Advertisement

'முகத்தை திருப்பிக்குங்கோ!'

Share

கோவை மாநகராட்சி சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான, சத்து மாத்திரைகள் அடங்கிய, 'கிட்' வழங்கும் பணியை, சவுரிபாளையத்தில், உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, சமீபத்தில் துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், 'மாஸ்க் அணிந்தால், கொரோனா தொற்று பரவாது... எதிரே இருக்கிறவர், மாஸ்க் அணிந்திருந்தால் மட்டும், அவருடன் பேசுங்கள்; இல்லைன்னா, பேசாதீங்க...' என்றார்.கூட்டத்தில் இருந்த ஒருவர், 'மாஸ்க் போடாதவர் தானே, பேசக் கூடாது... அமைச்சர், மாஸ்க் போட்டுருக்கவங்கள பேச வேண்டாமுன்னு சொல்லுறாரு...' என, சந்தேகமாக கேட்டார்.

அங்கிருந்த நிருபர் ஒருவர், 'அண்ணே... மாஸ்க் அணியாம இருக்குறவர்கிட்ட பேசாதீங்க... முகத்தை திருப்பிகிட்டு போயிடுங்கன்னு, அமைச்சர் சொல்லுறார்... ஆமாம், நீங்க என்ன எதிர்க்கட்சியா?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement