LOGIN
dinamalar telegram
Advertisement

'இவரு அரசியல்வாதி இல்லை!'

Share

'இவரு அரசியல்வாதி இல்லை!'


மாநில சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு முடிந்து, காரில் புறப்படத் தயாரான போது, எதிரில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தன் ஒன்றரை வயது குழந்தையுடன், மருத்துவமனைக்கு வந்தார்.
சுகாதார செயலர், அந்த நபரை நிறுத்தி, 'நீங்கள் மட்டும் முக கவசம் போட்டால் போதாது... குழந்தைக்கும் போடணும்...' என, அறிவுறுத்தினார். மேலும், காரில் வைத்திருந்த முக கவசத்தை, குழந்தைக்கு போட்டு விட்டார்.அங்கிருந்த, நோயாளி ஒருவர், 'பரவாயில்லையே... சும்மா, அறிவுரை மட்டும் சொல்லாமல், செஞ்சும் காட்டிட்டார்...' என்றார். அருகிலிருந்த, அவரின் நண்பர், 'அதுக்கு காரணம், இவரு அரசியல்வாதி இல்லை... அதிகாரி!' என்றதும், இருவரும் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வெறும் அதிகாரி இல்லை அரசியல்வாதிக்கு விலை போகாத அதிகாரி வாழ்த்துவோம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement