Advertisement

'டவுட்' தனபாலு

Share

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மத்திய அரசே, 'இ- - பாஸ்' நடைமுறை கட்டாயம் இல்லை என, அறிவித்த பிறகும், அ.தி.மு.க., அரசு மட்டும், இந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவது, மக்களுக்கு எந்த விதத்திலும் தீர்வாகாது. 'மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி செயல்படுகிறோம்' என கூறும் முதல்வர், இ- - பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை?


'டவுட்' தனபாலு: மத்திய அரசு சொல்படி கேட்டு, இ - பாஸ் நடைமுறையை, இ.பி.எஸ்., அரசு ரத்து செய்தால், 'மத்திய அரசின் அடிமை அரசு; எடுபிடி அரசு' என்பீர்கள். அதனால் தான், இ - பாஸ் விஷயத்தில், இ.பி.எஸ்., அரசு, கெடுபிடியாக இருக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது!

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சென்னை அருகே உள்ள கிடங்கில், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. லெபனான் விபத்திற்கு இந்த வெடிமருந்து தான் காரணம். இதை உடனே அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஒரு விபத்து, ஒரு நாட்டில் நடந்தால், அதுபோல எல்லா நாடுகளிலும் நடக்க வேண்டும் என்ற நியதி இல்லை. எனினும், லெபனான் விபத்து நடந்த மறுநாளே, சென்னையை பாதுகாக்க நீங்கள் விடுத்த அறிக்கை, மக்கள் மீதான உங்கள் பாசத்தை, 'டவுட்'டே இல்லாமல் வெளிப்படுத்துகிறது!

***

தி.மு.க.,விலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்துள்ள கு.க.செல்வம்: தி.மு.க.,வில் இருக்க பிடிக்காததால், பதவியை துறக்க முடிவு செய்தேன். மாவட்ட செயலர் பதவி கொடுக்காதது, என் அதிருப்திக்கு காரணம் இல்லை; குடும்ப அரசியல் தான் காரணம். பணம் இல்லாததால், தி.மு.க.,வில் ஓரம் கட்டப்பட்டேன். உழைப்பவர்களுக்கு கட்சியில், மரியாதை இல்லை.

'டவுட்' தனபாலு: ஒரு கட்சியிலிருந்து, இன்னொரு கட்சிக்கு தாவுவோர், வழக்கமாக சொல்லும் காரணம் தான் இது. அ.தி.மு.க., - தி.மு.க., என பல களம் கண்ட நீங்கள், பா.ஜ.,வில் எத்தனை நாட்கள் இருப்பீர்களோ என்ற, 'டவுட்' அக்கட்சியில் உள்ளோருக்கு வந்துள்ளது. ஏனெனில், பல மரத்து பறவைகளுக்கு, பா.ஜ., இப்போது அடைக்கலம் கொடுத்து வருகிறது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    வாழ்வில் ஒருமுறை வரும் விசேஷங்களுக்குகூட போக முடியவில்லை சென்னையில் இருந்து கடலுர்செல்ல சுலபமாக Epass கிடைக்கிறது நாகை செல்ல கிடைப்பது இல்லை ரத்த சம்பந்தமான உறவு திருமணத்துக்கு எட்டு முறை விண்ணப்பித்தும் மறுக்கப்பட்டு வருகிறது விமல் சூரி உதயநிதி Epass இல்லாமல் உலகம் சுற்ற அனுமதிக்க படுகிறார்கள் ஊழல் நடை பெறுகிறது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இ பாஸ் முறையால் எவ்வளவு பேர் லட்சாதிபதி ஆகியுள்ளார் அவர்களெல்லாம் ‘கவனிக்க’ இருக்கையில், அதை நீக்க அரசுக்கு பைத்தியமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement