LOGIN
dinamalar telegram
Advertisement

'ஸ்கிரிப்ட்' தயார்; நடிகர் தயார்... 'ஆக்ஷன்' தேவை!

Share

தமிழக அரசியல், வெறிச்சோடி கிடக்கிறது. காரணம் ரஜினிகாந்த்; அவர் இன்னும் களம்இறங்கவில்லை. அதனால், வரப்போகும் தேர்தல் குறித்து சிந்திக்க முடியாமல், கட்சிகள் திகைக்கின்றன.

சில முடிவுகளை, தொடர்ந்து தள்ளிப்போட முடியாது. ஆம் அல்லது இல்லை என்று தீர்மானித்தாக வேண்டும். பூவா, தலையா என்று நாணயத்தை சுண்டி விட்டாலும் சரி; முடிவு தெரிந்தாக வேண்டும். நன்மையா தீமையா, இப்போதா அப்புறமா, வெற்றியா தோல்வியா என்ற விவாதங்களுக்கு இப்போது இடம் இல்லை.இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய வல்லமை வாய்ந்த முடிவை எடுப்பதில், ரஜினி இதுவரை காட்டிய தயக்கம் போதும். கொரோனா பரவல், அவருடைய தள்ளிவைப்புக்கு கடைசிக் காரணமாக அமையட்டும்.

சிலர் சித்தரிப்பது போல, ரஜினி ஒன்றும் சூனியத்தில் இருந்து துவங்கவில்லை. கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய ரசிகர் படையும், வெளியே புலப்படாத இன்னும் பெரிய ஆதரவாளர் கூட்டமும் அவருக்காக காத்திருக்கின்றன.

கட்சிக்கான நிர்வாக சாசனம்எழுதப்பட்டு விட்டது. கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது முடிவாகி விட்டது. ஒவ்வொரு அடியும் எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. பிறகு, ஏன் ரஜினி அறிவிக்காமல் நிற்கிறார்?தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எல்லாரும் விரும்புகின்றனர். பல்துறை வல்லுனர்களும் அதில் அடக்கம். அவர்களில் பலர், ரஜினிக்கு ஆலோசனைவழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அரசியல் கொதிநிலைநல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட பல கட்சிகள், பின், பாதையை தொலைத்து பாழாகிப் போனதை ரஜினி பார்த்திருக்கிறார். 'அப்படி ஒருநிலை என் கட்சிக்கும் வந்துவிட்டால்...' என்ற அச்சம் அவரை பிடித்திருக்கிறது என, சில ஆலோசகர்கள் நம்புகின்றனர். அவ்வாறு நடக்காமல் தவிர்க்க, இந்த இரண்டு கட்ட செயல் திட்டத்தை, ரஜினியின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கிறேன்.

முதல் கட்டம்: கட்சியை நாளை அல்ல; இன்றே துவங்குங்கள்.

இரண்டாம் கட்டம்: இரண்டு ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்து விட்டு, அதன் பின், தமிழகத்தை ஆன்மிக அரசியலுக்கு திருப்பி விட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுங்கள்.


முதல் கட்டத்தை பார்க்கலாம்.இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள், பெரிய தலைவர்கள். மற்ற மாநில தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை அவர்களிடம் இருந்தது. ஜாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளை கடந்து, மக்களின் உள்ளத்தை கவர்ந்தனர். அத்தகைய தலைவர்இப்போது இல்லை. ஆளுக்கு ஒரு வட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, முழுமையாக நம்பத் தகுந்த தலைவன் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம், எல்லாகட்சிகளின் தொண்டர்களுக்கும் இருக்கிறது. இதை, அரசியல் கொதிநிலை என்கிறோம். மாற்றத்துக்கு முந்தைய சுழற்சி இது. பார்ப்பதற்கு குழம்பிய குட்டையாக காட்சி தருகிறது. அதில், மீன் பிடிக்க தலைவர்கள் தயாராக இருக்கின்றனர். ஒரே ஒரு அசைவு தான் இந்த கொதிநிலைக்கு தேவை.அதைக் கொடுக்க வல்லவர் ரஜினி ஒருவரே. 'ஸ்கிரிப்ட்' தயார்; கதாபாத்திரங்களும் தயார்; 'லைட்ஸ் ஆன்... ஆக்ஷன்' என்ற வார்த்தை மட்டும், ரஜினிவாயிலிருந்து வர வேண்டும். அதற்காக காத்திருக்கிறது மாநிலம்.

இவர் ஜாதி மதம் பார்க்க மாட்டார்; பணம் சம்பாதிக்க அலைய மாட்டார் என்று தமிழக மக்கள் யாரையாவது நம்புகின்றனர் என்றால், அது ரஜினியைத் தான்!குறுகிய நோக்கம் கொண்ட மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை, ரஜினியால் சுலபமாக சாதிக்க முடியும் என்று பெருவாரியான மக்கள் நம்புகின்றனர்.எல்லா மட்டங்களிலும் ஊடுருவிக் கிடக்கிற ஊழலை, அவரால் மட்டுமே ஒழிக்க முடியும் எனநம்புகின்றனர். எனினும், ஊழலை தாண்டியும் ஆழமான பிரச்னைகள் இருக்கின்றன.

மூன்று விஷயங்கள் அவர் மனதை குடைவதாக எனக்கு தோன்றுகிறது.
1 முதல்வர் நாற்காலியில் அமர விரும்பவில்லை என அவர் சொன்னது, மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ஏன் என்றால், ரஜினியை நம்பும் அளவுக்குஅவரோடு இருப்பவர்கள் அல்லது இருக்கப் போகிறவர்களை எவரும் நம்ப மாட்டார்கள். எனவே, ரஜினி இப்படி செய்யலாம்: இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து, ஆட்சியும் அரசு நிர்வாகமும் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று ஒரு பாதையை வகுக்கலாம்.

அந்த காலகட்டத்திலேயே, அவருக்கு பின் யார் முதல்வராக வருவது என்பதை எடை போட்டு தீர்மானிக்கலாம். அவருடைய தேர்வு சரியா என்பதை மக்களும் கண்கூடாக பார்க்க முடியும். இதை வெளிப்படையாக அறிவித்து விட்டே ஆட்சி அமைக்கலாம். முறையற்ற ஓர் ஆட்சி அமைய நாம் காரணமாக இருந்து விட்டோமோ என்ற உறுத்தலை, இதன் மூலமாக அவர் தவிர்க்கலாம்.

2 இரண்டாவது விஷயம், முதல்வர் பதவியை துறந்த பிறகு, என்ன செய்வது என்பது. அது கடினம் அல்ல. பதவிகளுக்கு அப்பாற்பட்ட தலைவனாக, ஒரு ஸ்டேட்ஸ்மேனாக தன்னை உயர்த்திக் கொள்ளலாம். கிங் மேக்கராக, சமூகத்தின் மனசாட்சியாக மாறுவது அவருக்கு சிரமம் அல்ல.ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படக்கூடிய ஒரு அரசியல் இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவுக்கு எடுத்துக்காட்ட அவர் மெனக்கிடலாம். அதற்கு ஐந்தாண்டுகள் போதும்.

அப்புறம் ஒரு செயல் தலைவரை தேர்வு செய்து விட்டு, கட்சியின் நிறுவன தலைவராக எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.

3 மூன்றாவது விஷயம், மத்திய அரசுடன் மாநிலத்தின் உறவு. இதில் அவர் கண்ணை மூடிக்கொண்டு, எம்.ஜி.ஆர்., பாதையில் பயணம் செய்யலாம். எம்.ஜி.ஆருக்கு தேசிய பார்வை இருந்ததே தவிர, தேசிய அளவில் கல்லா கட்டும் ஆசைகள் கிடையாது. தமிழகத்தின் நலனை மட்டுமே அவர் முதன்மையாக கொண்டிருந்தார்.அப்படி உருவானது தான் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு, நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒன்று என, தேர்தலுக்காக அவர் வகுத்த எம்.ஜி.ஆர்., பார்முலா. தமிழகத்துக்கு அது பெரிதும் உதவியது.

காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலவீனப்பட்டு, மாநில கட்சிகளுடன் ஜூனியர் பார்ட்னராக பங்கேற்கும் சூழல் உருவான பிறகு, எம்.ஜி.ஆர்., பார்முலா நீர்த்துப் போய், '2ஜி' வரைக்கும்வந்தது எல்லாம் சமீபத்திய வரலாறு. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே, ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதில் ரஜினி உறுதியாக இருக்க வேண்டும்.

இனி, திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு வருவோம்...ரஜினி தமிழக நட்சத்திரம் மட்டுமல்ல; அவருடைய செல்வாக்கு எல்லை கடந்த ஒன்று. தென் மாநிலங்களில் அவரை நேசிக்கின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளில், அவரை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கின்றனர். இமேஜ் குறித்த எந்த கவலையும் இல்லாமல் இயற்கையான தோற்றத்தில் வளைய வரும் வேறு சூப்பர் ஸ்டாரை, அவர்கள் கண்டது இல்லை.

எளிமையான வார்த்தைகளில் வெளிப்படும் அவரது ஆன்மிக, தத்துவார்த்த சிந்தனைகளை, அந்த மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆகவே, சமூக அரசியல் சீர்திருத்தவாதியாக, ரஜினி தன் எல்லைகளை விஸ்தரிப்பது சுலபம்.முதல்வர் பதவியை விட்ட பிறகு, காமராஜர் பாணியில் ரஜினி ஒரு ஆலோசகராக, வழிகாட்டியாக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளலாம். ஆனாலும், தமிழகத்தின் குரலாக அவரது கருத்தை மத்திய அரசும், மற்றவர்களும் எதிர்பார்ப்பர்.

இந்தியா இன்று எப்படிப்பட்ட சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது என்பதை விவரிக்க தேவையில்லை. தேசத்தை முழுவதுமாக கட்டமைக்க வேண்டும் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு அப்பாலும் மக்களால் மதிக்கப்படுகிற ஒரு தலைவன் அவசியம். ஊழலை ஒழிப்பதுமட்டுமே நாட்டை சீரமைக்காது. ஏனென்றால், இந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதை விரும்பாத அன்னிய சக்திகளும், அவர்களுக்கு துணை போகும் உள்நாட்டு சக்திகளும் ஏராளமான கண்ணிகளை புதைத்திருக்கின்றன.
மக்களை பிளவுபடுத்தி, ஒருவருக்கு எதிராக மற்றவரை திருப்பும் வேலையில் தீய சக்திகள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. அதற்கு அணை போட்டு, அனைத்து பிரிவு மக்களையும் இணைத்து, தேச நலன் என்ற பொது நீரோட்டத்துக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு நல்ல தலைவனுக்கு உண்டு.

புது அவதாரம்வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக தலைவர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் ரஜினிக்கு இருக்கிறது. நதிகள் இணைப்பில் அக்கறை கொண்ட ரஜினி, இந்திய மக்களின்இதயங்களை இணைக்கின்ற ஒரு சமூக பொறியாளராக, புது அவதாரம் எடுக்க வேண்டும்.சமூக அரசியல் சீர்திருத்தம், இதற்கு முன் எவரும் முயற்சி செய்யாத விஷயம் என்று சொல்லவில்லை. கடைசியாக, 1970களில் ஜெயபிரகாஷ் நாராயண், அந்த பொறுப்பை கையில் எடுத்தார். ஆனால், அவர் தேர்வு செய்தது போராட்டப் பாதை. அது, வன்முறைக்கு வழி வகுத்து நெருக்கடி நிலைக்கு இட்டுச் சென்றது. ஆனால் ரஜினி, போராட்ட வழிமுறைக்கு எதிரானவர். அவருடையது யாருடனும் மோதல் இல்லாத அமைதி வழி.

டெயில்பீஸ்:ரஜினியின் தார்மீக குழப்பங்களை போக்கி, தனக்கான இடம் நோக்கி அவரை நடக்க வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். தமிழகத்தின் நலனுக்காகவும், திசை தெரியாமல் தவிக்கும் ஆதரவாளர்களுக்கு வழி காட்டவும், ரஜினி உடனே முடிவை அறிவிக்க வேண்டும். பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் கவலை தீர்க்க வரும் தடுப்பு மருந்து அதுவாகத் தான் இருக்கும். இத்தனை ஆண்டுகாலமாக தனக்காக காத்திருக்கும் தமிழக மக்களுக்கு, ரஜினி செய்யக்கூடிய ஒரே நன்றிக் கடனும் அதுவே.

பேராசிரியர் ஜி.ரமேஷ்


மொபைல்: +919742221338
இமெயில்: rameshg@iimb.ac.in

-- கட்டுரையாளர்


பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் பப்ளிக் பாலிசி மையத்தில் பணிபுரிகிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (66)

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  சினிமாவுக்கு டைரக்டர் ஆக போக கூடியவர் எல்லாம் பேராசிரியர். இவர் பெங்களூரை சேர்ந்தவர் அதனால் அவர் அப்படி தான் எழுதுவார். தமிழர்கள் என்றும் ஏமாந்தவர்கள் என்று எண்ணுகின்றிர்கள். பிழைப்பு வந்தவரை எல்லாம் நாடாள அலைகின்றிர்கள்.இவர் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும் .

 • Indian - Trichy,இந்தியா

  ஒரு கல்லூரி பேராசிரியர் நடிகனை நாடாள அழைக்கிறார்..... நாம் ஏன் இன்னும் உருப்பட வில்லை என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  எத்தனை நாள்தான் இடஙக செய்தியை படிக்கவேண்டும்?

 • vnatarajan - chennai,இந்தியா

  ரஜினி ஒரு நல்ல மனிதர் நடிகர் வசதியானவர் மற்றவர்களுக்கு உதவி செய்ப்பவர் ஒரு ஆன்மீகவாதி அவ்வளவுதான் ஆனால் அரசியலில் இறங்குவதற்கு அவருக்கு அவ்வளவு துணிச்சல் கிடையாது . ரசிகர்களின் அழுத்ததினால்தான் அவர் அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று தன்னுடைய படங்களில் வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். அரசியல் குளத்தில் இறங்கினால் முதலில் அதில் நீஞ்ச தெரியவேண்டும் எண்டியார் எம்ஜியார் ஜெயலலிதா போன்றவர்கள் ஒரு கட்சியில் சேர்ந்து பக்குவமடைந்த பின்பு ஆச்சி கட்டிலில் உட்காந்தவர்கள். அவர்களால் அரசியலில் எந்த சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போடமுடிந்தது கமல் புதிதாக கட்சி ஆரம்பித்து கடந்த தேர்தலில் ஒருவர்கூட ஜெயிக்கவில்லை. ரஜினிக்கு வயதும் ஆகிவிட்டது. ஆகையால் ரஜினி அரசியலில் இறங்குவதைவிட தற்போது இருப்பதைப்போல தொடர்வதே அவருக்கு நல்லது.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தேர்தல் என்றால் புதிதாக போடப்பட்ட சாலைகளை உடைத்து மேடை போட்டு, வானங்களை திசை மாற்றி, படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை அளிக்கும்வகையில், பிணியாளிகள் சாகும் அளவுக்கு அவர்களது காது மற்றும் இருதயம் பிள்ளைக்கும் அளவுக்கு ஒலிபெருக்கி, ஜாதி மற்றும் மதத்தின் பெயர்களை வைத்து எழுத்தில் வரமுடியாத அளவுக்கு கொச்சையாக பேசி, அனைவர்களின் வீட்டு கட்டிடங்களிலும் இவர்களை தாங்களே வரைந்து கொண்டு , மறுப்பு தெரிவித்தால் அவர்களது குடும்பத்தை அடித்து நொறுக்கி முடிந்தால் அழித்தும், தொழில் செய்பவர்களின் கையிருப்புகளை ஓட்ட முடிந்த வரை சுரண்டி, இவர்களுக்கென்றே பயணியாற்றும் முழுநேர ஊழியர்களின் துணையோடு எல்லா நிலைகளிலும் எல்லோருக்கும் சொல்லொணாத்துன்பங்களைக் கொடுத்து எளிமையாக சிரித்த முகத்தோடு , மழை மற்றும் வெய்யில் பாராது தெருத்துருவாக வந்து மக்களுக்கு சேவை செய்ய வருவதுதான் தேர்தல் என்பது, இது போதாது என்று முடிவில் அனைவருக்கும் விருந்து, மதிமயங்கும குடிநீர், ஒரு நாள் செலவுக்கு தனி மனிதர் கவனிப்பு என்று இதனை ஆண்டுகள் கண்டா மக்கள் திரைப்படத்தில் வருவது போல் கடைசி நேரத்தில் காமிரா முன்பு வந்து குதித்து மக்களுக்கு இதனை ஆண்டுகள் இப்படி சேவை செய்து குடியாட்சியை முடியாட்சியாக்கி இருக்கும் சூழ்நிலையை எந்த ஒரு செலவும் இல்லாமல், எந்த ஒரு மற்ற செயல்பாடுகள் இல்லாமல் வந்தால் கைதட்டல் , விசில், என்று தியேட்டர்களில் வருவது போல் நடக்கும் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை, வாக்காளர்கள் மெய் வாய் கை இவைகளுக்கு எதுவுமே இல்லாமல் வெற்றி பெறலாம் என்று முயற்சி பாராட்டப்படவேண்டியது, போட்டியாளர்கள் வேறு, மக்கள் வேறு, வாக்காளர்கள் வேறு , இப்படி இருக்க எது வெல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம், வந்தே மாதரம்

 • Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Super Article பேராசிரியர் ஜி.ரமேஷ் சார் . மக்களின் மன ஓட்டங்களை அப்படியே பிரதிபலித்திருக்கீர்கள். மிக்க நன்றி. நல்லது நடக்கும். Please ignore the negative comments Sir

 • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

  ஒரு கல்லூரி பேராசிரியர் நடிகனை நாடாள அழைக்கிறார்..... நாம் ஏன் இன்னும் உருப்பட வில்லை என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   நீங்க சென்று மணி அடிக்கவும் . நாடாள எதுவும் சட்டம் உள்ளதா , நடிகன் நாடாள கூடாது என்று கூறப்பட்டுள்ளதா ?. மற்ற யோக்கியர்கள் நாடாண்டு சிறந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டார்களா , படித்தவன் நாடாள வேண்டும் என்றான் சிலர் , ஆனால் படித்தவனால் படிக்காத காமராஜரை போல மக்களை புரிய முடியவில்லை . , காமராஜரை போல சிறந்த தலைவன் படித்தவனில் தமிழகத்தில் நாடாள வில்லை. நாடாள மக்கள் மனமும் , நாட்டின் மீது காதலும் இருந்தால் போதும் . இதற்க்கு ரஜினியை மிஞ்சிய பிரபல மான எவனையும் அரசியலில் காணவில்லை . அடுத்தவனை காய படுத்தாத நாகரீகத்தை கற்றுக்கொள் . நீ அமெரிக்காவில் இருப்பதால் மேதை கிடையாது , சொந்த நாட்டில் பிழைக்க முடியாதவன் தான் வேற நாட்டுக்கு செல்வான் . சொந்த நாட்டில் உன்னை என்னை விட மிக சந்தோஷமாக , மிகவும் திருப்தியாக வேலை செய்யபவன் இருப்பான் . நீ அடுத்தவனை மட்டம் தட்டுவதை நிறுத்து

  • Ellamman - Chennai,இந்தியா

   இந்த பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அனைவரும் குரல் எழுப்பவேண்டும். கல்லூரி ஈமெயிலை... அலுவலக ஈமெயிலை.. தன்னுடைய அரசியல் கருத்துக்களை பரப்ப உபயோகிப்பது... குற்றம் இல்லையா??? இந்த கருத்து ஐ ஐ எம் பெங்களூரு அனுமதிக்கிறதா/ ஏற்புடையதா ???

  • raghu - nellai,இந்தியா

   நல்ல பதில்......

 • Ellamman - Chennai,இந்தியா

  //// பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் கவலை தீர்க்க வரும் தடுப்பு மருந்து அதுவாகத் தான் இருக்கும் ///// பரட்டை முழுநேர அரசியலில் இறங்கினால் கொரோனா காணாமல் போய்விடும் என்று கூறுகிறாரே

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   கொரோனா காணாமல் போகுதோ என்னவோ , உன்னை போன்ற ஆட்கள் காணாமல் போவார்கள்

 • Ellamman - Chennai,இந்தியா

  .இந்த பரட்டை சொல்லிக்கொடுத்ததெல்லாம், சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது, ஆன்மிகம் என்று குகைக்கு செல்லும் புகைப்படத்தை பத்திரிக்கையில் அடிக்கடி வரவைத்தது மட்டும் ஒன்று தான். ஆன்மீகத்தை இளமைக்காலத்தில் தேடவில்லை. இளமைக்காலத்தில் சினிமா உலகின் அனைத்து சுகபோகங்களும் அடிமையாகி, அதனால் பல பல செய்திகளில் அடிபட்டு பின்னர் ஞானம் பெற்றது போல ஒரு மாயையை ஊடகங்களின் துணையுடன் கட்டமைத்தது தான் இவர் சமூகத்திற்கு ஆற்றியிருக்கும் ஒரே பங்களிப்பு. மக்களின் அடிமன ஆசைகளுக்கு தீனி போட்டது மட்டுமே இவருடைய சேவை. குறைந்தபட்ச குடிமகனாக ஒழுங்காக வருமானவரி செலுத்தும் ஆசாமியாக கூட பார்க்கமுடியவில்லை இவரிடம்.

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   யோக்கிய சொல்றான் , நம்ம யோக்யனா இருப்போம் மற்றவனை குறை சொல்ல , ஒரு நாள் பொய் சொல்லாமல் இருக்க முடியாதவன் எல்லாம் , இவனுக்கு எல்லாம் தெரியும் அவரு வரி கட்டீனாரா இல்லையா என்று , முதலில் உன் வேலையை பார்

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  எலும்புக்காக நாய் .. அதாவது தனது உணவுக்கு குறைக்கும் வாலாட்டும் .. சாப்பிட்டபின் தனக்கு உணவளித்தவரை தாக்குபவரை கடிக்குமாம் . அப்பூடியா சங்கதி ...

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement