LOGIN
dinamalar telegram
Advertisement

‛ மேனி கொதிக்குதடி, தலை சுற்றியே வேதனை செய்குதடி'

Share


பாரதி நினைவு தினத்தில் அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க முடியாது


தேசியக்கவி மகாகவி பாரதியார் நுாற்றாண்டு நினைவு தினமான நாளை (12/09/2020) அவர் வாழ்ந்த சென்னை திருவல்லிக்கேணி வீட்டில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது உள்ளீட்ட பல்வேறு விதங்களில் அவரது நினைவுகளை அனுசரிக்கலாம் என்று நினைப்பவர்கள் அதை மறந்துவிடுங்கள்,காரணம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

மக்களை சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் உஷ்ணப்படுத்தும் ஒரே பெயர் பாரதி.உணர்சிகளை தட்டி எழுப்பி,கொஞ்சமாவது ரவுத்திரம் பழக வைப்பதும் அந்தப் பெயர்தான்.அவரது பெயரைச் சொன்னால்தான் ஒரு சக்தி நம் மூச்சிலும் பேச்சிலும் பிறக்கிறது.

அப்படிப்பட்ட மகாகவியின் நுாறாவது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.

அவர் பிறந்த எட்டையபுரம் துவங்கி அவர் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை வரை பல்வேறு இடங்களில் அவரது நினைவுகளை போற்றும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தாலும் அவர் வாழ்ந்து தனது உயிரைவிட்ட சென்னை திருவல்லிக்கேணி வீடு என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.

அரசால் பாரதியின் நினைவுச்சின்னமாக பாரமரிக்கப்படும் இந்த இல்லம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பின்பக்க வாசல் அருகே உள்ளது.உள்ளே அவரது உருவச்சிலையும் பல்வேறு அரிய புகைப்படங்களும் அவரது கவிதை கட்டுரைப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.நல்லதொரு கருத்தரங்கு கூடமும் உள்ளது.

தான் நேசித்த தமிழை பல்லக்கில் துாக்கி சுமக்க ஆசைப்பட்டார்.பாரதி வேறு தமிழ் வேறு இல்லை என்பதால் அவரது பிறந்த நாளான டிசம்பர் 11 ந்தேதி இங்கு பாரதி ஆர்வலர்களால் பாரதி படம் பல்லக்கில் வைத்து துாக்கிவரப்படுகிறது.

இதே போல நினைவு தினத்தில் அதுவும் நுாற்றாண்டு நினைவு தினம் என்பதால் ஏதாவது பெரிதாக ஏற்பாடு செய்திருப்பார்கள் அதைப்பற்றி பத்திரிகையில் எழுதலாம் என்று அங்கு சென்ற போது கட்டிடத்தின் முகப்பிலும் வெள்ளை அடிக்கும் வேலை நடந்து கொண்டு இருந்தது வாசல் பூட்டிக்கிடந்தது திறந்து கொண்டு போனது போது வெளியே வந்த பொறுப்பாளர் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை அவரது நினைவு நாளின் போது நிகழ்ச்சி எதுவும் இல்லை அன்றைய தினமும் யாருக்கும் அனுமதியில்லை என்றார்.

கொரோனா காலத்தில் பராமரிப்பு பணியை சிறப்பாக செய்திருக்கலாம் அப்படிச் செய்திருந்தால் நுாற்றாண்டு நினைவு தினத்தன்று பொதுமக்களும் பாரதி ஆர்வலர்களும் திரண்டிருப்பார்

என்ன செய்வது அவரது இறப்பில் மட்டுமல்ல இறந்த தினத்திலும் கூட துயரம் நீடிக்கிறது.

-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • RUPA - KOLKATA,இந்தியா

    NADU MARNTHA VALLAVRGALIL BHARTHI YE MUTHAL.

  • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

    நல்லவர்கள் முண்டாசு கவியை என்றும் போற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

  • N S - Nellai,இந்தியா

    தலைப்பு "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மானிடரை நினைக்கையில்" என்று இருக்க வேண்டும். ..... போசுவது எல்லாம் தமிழ், தமிழ் பற்று என்று. ......

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement