அலுவலகமே எரிக்கபட்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். எதற்கும் அஞ்சாத தினமலரின் சேவை வாழ்க.

 • Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா

  1935 இல் சிங்கப்பூரில் கோ.சாரங்கபாணி அவர்களால் தமிழ்முரசு நாளிதழ் தொடங்கப்பெற்றது . உலகின் முதல் தமிழ் நாளிதழ் என்னும் சிறப்புடையது இது. 1942இல் நாம்தமிழர் இயக்கத்தலைவர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் தினத்தந்தி தொடங்கப்பெற்றது. இந்தியாவின் முதல் தமிழ் நாளிதழ் இதுவாகும்.

  • ஆரூர் ரங் - ,

   கட்டுரையை திரும்பப் படித்துப்பாருங்க. உண்மை விளங்கும். தந்தியை வதந்தி என்றுதான் படித்துக் கொண்டிருந்தேன் .அது சினிமாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அரசியலில் சினிமா நுழைப்பதை வெறுத்தேன். தமிழர் தந்தை எனக் குறிப்பிடுவதை எதிர்த்ததற்காக சக பத்திரிக்கை மலரை எரித்துப் போராடவைத்த அநாகரீகத்தையும் மறக்க முடியாது. எந்தப்போட்டியும் நாகரீகமாக இருக்க வேண்டும்.

 • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

  மிக்க நல்ல கட்டுரை

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement