Advertisement

'செங்கல்பட்டில் வெளிவரும் பூதம்!'

Share

'செங்கல்பட்டில் வெளிவரும் பூதம்!'

ஞாயிறு முழு ஊரடங்கால், 'கான்பரன்ஸ் காலில்' இணைந்தனர், நண்பர்கள்.''மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில, தொடர்ந்து முறைகேடுகள் நடக்கறது ஓய்...'' என, முதல் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.''என்னன்னு விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''இந்த பல்கலையில, மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளில், சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கியிருக்கா... சம்பந்தப்பட்ட, பெண் கவுரவ விரிவுரையாளர் மீது மட்டும் நடவடிக்கை பாய்ஞ்சுருக்கு ஓய்...''அந்த பெண் விரிவுரையாளர்,
'உயர் அதிகாரி ஒருவர் சொன்னதால தான், இந்த முறைகேட்டில் ஈடுபட்டேன்'னு, எழுத்துப்பூர்வமா சொல்லியிருக்காங்க... இருந்தாலும், அந்த உயர் அதிகாரி மீது மட்டும், நடவடிக்கை எடுக்கலை ஓய்...
''அதுபோல, கேரளாவைச் சேர்ந்த, மூணு மையங்களில், மாணவர்கள், 700 பேர், வீட்டில் இருந்து தேர்வு எழுதியிருக்கா... இந்த முறைகேடு விஷயத்துலயும், அந்த உயர் அதிகாரி பெயர் அடிபட்டது... இருந்தாலும், பெயரளவில் ஒரு விசாரணை குழு மட்டும் அமைச்சிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அப்போது, அவரது வீட்டில் ஓடிக் கொண்டிருந்த, ஜெயம் ரவி நடித்த, தனி ஒருவன் படத்தின் சத்தம் அதிகமாக இருந்ததால், 'டிவி'யை, 'சுவிட்ச் ஆப்' செய்தார், குப்பண்ணா.
''பணி நியமனத்துக்கு பேரம் பேசிட்டு இருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''என்ன விஷயமுன்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தமிழகத்துல இருக்குற பேரூராட்சிகளில், 2004ல், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்பினாங்க... அதன்பின், 16 வருஷங்களா, தினக்கூலி பணியாளர்களாக பணிபுரியும் அவர்களை, பணி நிரந்தரம் செய்யணுமுன்னு, நீண்ட காலமாக கோரிக்கை இருக்கு பா..
.''இப்போ, பணி நிரந்தரம் செய்யுற வேலையை, ஆளுங்கட்சி துவங்கியிருக்கு... பணி நியமனத்துக்காக, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களிடம், கணிசமான தொகை பேரம் பேசிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, தனியாருக்கு தாரை வார்த்துட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்னங்க சொல்லுறீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் வட்டம், கோவிலம்பாக்கம் கிராமத்துல, புல எண், 51/6ல நன்செய் தரிசு வகைப்பாட்டு நிலம் இருக்கு வே.
..''இதை, அப்பவே சிலர், 'லீசு'க்கு கேட்டாவ... அதிகாரிகள், கண்டிப்பா கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாவ... ஆனா, அதே இடத்துல, 1.88 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,000 சதுர அடி நிலத்தை, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அணுகு சாலையாக மாத்தி கொடுத்துட்டாவ வே...''அணுகுசாலைங்கறது, மக்கள் அதிகமாக வசிக்குற பகுதிக்கு தான் போடணும்... ஆனா இங்கே, ஒரே ஒரு தனியார் பில்டருக்கு வசதியா, அணுகுசாலை போட, அனுமதி குடுத்திருக்காவ... இதுக்காக, பெரிய தொகை, கீழ்மட்ட அதிகாரிகளுக்கு கைமாறியிருக்கு வே...''இந்த பகுதியில, ஏராளமான அரசு நிலங்களை, தனியாருக்கு தாரைவார்த்து இருக்காவ... தோண்டினா, பூதம் போல, பல, 'பகீர்' விஷயங்கள் வெளியே வரும்ன்னு, மக்கள் பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள், இணைப் பை துண்டித்தனர்.அ.தி.மு.க.,வினரை இழுக்க பா.ஜ., தயார்!

ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், அவரவர் வீட்டு மொட்டை மாடிகளில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டபடி, 'கான்பரன்ஸ் காலில்' நண்பர்கள் இணைந்தனர்.''சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணால்லா இருக்கு...'' என சலித்தபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''அண்ணாச்சி வீட்டுல சாப்பாடு சரியில்லையாங்க...'' என சிரித்தபடி கேட்டார், அந்தோணிசாமி.
.''அதெல்லாம் இல்ல... தமிழக அரசின் கேபிள், 'டிவி' தலைவரா ராதாகிருஷ்ணன், போன வருஷம் பொறுப்பேற்றப்ப, 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தாவ... இப்ப, 30 லட்சமா குறைஞ்சிட்டாவ வே...''இந்த எண்ணிக்கையை படிப்படியா உயர்த்த, பல லட்சம், 'செட்டாப் பாக்ஸ்'கள் வாங்கப்படும்னு, தலைவர் சொன்னாரு... வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2 லட்சம் அதிகரிச்சிருக்கு வே...''ஆனா, அரசு கேபிள் டிவியில இல்லை... தலைவர் தனியா நடத்திட்டு வர்ற கேபிள் நிறுவனத்துல தான், வாடிக்கையாளர்கள் அதிகரிச்சிருக்காவ... ஆனா, அரசு கேபிள் டிவியில சேர்றவங்களுக்கு குடுக்க செட்டாப் பாக்ஸ்கள் கூட இல்லை வே...'' என்றார், அண்ணாச்சி.
''கொரோனாவை காட்டி பயமுறுத்துறாங்க பா...'' என, அடுத்த ஆளாக, அன்வர்பாய் பேச ஆரம்பித்தார்.''எங்க ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார்ல, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு... இங்க பணிபுரியும் ஊழியர்கள் சிலர், பெரம்பலுார் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதிகள்ல இருக்கிற தனியார் மருத்துவமனைகளுக்கு, புரோக்கர் வேலை பார்க்கிறாங்க பா...''இங்க வர்ற கர்ப்பிணியரிடம், 'இங்க சேர்ந்தா, கொரோனா நோய் தாக்கிடும்'னு பயம் காட்டி, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிடுறாங்க... பயந்து போற கர்ப்பிணியர், கடனை, உடனை வாங்கி தனியார் மருத்துவமனைகளுக்கு போயிடுறாங்க பா..
.''அந்த மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கமிஷன் குடுத்துடுது... இதெல்லாம், மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், கண்டும், காணாமலும் இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கூட்டணி தர்மத்தை மீறிட்டதா, குமுறிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார், குப்பண்ணா.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெரும்பாலும், ஒரே கூட்டணியில இருக்கிற கட்சிகள்ல இருந்து யாராவது விலகி, அதே கூட்டணியில இருக்கற வேற கட்சிக்கு போனா, சேர்த்துக்க மாட்டா... உதாரணமா, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இருக்கோல்லியோ... காங்கிரஸ் புள்ளி யாராவது, தி.மு.க.,வுக்கு வந்தா, சேர்த்துக்க மாட்டா ஓய்..
.''ஆனா, அ.தி.மு.க., கூட்டணியில இருக்கற பா.ஜ.,வைச் சேர்ந்த, அந்தக் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சீனிவாசன், சமீபத்துல, அ.தி.மு.க.,வுல இணைஞ்சார்... இது, பா.ஜ.,வினர் காதுல புகையை வரவழைச்சுடுத்து ஓய்..
.''இதுக்கு பதிலடியா, தி.மு.க.,வினரை இழுத்த மாதிரியே, அ.தி.மு.க.,வுல அதிருப்தியில இருக்கறவாளை, பா.ஜ.,வுல சேர்க்க, அந்தக் கட்சி முடிவு பண்ணி இருக்கு... பா.ஜ.,வுல சேர விரும்பறவாளிடம் பேச்சு நடத்திண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''போற போக்கை பார்த்தா, தேர்தலுக்குள்ள கூட்டணி முறிஞ்சிடும் போலிருக்கே...'' என்றபடியே, அண்ணாச்சி, 'கட்' செய்ய, மற்றவர்களும் இணைப்பை துண்டித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement