LOGIN
dinamalar telegram
Advertisement

தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?

Share

தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் சட்டசபை தேர்தலுடன், நாடு முழுதும் காலியாக உள்ள, 64 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலைத் நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் --- திருவல்லிக்கேணி என, மூன்று சட்டசபை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, காலியாக உள்ளன.தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. மேலும், இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலால், தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இந்நிலையில், சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை. ஏற்கனவே, நிதி பற்றாக்குறை உள்ள சூழலில், இடைத்தேர்தல் நடத்துவதை, தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்.அதேநேரம், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலை நடத்தலாம். ஏனெனில், அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆயுட்காலம் உள்ளது.
தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?

'குடமுருட்டி' ஞாபகம் இருக்கா?எஸ்.பரிமள ரெங்கன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதி, முதல்வராக இருந்த போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து, தஞ்சை வழியாக, திருச்சிக்கு ரயிலில் சென்றார்.அப்போது, குடமுருட்டி ஆற்றில் உள்ள, ரயில்வே பாலத்தின் கீழ், ஒரு வெடிகுண்டு கிடந்ததாக தகவல் பரவியது. உடனே, அதைக் கேள்விப்பட்ட கருணாநிதி, தன்னை வெடிகுண்டு வைத்து, கொலை செய்ய சதி நடக்கிறது என, அறிக்கை வெளியிட்டார்.அவரது ஆதரவாளர்களும் இதை பெரிதுப்படுத்தி, போராட்டம் செய்ய துவங்கி விட்டனர். கடைசியில், உண்மை என்னவெனில், அது வெடிகுண்டே அல்ல; ஏதோ ஓர் உருண்டையான பொருள். அதன் பின், கருணாநிதியை, 'குடமுருட்டி குண்டு' என, எதிர்க்கட்சியினர் கேலி செய்ய ஆரம்பித்தனர்.இப்போது, அவரது மகள், கனிமொழியின் நிலைமையும் அது தான். சென்னை விமான நிலையத்தில் நடந்த சாதாரண விஷயத்தை பெரிதுபடுத்தி, தமிழகத்தில், மொழி அரசியல் செய்ய நினைத்தார்.அதை தொடர்ந்து, கூட்டணிக் கட்சியினரும், சினிமாக்காரர்கள் சிலரும், அந்த விஷயத்தை, 'ஊதி' பார்த்தனர். ஆனால், மக்கள் விழிப்புடன் இருந்து, அவர்களின் ஆசையில், மண்ணை அள்ளி போட்டு விட்டனர்.கடந்த, நான்கு ஆண்டுகளில், தி.மு.க., பல நாடகங்களை நடத்தியது; அது எதுவும், மக்கள் மனதில் இல்லை. காரணம், அக்கட்சி எது செய்தாலும், அது ஓட்டுக்காக மட்டும் தான்.

மொழி திணிப்பு தவறு!கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்துார்,கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'தமிழகத்திற்கு, ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் மட்டும் வேண்டுமா?' என, இப்பகுதியில், சென்னை வாசகர் ஒருவர், கடிதம் எழுதியிருந்தார்.பிழைப்பு தேடி வேறு மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ செல்வோர் தான், அங்குள்ள மொழியை பழகிக் கொள்வர். அதை விடுத்து, அந்த நாட்டு மக்கள், தொழிலாளர்களின் மொழியை கற்றுக்கொள்வரா?தமிழகத்தை சேர்ந்த ஒருவர், பிழைப்புத் தேடி கேரளத்திற்கோ, கர்நாடகத்திற்கோ சென்றால், யாருடைய வற்புறுத்தலுமின்றி, அம்மாநில மொழியை, அவராகவே கற்றுக் கொள்வார்.தமிழகத்திற்கு, வேலைக்காக வருவோர் தான், தமிழை கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களுக்காக, தமிழக மக்கள் அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டுமென சொல்வது, என்ன நியாயம்?தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த கால கட்டத்தில் ஆராதனா, பாபி, யாதோங்கி பாரத் போன்ற பல ஹிந்தி திரைப்படங்கள், வரலாறு காணாத வெற்றியை தமிழகத்தில் பெற்றன.தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினி, வட மாநிலத்தில் மிகப் பெரிய நடிகையாக உள்ளார். கேரளாவை சேர்ந்த, எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் திரை இசையில், மிகப் பெரிய சாதனை படைத்தார். இப்படி எண்ணற்றோரை காண முடியும்.மொழியை, அரசியலாக்குவது தவறு என்பதில், எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேபோல மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒரு மொழியை, பிற மொழியினரிடம் திணிக்க முயல்வதும் தவறு தான்.

தன்னம்பிக்கை ஊட்டுங்கள்!அ.குணா, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வு பயத்தில், சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது, வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், தேர்வு பயத்தில் தற்கொலை செய்த, மாணவி ஜோதி துர்காவின் மரண ஓலையை படிக்கும் போதே, நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது.தாய், தந்தை, தாத்தா என, குடும்பத்தினர் அனைவரும், தன் மீது வைத்திருந்த அதிக எதிர்பார்ப்பை, எங்கே தன்னால் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், மனச்சோர்வு அடைந்து, அதுவே பயமாக மாறியதால், ஜோதி துர்கா தவறான முடிவை எடுத்துள்ளார்.இப்படிப்பட்ட மாணவிக்கு, தன்னம்பிக்கை கொடுக்க கூடிய, நல்ல ஆசிரியர் மற்றும் நண்பர்கள் இல்லாமல் போனது, துரதிர்ஷ்டவசமானது.நீட் தேர்வை விட, கடினமான தேர்வுகள் உள்ளன. அதிலும் சாதித்து, வெற்றி பெற்றவர்கள், நம் முன் நிமிர்ந்து நிற்கின்றனர்.மிகவும் கடினமான, ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சார்ந்த மாற்றுத்திறனாளியான, பூரணசுந்தரி என்ற மாணவி சாதித்துக் காட்டியுள்ளார்.
அவர், தன், 5 வயதிலேயே பார்வையை இழந்தவர். தன் அம்மாவின் உதவியுடன், கல்வி கற்று, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில், ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் எழுதி, தோல்வியை தழுவினார். ஆனாலும், விடாமுயற்சியால், மூன்றாவது முறையாக, 2019ல் எழுதிய தேர்வில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.அவரது வெற்றிக்கு காரணம், பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஊட்டிய தன்னம்பிக்கையே!இப்படி ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்போராக இருக்க வேண்டும்; மேலும், நம் விருப்பத்தை, குழந்தையின் மீது திணிக்கக் கூடாது. அவர்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதில் படிக்க வைக்க வேண்டும்.
மாணவர்களின் தற்கொலையை தடுக்க, பெற்றோரால் தான் முடியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • maran - chennai,இந்தியா

  நான் என்ன சொல்ல

 • RUPA - KOLKATA,இந்தியா

  Well said Guna, Parents not insists the child, kindly approve child's interest.

 • A.S. ANNAMALAI SWAMI - CHENNAI,இந்தியா

  ஐயா, மொழித் திணிப்பு தவறு என்று குனியமுத்து வாசகர் இன்றைய நாளில் தெரிவித்து இருப்பது அந்நிய நாட்டு இறக்குமதிபோல அலறுகிறார். பிழைப்பு வேறு, திறமை வேறு என்பது என் எண்ணம். நாம் நன்றாக இருப்பதற்காக சிறு வயதிலேயே நம் பெற்றவர்கள் நம் மீது "கண்டிப்பான" செயலைத் திணிக்கிறார்கள். வளர்ந்த பின்புதான் நமக்கு புரிகிறது. பிழைப்பிற்காக திறமையில்லாதவர்களின் அறைகூவலுக்கும் நமது அரசியல் சட்டம் மதிப்பு கொடுக்கிறது. திறமையால் உயர்ந்தவர்களுக்கும் கவுரவம் தருகிறது. அதே சட்டம், கட்டாய கல்விக்கும் உரிமை அளிக்கிறது. இதுதான் நம் தாய் நாடு காட்டும் "கண்டிப்பு". இந்த கண்டிப்பு எந்த நிலையிலும் குற்றதாம் ஆகாது. திணிப்பு என்ற அர்த்தமும் கிடையாது. இந்தியா திறமையாளர்களின் வல்லரசுவாக மாறுவதற்கு எந்த மொழித் திணிப்பும் அவசியம், இன்றைய நாளில்.

 • Sathya Dhara - chennai,இந்தியா

  விருப்பமில்லாத ஒன்றை திணிப்பது தவறுதான். சரி....இந்த பெரியான் பேராசிரியன் கட்டு சுடலை கும்பல்..... ஈவேரா கொள்கைகளை திணிக்கிறார்கள் பள்ளிகளில்....தெருக்களில்.....இது பல பேருக்கு விருப்பம் இல்லாத விஷயம் என்பது ஊர் அறிந்த உண்மை. இவர்கள் மட்டும் திணிக்கலாமா... தமிழர்கள் இளிச்ச வாயர்கள்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  பெற்றவர்கள், அக்கம் பக்கம், உறவுகளையே உதாரணம் காட்டி, தங்கள் வாரிசுகளும் டாக்டர்களாக வேண்டும் என பிள்ளைகளை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி வேறு வழியின்றி, தற்கொலையை நாடி விடுகின்றனர் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் இஷ்ட பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கட்டும்

 • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

  மொழி திணிப்பு தவறு கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்துார்,கோவை எளிதியிருப்பது மிகவும் உண்மை. அத்துடன் கவனிக்கப்பட வேண்டிய கருத்து. பிஜேபி காரர்களுக்கு மூளையில் pattaal சரி.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement