LOGIN
dinamalar telegram
Advertisement

என்னை எப்போதும் அவள் வரவேற்க வேண்டும்

Share


பெரும்பாலும் அப்பாக்களின் பாசமும் கணவர்களின் பாசமும் வெளியே தெரிவது இல்லை அவர்கள் மனதிற்குள்ளாகவே அது ஆழ்ந்து போய்விடுகிறது.

அதையும் மீறி வெளிப்பட்ட கணவரின் பாசம் இது

மதுரையைச் சேர்ந்தவர் சேதுராமன் (78) தொழிலதிபர், இவரது மனைவி பிச்சைமணி (68)திருமணமாகி கடந்த 48 ஆண்டுகளில் இந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லை, இந்த நிலையில் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலமின்றி பிச்சைமணி இறந்துவிட்டார்.

பிள்ளைகள் இருந்தாலும் செய்வதறியாது திகைத்துப் போன சேதுராமன் தொடர்ந்து பல நாட்கள் துக்கத்திலேயே முழ்கியிருந்தார் மனைவி இல்லாத வீடு வீடாகவே அவருக்கு இல்லை உள்ளும் புறமும் வெறிச்சோடி இருப்பதாக உணர்ந்தார்.

தன்னைப் போலவே மனைவியை இழந்த கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவியின் உருவத்தை அச்சு அசலாக சிற்பமாக செய்திருப்பதை கேள்விப்பட்டு அவர் மூலமாக தானும் அப்படி ஒன்றை செய்ய விரும்பினார்.

ஆனால் அதைச் செய்தவர்கள் நீண்ட நாட்களாகும் என்று சொல்லி ஆர்டரை ஏற்க தயங்கினர், மதுரை திரும்பிய சேதுராமன் இது தொடர்பான தேடலில் ஈடுபட்ட போது மதுரை வில்லாபுரத்தில் உள்ள சிற்பி பிரசன்னா பைபர் மெட்டீரியலில் பிச்சைமணியின் சிற்பத்தை தத்ரூபமாக உருவாக்கிதந்தார்.பார்த்த சேதுராமனுக்கு இறந்த என் மனைவியே எதிரில் வந்து உட்கார்ந்து இருப்பது போல உணர்வு ஏற்பட்டது.

வாசலைத்திறந்த உடனேயே எதிர்படும் வகையில் என் மனைவியின் சிற்பத்தை தற்போது வீட்டில் வைத்துள்ளேன். நான் வெளியே போய்விட்டு வீட்டிற்கு திரும்பும் போது என்னை என் மனைவி வரவேற்பது போலவே உணர்கிறேன் அது மட்டுமல்ல என் மனைவி இந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் உலாவருவதாகவே எண்ணுகிறேன் என்றார் சேதுராமன்.

-எல்.முருகராஜ்.
படங்கள்:கண்ணன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • kannan - chennai,ஆஸ்திரேலியா

    பாசத்தையும் பாசிட்டிவ் ஆக மாற்றிய இவரை பாராட்டலாம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கஸ்துரி ராஜாவின் தந்தை சொல்லியதாக ராஜ்கிரண் ஒருபேட்டியில் சொன்னது சம்சாரம் போச்சுன்னாசகலமும் போச்சு .இதுதான் எல்லாம் ஏன் ராசா திரைக்கதையின் கரு .உண்மையில் மனைவிதான் எல்லாமே ..ஒருதாயைப்போல் அமைச்சரைபோல் நண்பனைப்போல் தாதியைப்போல் பலநிலைகளில் கணவனை தாங்கிப்பிடிப்பது மனைவியெனும் தெய்வமே

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    பெரும்பாலும் மனைவி ரெண்டு நாள் பெற்றோர்கள் வீட்டுக்கு போயிட்டுவந்தாலே சந்தோஷத்தில் திக்குமுக்காடும் கணவர்கள் தானே அதிகமா இருக்காங்க

  • Ram - Thanjavur,இந்தியா

    உண்மையா மனைவி தன்னலமில்லாது குடும்பத்தை தாங்கி பிடிப்பவள் நம்ம தேசம் கர்ம பூமி பாசம் பிணைப்பு மிக்க ஒரு மண் இங்கு தோன்றும் பெண்களுக்கு இயற்கையாகவே இந்த தன்மை உண்டு ..பார்க்கும் போது கண்களில் கண்ணீர் எண்ணி பெருமை கொள்கிறேன்

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    வேதனை சார் , இழந்ததை நினைத்து வாடுவதை விட , இருக்கும்போது கொண்டாடுவது மேல்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement