Advertisement

பிரியங்கா வீடு மாறியதால் அனுமதி கிடைக்குமா?

Share

'டில்லிக்குள்ளேயே ஒரு நல்ல வீடாக பார்த்து, குடியேறி இருக்கலாம். அவங்களை பார்க்க, இனி ஹரியானா மாநிலத்துக்குப் போக வேண்டியிருக்குமே' என, முணுமுணுக்கின்றனர், காங்., பொதுச் செயலர் பிரியங்காவின் விசுவாசிகள்.

பிரியங்கா, டில்லியில், வி.வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் லுட்டியன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் தான், இவ்வளவு காலமாக வசித்து வந்தார். உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து வரும் கட்சி நிர்வாகிகள், எப்போதுமே இந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக காணப்படுவர். மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், அரசு பங்களாவை, சமீபத்தில் காலி செய்த பிரியங்கா, ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விட்டார்.

இந்த குடியிருப்பில், பிரமாண்ட உடற்பயிற்சி கூடம், அழகு நிலையங்கள், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், கோல்ப் மைதானம் என, அனைத்து வசதிகளும் உள்ளன. டி.எல்.எப்., ரியல் எஸ்டேட், ஹீரோ சைக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிபர்கள் தான், பிரியங்கா வீட்டிற்கு பக்கத்து வீடுகளில் வசிக்கின்றனர். புது வீட்டுக்கு குடியேறியதில், பிரியங்கா மகிழ்ச்சியாக இருந்தாலும், உ.பி., மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், ரொம்பவே கவலைப்படுகின்றனர்.

'பிரியங்காவை பார்க்க வேண்டுமானால், இனி, குருகிராமுக்கு செல்ல வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு என்பதால், எங்களைப் போன்ற கட்சி நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டார்கள்' என, கலக்கத்துடன் கூறுகின்றனர், கட்சி நிர்வாகிகள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement