Advertisement

'கொரோனா பார்ட்டி' தான் இனி!

Share

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும், மருத்துவ முகாம் பணிகளை, கலெக்டர் விஜய கார்த்திகேயன், சமீபத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'ஏற்றுமதி நகரமாக இருக்கும் திருப்பூருக்கு, பிற மாவட்டங்களில் இருந்து தான், 'கொரோனா' இறக்குமதி ஆகி உள்ளது. அதனால் தான், 'இ - பாஸ்' வழங்க கட்டுப்பாடு விதித்துள்ளோம். சிலர், 'பர்த்டே பார்ட்டி, பேச்சுலர் பார்ட்டி' என்றெல்லாம், 'இ-பாஸ்' கேட்கின்றனர்...' என்றார்.

அங்கிருந்த, குறும்புக்கார நிருபர் ஒருவர், 'இவங்களுக்கு, 'இ - பாஸ்' கொடுத்தால், நேரா, 'கொரோனா' பார்ட்டிக்குத் தான் போக வேண்டியிருக்கும்...' என, 'கமென்ட்' அடிக்கவும், சுற்றியிருந்தோர் வேதனை முகம் காட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆனால் அமைச்சர்கள் கொரானாவை வென்ற மஹா பெரும் நிகழ்ச்சிக்கு ஆயிரம் பேர் வரலாம் . அங்கெல்லாம் கொரானா எட்டிக் கூடப் பார்க்காது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement