Advertisement

'ஜூம் ஆப்'பில் வேலை பார்க்கும் விருதுநகர்காரன் நான்!

Share

வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், ஒரே நேரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுடன், 'வீடியோ காலில்' பேச உதவும், 'ஜூம் ஆப்' நிறுவனத்தில் பணியாற்றும் வேல்சாமி சங்கரலிங்கம்: பத்தாம் வகுப்பு வரை, விருதுநகரில் தான் படித்தேன். 11, 12ம் வகுப்புகளை, ஏற்காடில் உள்ள ஒரு பள்ளியிலும், இன்ஜினியரிங்கை, கிண்டி பொறியியல் கல்லுாரியிலும் படித்தேன். அமெரிக்காவில், முதுகலை படிப்பை முடித்தேன்.

நெட்வொர்க்கிங் கம்யூனிகேஷன் துறையில் தான் வேலை. நான் வேலை செய்து கொண்டிருந்த சிறிய நிறுவனத்தை, 'வெபெக்ஸ்' என்ற வீடியோ கான்பரன்சிங் நிறுவனம் வாங்கியது. அங்கு தான், 'ஜூம்' நிறுவனத்தின் நிறுவனரான எரிக் யுவானை சந்தித்தேன். சில காலம் கழித்து, ஜூம் வீடியோ அப்ளிகேஷன் நிறுவனத்தை, எரிக் துவக்கிய போது, என்னையும், தன்னுடன் பணியாற்ற வருமாறு அழைத்தார். அவர், என் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருடன் இணைந்து விட்டேன்.

கொரோனா தொற்று, பல துறைகளை அசைத்து பார்த்துள்ளது போல, தகவல், தொழில்நுட்பத் துறையையும் பாதித்துள்ளது. இந்த பாதிப்பு, ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு விதமாக இருக்கிறது. முன்பெல்லாம் வேலை பார்ப்பதற்கு, அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதை மாற்ற வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. சாதாரண நாட்களில், அந்த முறையை மாற்ற வேண்டும் என யார் நினைத்திருந்தாலும் மாற்றியிருக்க முடியாது. அதை, கொரோனா செய்து விட்டது.

கடந்த, நான்கைந்து மாதங்களாக, கோடிக்கணக்கானோர், வீட்டிலிருந்து தான் பணியாற்றுகின்றனர். நானும், அலுவலகம் போய், சில மாதங்கள் ஆகிறது. வீட்டிலிருந்து தான் பணியாற்றுகிறேன். என்னைப் போலவே, எங்கள் நிறுவனத்தின் பெரும்பாலானோர், வீட்டிலிருந்து தான் பணியாற்றுகின்றனர்.

அதுபோல, தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரு நிறுவனங்களில் தான் இயங்க வேண்டும் என்ற நியதி தகர்க்கப்பட்டு விட்டது. இதனால், பெருநகரங்களில் மக்கள்தொகை குறையும். எங்களின் ஜூம் நிறுவனம், சீன நிறுவனம் என தவறாக பலரும் கருதுகின்றனர். எங்கள் நிறுவனர் எரிக் சீனர். எனினும், அவர், அமெரிக்காவில் செட்டில் ஆகி, பல ஆண்டுகள் ஆகி விட்டன.

ஜூம், நுாற்றுக்கு நுாறு, அமெரிக்க நிறுவனம் தான். அதுபோல, எங்களின் தகவல்கள், வீடியோக்கள், சீனா வழியாக செல்கின்றன எனக் கூறுவதும் தவறு. முழு கட்டுப்பாடும், எங்களிடம் தான் உள்ளது. நாங்கள் இந்திய அரசுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • svs - yaadum oore,இந்தியா

  //....திராவிடத்தால் படித்தவர் , ஹிந்தி சமஸ்கிருதம் படிக்காமையே முன்னேறியவர்......//....ஊர் உலகத்தில் எந்த தமிழ் நாட்டுக்காரர் இருந்தாலும் அவர் திராவிடத்தால் படித்தவர் போலுள்ளது .....இதை விட ஆந்திர , தெலுங்கானா வை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அதிகம் உண்டு....அவர்களும் திராவிடத்தால் படித்தார்களா? ....ஏற்காடில் உள்ள பள்ளி யில் யாரால் படிக்க முடியும் அங்கு எத்தனை மொழி கற்றுத்தருகிறார்கள் என்று தெரியுமா ??.

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  ஜூம் அப்ப்ளிகேஷன் டேட்டா சென்டர் மற்றும் சர்வர் சீனாவில் உள்ளதை பற்றி சொல்ல இந்த விருதுநகர் காரர் ஏன் மறைகிறார். சீன அரசின் தந்திரங்களில் முக்கியமானது, கடந்த இருப்பது வருடங்களில் தான் நிபுணர்களை உலகம் மெழுவதும் அனுப்பி அவர்களை அந்தந்த நாடுகளின் குடிமகனாகவே மாறி தன் உளவு வேலைகளை செய்துவருகிறது. ஜூம் நிறுவனர் எரிக் அடிப்படையில் சீனர், சீன நாட்டை சேர்ந்தவர். எனினும், அவர், அமெரிக்காவில் செட்டில் ஆகி, பல ஆண்டுகள் ஆகி விட்டன என வேல்சாமி சங்கரலிங்கம் மே கூறுகிறார்.

 • Layman - Chennai,இந்தியா

  என்னதான் சொன்னாலும் சீனனை முழுமையாக நம்புவதற்கில்லை...

 • Girija - Chennai,இந்தியா

  வைகோ ஊராச்சே நம்பலாமா ?

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  திராவிடத்தால் படித்தவர் , ஹிந்தி சமஸ்கிருதம் படிக்காமையே முன்னேறியவர்

  • Sankaran - chennai,இந்தியா

   மற்ற மாநிலத்தில் எப்படி... அவனும் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement