LOGIN
dinamalar telegram
Advertisement

ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு ஏன்?

Share

தமிழகத்தின், ஏழரை கோடி தமிழர்களில் வன்னியர், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், நகரத்தார், பிள்ளைமார், கவுண்டர்கள், நாடார்கள், முதலியார்கள் போன்றோர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வன்னியர் என்று பொதுவான பெயர் இருந்தாலும், படையாச்சியார், நாயக்கர்கள் மற்றும் சில உட்பிரிவுகள், அந்த ஜாதியில் இருக்கின்றன.

அதேபோல, பெரிய ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து ஜாதியிலும் சில பல உள் பிரிவுகள், ஜாதிகள் உண்டு. நகரத்தார் என்றாலும், அவர்களிலும் உள் ஜாதிகள் உண்டு. இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டினர் தான். ஆனால், அனைவராலும், உயர் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள், இந்த ஏழரை கோடி தமிழ் மக்களில், 3 அல்லது, 4 சதவீதம் பேர் தான்வாழ்கின்றனர். அதாவது, பிராமணர்கள், தமிழகத்தில், 30 லட்சம் பேர் இருப்பர் என்றே வைத்துக் கொள்ளலாம்.


இவர்கள், சில பெரிய ஜாதிக்காரர்களைப் போல, ஒரே இடத்தில் வாழ்வதில்லை. வன்னியர்கள், வட மாவட்டங்களில் அதிகம் இருப்பது போல அல்லது கோவை மாவட்டத்தில் கவுண்டர்கள் அதிகம் என்பது போல அல்லது தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் அதிகமாக இருப்பது போல, பிராமணர்கள், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அதிகமாக இருப்பதில்லை.
எனினும், சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லுார் போன்ற இடங்களிலும், இன்னும் தெற்கே போனால், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள சில சிற்றுார்களிலும், அதிக எண்ணிக்கையில் பிராமணர்களை பார்க்கலாம்.

அக்ரஹாரங்கள்அதுபோல, தஞ்சாவூர், திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலும், இன்னும் தெற்கே மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வரையிலும் பிராமணர்கள் வாழ்கின்றனர். பல ஊர்களில் அக்ரஹாரங்கள் இருந்தால், அங்கேயும் அவர்களை பார்க்கலாம்.இவர்கள் ஏன் உயர் ஜாதி எனும் பெயர் பெற்றனர் என்றால், இவர்கள் வேதம் ஓதியவர்கள். தமிழோடு, வட மொழியான சமஸ்கிருதம் கற்றவர்கள். மாமிசம் உண்ணாதவர்கள், காலையும், மாலையும் சூரியனை வணங்குபவர்கள். முப்புரி நுால் எனும் பூணுால் தரித்தவர்கள். சிவனையும், விஷ்ணுவையும் கும்பிடுபவர்கள்; ஆசாரமாய் விளங்குபவர்கள்.

பிறர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். இவர்களைப் பற்றி, ஆக்ஸ்போர்டு அகாரதியிலும், 'கூகுள்' இணையதளத்திலும் இவர்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.சுமார், 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும், கபிலர், தொல்காப்பியர் போன்றவர்கள், பிராமணர்கள் என்றே வரலாறு கூறுகிறது.சங்க காலங்களில் பல பிராமணர்கள் புலவர்களாக இருந்ததும் வரலாற்று உண்மையே. நல்லவை எது, கெட்டவை எது என்பது தெரிந்ததால், பல மன்னர்கள், பிராமணர்களை தங்கள் குருவாக ஏற்றிருந்தனர். அவர்கள், பிராமணர்கள் தனியே வாழ, தனி தெருக்களை அமைத்து, இல்லங்களையும் கட்டிக் கொடுத்தனர்.

வான சாஸ்திரம்கோவில்கள் பல கட்டி, இறைவனுக்கு பூஜை செய்ய, பிராமணர்களையே நியமித்தனர். வானவியல் தெரிந்தவர்களை நிமித்தகர்களாக (ஜோசியம்) நியமித்தனர். இப்படி கற்றவர்களாக இருந்ததால், மதுரையை எரித்த கண்ணகி, பசு, பெண்டிர், அறவோர், அந்தணர்களைத் தவிர்த்து, மற்ற இடங்களை எரிக்கச் செய்தாள். ஆழ்வார்களிலும், நாயன்மார்களிலும் பிராமணர்கள் உண்டு. கோவில்களில் அர்ச்சகர்கள், குருக்கள், தீட்சிதர்கள், பட்டாச்சாரியார்கள் என்ற பெயரோடு, சிவா - விஷ்ணு கோவில்களில் தொண்டு செய்தனர். வான சாஸ்திரம் கண்டுபிடித்த ஆரியபட்டர் பிராமணர். அவரின் கலையைக் கற்று, ஜோதிடம் பார்த்தனர். சுக்ருதர் என்ற முனிவர் பிராமணர். இவரின் கலையை கற்று, நாட்டு மருத்துவம் அறிந்தனர். அதே போல, வராஹ மிஹிரரும் பிராமணர் தான். அவரும் ஜோதிடத்தில் வல்லுனர். விஷ்ணு குப்தர் என்று அறியப்பட்ட சாணக்கியர், இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே தோன்றிய பிராமணர். அவர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வல்லுனர்.


அவர் மூலமாக பொருளாதாரத்தையும், அரசியலையும் அறிந்தனர். இப்படி தமிழருக்கு வேண்டிய எல்லாவற்றையும் கற்று, மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும், அனைத்திலும் முதலாக நின்றனர்; பெருமை அடைந்தனர்.காலம் மாறிற்று; பிரிட்டிஷ் அரசு அமைந்தது. பிரிட்டிஷ் அரசை, 'மிலேச்சர்' என்றனர். நம் மொழிகள், பண்பாடு, கலாசாரம் எதையுமே தெரியாமல் நம்மை ஆண்டனர். மெக்காலே என்ற ஆங்கிலேயே அதிகாரி, அவர்களுடைய மொழியான ஆங்கிலத்தை நம்மிடம் திணித்தார்; கல்வி முறையே மாறிற்று. இருப்பினும், அவர்களோடு உரையாட, பிராமணர்கள் ஆங்கிலம் கற்றனர். நாளடைவில், எட்டாவது படித்தவர்கள் கூட கொச்சை ஆங்கிலம் பேசினர்.

மெட்ரிகுலேஷன் எனும், பள்ளிப்படிப்பு முடிவு வரை படித்தவர்கள், அரசில் வேலை பார்த்தனர். எட்டாவது படித்த பிராமணர் கூட, தாலுகா ஆபீசில் வேலை பார்த்தார். ஆனாலும் கூட, காந்தி மகான் சொன்னார் என்பதற்காக, வெள்ளையர்களை, பிராமணர்கள் எதிர்க்கவும் ஆரம்பித்தனர். நம்மவர்களை, நம்மவரே ஆள வேண்டும் என்று பல பிராமணர்கள், விடுதலை வேள்வியில் குதித்தனர். சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சி நாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு., ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, ராஜாஜி, மதுரை வைத்யநாத அய்யர், கஸ்துாரி அய்யங்கார், சத்தியமூர்த்தி, விஜய ராகவாச்சாரியார் போன்றோர், வெள்ளையரை எதிர்த்துப் போராடிய பிராமணர்களில் சிலர். இதே நேரத்தில், வெள்ளையரை விட அற்புதமாக, அவர்கள் மொழியைப் பேசிய செந்நாப் புலவர் சீனுவாச சாஸ்திரியாரும் விளங்கினார். தமிழுக்குப் பாடுபட்ட, உ.வே.சாமிநாதய்யரும் அந்தக் காலத்தியவர் தான். இப்படி பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, ஏன், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் பிராமணர்கள் வாழ்ந்துள்ளனர். அறிவியல், ஜோதிடம், இசை, நாட்டியம் போன்ற கலைகளை வளர்த்தனர்.

ஏன் எதிர்க்க வேண்டும்இவ்வளவு பெருமைகள் இருந்தும், ஒரே ஒருவரால் தான், பிராமணர்களின் வாழ்வை சிதறடிக்க முடிந்தது. அவர் தான், ஈரோட்டில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, பெரும் வணிகராகவும் இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போராடிய, ஈ.வெ.ரா., அவரால் தான், பிராமண சமுதாயம், தமிழகத்தில் இன்று, மற்ற ஜாதியினரைப் போல வாழ முடியாததற்கு காரணம்.
ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பிராமணர்களை ஏன் எதிர்க்க வேண்டும் என பார்ப்போம்.பெரிய செல்வந்தர். பணத்திற்கு குறைவில்லாமல் இருந்தும் அவர் ஆரம்பக் கல்வியான, ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவருக்கு படிப்பு ஏறவில்லை. குறைவற்ற செல்வம் இருந்தாலும், பெற்றோர் படிக்கச் சொன்னதால், அவர் கேட்கவில்லை.

நட்பு பாராட்டியதில்லைஅவரின் வகுப்புத் தோழர் ஒருவர், ௬௦ வருடங்களுக்கு முன், எங்கள் குடும்ப நண்பர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்; அவற்றை நான் எழுத முடியாது. ஆனால், ஆரம்பக் கல்வி கூட இல்லாத அவர், தன் இளம் வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, ஈரோடு நகர சபை தலைவராகக் கூட இருந்திருக்கிறார். அப்போது அவரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர், சேலம் நகர சபைத் தலைவராக இருந்த ராஜாஜி.
காங்கிரஸ் கட்சியில், தீவிரமாக ஈ.வெ.ரா., இருந்ததால், அக்கட்சி நடத்திய வட மாநில மாநாட்டிற்கெல்லாம் செல்வார். பல வட மாநில பெருந் தலைவர்களை, ஈ.வெ.ரா., அறிந்திருந்தாலும் அவர்கள், ஈ.வெ.ரா.,வோடு நட்பு பாராட்டியதில்லை. அதற்கு தடையாக இருந்த விஷயம், மொழி. அவர்களுக்கு தமிழ் தெரியாது. ஈ.வெ.ரா.,வுக்கோ ஹிந்தி, ஆங்கிலம் இரண்டுமே தெரியாது.

அந்தத் தலைவர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி, சேலம் விஜயராகவாச்சாரி போன்றோர்களிடம் தான் பேசுவார். அப்போது ஏற்பட்டது தான், ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு. 'பிராமணர்களைத் தான் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது' என்று தமிழகத்தில் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.அது மட்டுமல்ல, '2 சதவீதம் உள்ள பிராமணர்களே ஆசிரியர்களாகவும், ரயில்வே, தபால், தந்தி அலுவல்களிலும் வேலை செய்கின்றனர். பிராமணர் அல்லாதவர்களுக்கு அரசு வேலையே இல்லை' என்று விஷமப் பிரசாரம் செய்தார். இது, பிராமணர் அல்லாதவர்களிடையே வேகமாகப் பரவியது.


அப்போது தோன்றியது தான், நீதிக் கட்சி. அவர் ஆரம்பித்த நீதிக் கட்சியில், பிராமணர்களுக்கு எதிரான கொள்கை காரணமாக, சர் பி.டி.ராஜன், டி.எம்.நாயர், பனகல் அரசர், பிட்டி தியாகராயர் போன்ற, பிராமணர் அல்லாத பெரும் செல்வந்தர்கள், ஈ.வெ.ரா., பின் அணிவகுத்தனர். நாளடைவில் நீதிக் கட்சி சிதறி, ஈ.வெ.ரா., மட்டுமே தலைமை தாங்கிய திராவிடர் கழகம் உருவாயிற்று. காஞ்சிபுரம் அண்ணாதுரை போன்ற, பெரிய படிப்பு படித்தவர்கள், பிராமண எதிர்ப்புக்காகவே, திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.

ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு என்பது, பிராமணர் அல்லாதோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈ.வெ.ரா.,வின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்தவர்கள் கூட, அவரின் பிராமண எதிர்ப்பில் ஒன்றுபட்டனர். அது, இன்றும் தொடர்வது தான் பெரும் சோகம். பிராமணர்களின் கடவுள் பக்தியை விட, பிராமணர் அல்லாதோரின் கடவுள் பக்தி பிரமிப்பூட்டுவதாகும். தீமிதி, அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்றவை பிராமணர்களிடம் இல்லை. அதனாலேயே பிராமணத் துவேஷத்தை, ஆத்திகர்களிடையே நஞ்சாய் பரப்பியவர், ஈ.வெ.ரா., தான்.கடவுள் பக்தி அதிகம் உடைய பிராமணரல்லாதோர் வேலை வாய்ப்புகளிலும், கல்வி கற்பதிலும் பின் தங்கி இருந்ததால், பிராமணத் துவேஷம் தீவிரமானது. அதனால் ஏற்பட்டது தான் இட ஒதுக்கீடு.

எழுதாத சட்டமாகி விட்டதுகாந்தியடிகளால், 'ஹரிஜனங்கள்' என்றழைக்கப்பட்ட இன்றைய தலித்துகளின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஏற்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை, நம் அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக, அவரவர் ஜாதிகளின் முன்னேற்றம் கருதி, சட்டம் இயற்றிக் கொண்டனர்.ஒரு முதல்வர், வாய் மொழியாகவே, 'பிராமணர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடே இருக்கக் கூடாது' என, உத்தரவிட்டார். அது இன்றளவும் எழுதாத சட்டமாகி விட்டது. இதற்காக தமிழக பிராமணர்கள் போராடவில்லை.

பெரிய மதிப்பெண்கள் பெற்று, பெரும் படிப்பை கஷ்டப்பட்டு படித்தனர்; இப்போதும் படித்துக் கொண்டு இருக்கின்றனர்.தமிழகத்தில், பிராமணர்களுக்கு படிப்பிலும், வேலையிலும் இடமே இல்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள். இவர்களால் கொடுக்க முடியாததை, வேறு மாநிலங்களும், அன்னிய தேசங்களும் கொடுக்கும்.அதனால் தான், பிராமணர்களில் சுந்தர் பிச்சையும், சத்யா நாதெள்ளாவும், கமலா ஹாரிசும், ராமன் ராமச்சந்திரனும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்! பா.சி.ராமச்சந்திரன்மூத்த பத்திரிகையாளர் தொடர்புக்கு:இ - -மெயில்: bsr_43@yahoo.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (92)

 • NACHI - CHENNAI,இந்தியா

  The statue of EVR in front of Srirangam temple is an eyesore. Either it shall be demolished or similar statues shall be installed in front of Velankanni church and Nagore Mosque. I hope, the secular christians and muslims will not object to this.

 • G.Elangovan - NewDelhi,இந்தியா

  உண்மையை உரக்க உரைத்தார். சுயநலமின்றி வாழ்ந்தார். தனக்கென்று எந்த சொத்தையும் சேர்த்துக்கொள்ளவில்லை. பதவியை தேடவில்லை. மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டும் சம வாய்ப்பு தர வேண்டாமா ? படிக்காத காமராஜர் டில்லி வரை சென்று அரசியல் செய்ய வில்லையா? அவருக்கு மொழி தடையாக இருந்ததா.

 • S.P. Barucha - Pune,இந்தியா

  ஈ.வெ.ரா சிலைகள் கோவில்களுக்கு முன்னால் வைப்பதை தடை செய்து அந்த சிலைகளை அந்தந்த கட்சிகள் தங்கள் வளாகத்தில் வைக்க வேண்டும். படிக்க தகுதியில்லை பின் இந்தமாதியான வேலைகளை செய்வது.நடிகர் MR ராதா சென்னையில் ஈ.வெ.ரா வீட்டில் குடியிருந்த பொது வாடகை தராததால் அவர் உடைமைகளை தெருவில் விட்டெறிந்தார். ஈ.வெ.ரா விற்கு ஆதரவு தெரிவிப்பதால் தி.மு.க ஒரு கணிசமான ஓட்டை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீரமணியை தமிழக மக்கள் ஒரு ஆளாகவே மதிப்பதில்லை.

 • N Srinivasan -

  பால்ய விவாஹம், பெண் கல்வி, இப்படி எதையுமே குறைகூற ஒன்றுமில்லை என்பது தான் உண்மை.காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியாகப் பார்க்க வேண்டுமே ஒழிய, குறைசொல்ல ஒன்றுமில்லை.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  வேறு வேலை இருந்தால் அதை பொய் பாருங்க

 • N Srinivasan -

  ஈவெரா உண்மையிலேயே ஜாதி, ஜாதிப்பெயர் போடுவதை ஒழித்தாரா?ஏற்கனவே தமிழக மக்கள் தொகையில், ஈவெராவுக்கு முன்னாடியே, ஏறக்குறைய போடுவதே இல்லை என்று சொல்லிவிடலாம்.கணக்கு எடுத்தால், ஏற்கனவே ஜாதிப் பெயரை பின்னால், போட்டுக்கொள்ளாதவர்கள் 90 to 95 கூட இருக்கும். அப்ப இவர் என்ன செஞ்சார்.இதுல இன்னொரு கூத்து என்னவென்றால், ஏற்கனவே போடாமல் இருந்தவனை போடவச்ச பெருமை இவரைத் தான் சாரும்.முதன்முதலில் ஜாதிவாரி இடஒதுக்கீடு கேட்ட அறிவாளியே இதுதான், ஜாதியை முழுக்க ஒழிக்க வந்தவர். முதலில் ஈவெரா, ஒரு கட்டமைக்கப்பட்ட மாயபிம்பம். அதை முன்னெடுத்து, முனைப்புடன் சொந்தம் கொண்டாடியவர் கட்டுமரம். காரணம் எம்ஜிஆர் என்ற பெரிய சக்தியை எதிர்கொள்ள, அரசியலில் நிலைத்திருக்க...ஊருக்கு பத்து பேர் கூட இல்லாத ஒரு அமைப்பால எதையாவது சாதிக்க முடியுமா?விஷயத்துக்கு வருவோம்...மக்கள் தொகையில் பாதிக்கு பாதி பெண்கள்... 50 சதவீதம் நேரடியாகப் போச்சா.திருமணம் நடந்த பிறகு தான், ஆண்கள் சேர்த்துக்கொள்வது வழக்கம். அப்ப குறைந்த பட்சம் 20 சதவீதம் போச்சா.பெரும்பாலும் SC,ST,BC,MBC, ஜாதிப் பெயரைப் போட்டுக்கொள்ளும் வழக்கமே கிடையாது. அப்ப அதுவொரு 20 to 25 சதவீதம் போச்சா. மீதம் இருப்பது 5 சதவீதம் கூட கிடையாது...அதுதான் நிதர்சனம்.திரு, திருமதி, திருவாளர் போன்ற வார்த்தைகள், அந்தக்காலத்தில் புழக்கத்தில் கிடையாது. பேர்சொல்லி அழைக்கும் வழக்கமும் கிடையாது.மரியாதை நிமித்தமாக, பிள்ளைவாள், முதலியார்வாள், அய்யர்வாள், செட்டியார்வாள் என்று, அழைக்கப்பட்டார்கள். யாரும் வைத்துக் கொள்ளவில்லை.முதலில் மற்றவர்களால் அழைக்கப்பட்டு, பின் சேர்ந்தது. இது தான் உண்மை.ஆனால், அந்தக் கோனார், இந்த நாடார், அந்தப் பரையனார், இந்த வன்னியர் என்று, ஏற்கனவே இல்லாத ஒன்று எப்படி வந்தது.அப்ப ஈவெரா என்ன செஞ்சார். சாதியை ஒழித்தாரா? இல்லை மெருகேற்றினாரா? விடை உண்டா? இந்த திக, திமுக கும்பல், ஒரு நாளும் இவர்களைப் பார்த்து, நீங்க ஏன் போட்டுகிறீங்க என்று, கேட்டதே கிடையாது. அது ஏன்? விளக்கம் உண்டா?

  • Vaduvooraan - Chennai

   @ என்.ஸ்ரீனிவாசன் நெத்தியடி கருஞ்சட்டை வீரர்கள் அடிமடியிலேயே கை வெச்சிடீன்களே? பிழைப்புக்கு என்ன செய்வாங்க ?

 • Sam Rajarajan - Erode,இந்தியா

  பெரியார் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சிகள் காரணமாக பிராமண எதிர்ப்பை கையிலெடுத்தார். கட்டுரையில் கூறப்பட்டுள்ளது தவறு.

  • sankar - Nellai,இந்தியா

   அதானே - உண்மையை ஒத்துக்கொள்ளும் மனம் இருக்காதே - ஆனால் உண்மை உண்மைதான் - என்ன செய்வது

  • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

   //பெரியார் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சிகள் காரணமாக பிராமண எதிர்ப்பை கையிலெடுத்தார்//- எவன் பிரச்சினை செய்தானோ , அவனை மட்டும் சீண்டியிருந்தால் கண்டித்து திருத்தி மாற்றியிருந்தால் இவர் செய்தது சரி எனலாம் ...மூட்டை பூச்சிக்காக வீட்டை கொளுத்திய கதையாக , எவனோ ஒன்றிரண்டு ஆட்கள் செய்த கூத்துக்கு ஒரு சாதி முழுக்க முக்கால் நூற்றாண்டுகாலம் தொடர்ந்து எதிர்த்து சிதைத்து , ஒரு மாநிலத்தை முழுக்க ஒழுக்கம் கெட செய்த செயல் என்ன சரியானதா ? ஒருவகையில் சைக்கோத்தனமாக தெரியவில்லையா ? ஒரு மாநிலம், இனம் முழுவதும் ஒரு சைக்கோவுக்கு அடிமையாகி , தாங்களும் சைக்கோவானது நகைப்பு மற்றும் பரிதாபத்துக்குரியது ........நீலநரி மூக்கை அறுத்துக்கொண்டவன் கதையாக இல்லையா ??///

 • theruvasagan -

  வடிவேலு நடித்த படத்தில் வரும் காட்சி. ஷேர் ஆட்டோ டிரைவர் சிங்கமுத்து ஆட்டோவிலே உட்கார்ந்திருக்கும் வடிவேலுவை குத்துவதாக எண்ணிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு சீட்டை குத்திக்கொண்டிருப்பார். வடிவேலு எப்போதோ இறங்கிப் போயிருப்பார். தமிழகத்தில் பிரமண எதிர்ப்பு இந்த மாதிரிதான். பிராமணர்கள் வடிவேலு கேரக்டர் மாதிரி. சிங்கமுத்து கேரக்டர் தி.க பேச்சை நம்பின பிராமாண எதிர்ப்பு கூட்டம். இவர்களை கண்ணை மூடிக்கொண்டு பிராமண எதிர்ப்பை நடத்தச் சொல்லிவிட்டு தந்திரமாக அவர்களது உடைமைகளை லவட்டிக்கொண்டு போனது பகுத்தறிவு இயக்கங்கள். இவர்கள் அந்த கதையில வராத கேரக்டர். நிஜ வாழ்க்கையில் பிராமண ஆதிக்கம் என்ற கற்பனை கதையை அவிழ்த்து விட்டு மக்களை முட்டாளாக்கி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள்.

 • Govind - Bangalore,இந்தியா

  Superb Article Very well written This is the fact and it is true that Non-Brahmins (other than SC/ST) joined hands with Periyar because it suit them and it helped in their advancement. Selfish fellows Today we are losing our Hindu Identity. A clever play by Periyar.

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNAI,இந்தியா

  இங்கே ஒரு அசமந்தம் என்னவோ பிராமணரை பகைத்து கொண்டால் என்று புலம்புது , ஏன் ஜெயா அவா தான் எப்படி இறந்தார் எப்போது இறந்தார் என்று கூட தெரியாது , MGR 71 வயதில் இறந்தார் , அனால் கலைஞர் 93 வயதில் எதிர்கட்சியாக இருந்த போதும் அவர் வீரமகன் போராடி அதே கடற்கரை இடம் இப்போ சொல்லு

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement