Advertisement

சோதனை அல்ல மரணமே அளவுகோல்!

Share

கொரோனா வைரசின் பாதிப்புகளை அளப்பதற்கு சரியான புள்ளி விபரம் எது? மும்பையிலுள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை மருத்துவர்களின் கருத்துப்படி, மருத்துவ சோதனைகளின் எண்ணிக்கையை விட, மரணங்களின் எண்ணிக்கையே சரியான அளவுகோல்.

இந்தக் கருத்தை முன்வைக்கும் அவர்களது ஆய்வுக் கட்டுரை, 'ஐ.ஜே.எம்.ஆர்'., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளிவர உள்ளது.அமெரிக்காவில் சில நாட்கள் முன்பு வரை கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள், 1.5 லட்சத்தை தாண்டிவிட்டன. அதுவே இந்தியாவில், 40 ஆயிரம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பனிப் பிரதேசமுள்ள நாடுகளில், தோள், கால், தொடைகள் சந்திக்கும் பகுதி, ஆகியவற்றில் ரத்தம் உறைவதாலேயே கொரோனா தொற்றியோரில் அதிகம் பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், பூமத்திய ரேகைக்கு அருகே, வெப்பமான பகுதியில் வசிக்கும் நமக்கு இது போன்ற குளிர் தாக்குதல் இருக்காது என்பதால், இத்தகைய மரணங்கள் குறைவாகவே நேர்ந்துள்ளன என, டாடா மெமோரியல் மருத்துவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement