LOGIN
dinamalar telegram
Advertisement

இக்கூட்டம் யாருக்காக?

Share

இக்கூட்டம் யாருக்காக?


பா.ஜ., இளைஞரணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 70வது பிறந்தநாளை முன்னிட்டு, 770 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை, திருவொற்றியூர் தேரடியில் சமீபத்தில் நடந்தது.இதில், பா.ஜ., மாநில பொதுச் செயலர், கரு. நாகராஜன், சினிமா துறையைச் சேர்ந்த, காயத்ரி ரகுராம், ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டம் களைக்கட்டியது. அதை பார்த்த, இளம் பத்திரிகையாளர் ஒருவர், 'அடேங்கப்பா... பா.ஜ., நிகழ்ச்சிக்கு, இவ்வளவு பேர் வந்துருக்காங்களே...' என, ஆச்சரியத்துடன் கூறினார்.அதைக் கேட்ட, மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், 'இது, நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம் இல்லைப்பா... நடிகையைப் பார்க்க வந்த கூட்டம்...' என்றார்.அப்போது, நடிகை விஜயலட்சுமி வரவே, சிலர், 'செல்பி' எடுப்பதற்காக, அவரைச் சூழ்ந்தனர்;
நிருபர்கள் சிரித்தனர்.

'அறிவுஜீவி'த்தனம்!



தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள, அவரது வீட்டில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறுகையில், 'விஜயகாந்திற்கு எப்படி, கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது, எனக்கே புரியவில்லை. மாலையில் வீட்டிற்கு வெளியே நடைப்பயிற்சி செய்வதும், நாற்காலியில் சிறிது நேரம் அமர்வதும், விஜயகாந்திற்கு வழக்கம். அதனால், பக்கத்து வீட்டில் இருந்து, தொற்று பாதிப்பு அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனக்கும், என் இரண்டு மகன்களுக்கும் பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது' என்றார்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'உங்க, 'அறிவுஜீவி'த்தனத்துக்கு ஓர் அளவே இல்லையா...' எனக் கிண்டலடிக்க, மற்ற நிருபர்கள் சிரித்தனர்.

'ஓட்டு போடுவீங்களா?'



திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பூண்டியில், 'கந்த சஷ்டி கவசம் - 2.0' பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்க, பா.ஜ., மாநில துணைத் தலைவர், அண்ணாமலை வந்திருந்தார்.அவருடன், பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் சில அதிகாரிகள், அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது, போலீஸ்காரர் ஒருவர், அவரை அணுகி, 'உங்களுடன், ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா...' எனக் கேட்டதும், மேடையில் இருந்து வேகமாக இறங்கி வந்து, அவரைக் கட்டி அணைத்து, போட்டோ எடுத்துக் கொண்டார் அண்ணாமலை. இதைப் பார்த்த போலீஸ்காரர் ஒருவர், 'எந்தக் கட்சியில் இருந்தாலும், அவருக்கும், எங்களுக்கும், 'போலீஸ்' என்ற உறவு இருக்கிறது...' என, பெருமையாக பேசினார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'எல்லாம் சரி தான்... ஓட்டு போடுவீங்களா...' என்றதும், அந்த போலீஸ்காரர் இடத்திலிருந்து நழுவினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வீட்டுக்குள்ளேயே டிரைவர்கள், சமையல்காரர்கள், நாய்களை பராமரிக்க என்று ஒரு பட்டாளம் இருக்கிறது அவர்கள் கொண்டுவராததை, அடுத்த வீட்டிலிருந்து கொண்டுவந்து விடுமா? தொற்று தும்மல், இருமல் போன்று அருகிலிருப்பவர்கள் மூலம் தான் பரவும் என்ற அளவு பாமரனுக்கு கூட தெரிந்ததை, ஒருவேளை தங்கள் வீட்டுக்கு வருவோர் போவோரைக் கட்டுப்படுத்த இயலாது, பழியை மாற்றுகிறாரோ ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement