LOGIN
dinamalar telegram
Advertisement

'அவரு அறிவுரை சொல்வாரா?'

Share

'அவரு அறிவுரை சொல்வாரா?'


ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், சமீபத்தில், கிணத்துக்கடவில் நடந்தது. இதில் பங்கேற்ற, ஹிந்து முன்னணி மாநில தலைவர், காடேஸ்வரா சுப்ரமணியம், நிருபர்களிடம் கூறுகையில், 'நடிகர் சூர்யா, 'நீட்' தேர்வு குறித்து, தவறான தகவல் பரப்புகிறார். மாணவர்களுக்கு, அவர் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து, தவறான சிந்தனையை, மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. இதை, அவரது தந்தையான, நடிகர்
சிவகுமார் கண்டித்து, நல்வழிப்படுத்த வேண்டும். சூர்யா திருந்தாவிட்டால், அவரை கண்டித்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்றார்.அங்கிருந்த நிருபர், 'சிவகுமார், 'செல்பி' எடுக்குறவங்க, போனை எல்லாம் உடைக்கிறாரு... அவரு, தன் மகனுக்கு புத்திமதி சொல்வாரா...' என்றார்.அருகிலிருந்தவர், 'அதை இன்னும் மறக்கலையா பா...' என, சிவகுமார் போல, 'மிமிக்ரி' செய்யவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement