Advertisement

கோஷத்துல ஆரம்பிக்கும் அரசியல்!

Share

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியில், அ.தி.மு.க., வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.தெற்கு ஒன்றிய செயலராக நியமிக்கப்பட்ட, ராமலிங்கம், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், பழக்க தோஷத்தில், பழைய ஒன்றிய செயலரான, ஏகாம்பரத்தின் பெயரை சொல்லி, கோஷம் போட்டதால், ராமலிங்கம் திகைத்துப் போய் நின்றார்.அருகில் இருந்த, தொண்டர் ஒருவர், 'பழக்க தோஷம் போக, இன்னும் கொஞ்சம் நாட்களாகும்... நீங்க கவலைப்படாதீங்க...' என, ஆறுதல் கூறினார்.

அங்கிருந்த நிருபர் ஒருவர், 'கோஷத்துல தான், அரசியலே ஆரம்பிக்கும்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாலு பேர் கோஷம் போட வேண்டும், தன்னைச் சுற்றி பத்து பேர் இருக்க வேண்டும் என்று தானே இந்தத் தொற்றுக் காலத்திலும் பாவம் பந்தா காட்டுகிறார், அவரை இப்படி வாரி விட்டாரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement