Advertisement

அப்பாவை ஒருமுறை தான் பார்த்துள்ளேன்!

Share

பா.ஜ., இளைஞரணி மாநில துணைத் தலைவராகியுள்ள, சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா: எல்லா பெண் குழந்தைகளுக்கும், அப்பா என்றால் பிடிக்கும். எனக்கும், என் தந்தை வீரப்பன் மீது உயிர்.

எனினும், அவருடன் சேர்ந்து வாழவோ, பழகவோ எனக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஒரு மகளாக, அவருடன் நிறைய பேச வேண்டும் என விரும்பினேன்; நடக்கவே இல்லை.சிறு வயதில், ஈரோடு மாவட்டம் கோபிநத்தம் கிராமத்தில், தாத்தா - பாட்டியுடன் இருந்த போது, ஒருமுறை தான், என் தந்தை வீரப்பனை சந்தித்துள்ளேன்.

ஒரு மாலை பொழுதில், காட்டில் அவரை சந்தித்தேன். என்னை பார்த்ததும், அவர் என்னை கட்டித் தழுவி, கண்ணீர் மல்கினார்.'நீ நன்றாக படித்து, டாக்டர் ஆக வேண்டும்; கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும்' என்றார். இப்போதும் அவர் சொன்னது, பசு மரத்து ஆணி போல, மனதில் நன்றாக பதிந்துள்ளது.

ரொம்ப சின்ன குழந்தையாக இருந்தபோதே, நானும், என் தங்கை பிரபா விஜயலட்சுமியும், வேறு வேறு நகரங்களில், ஹாஸ்டல்களில் தங்கி படித்தோம். அப்போது என் தந்தை பற்றியோ, என் தாய் பற்றியோ எங்களுக்கு தெரியாது. ௭ வயதாக இருக்கும் போது தான், அம்மாவையே பார்த்தேன்.

அப்பாவை போலீசார் தேடுகின்றனர் என்பதெல்லாம், எனக்கு, அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை தெரியாது. அதுபோல, வீரப்பன் மகள் நான் என்பதும், எனக்கு தெரியாது. விபரம் தெரிந்த பின், பலரும் என்னுடன் அன்பாக பழகினர்; அதற்கு காரணம், என் தந்தை என்பதை அறிந்து கொண்டேன்.

நான் வளர்ந்த இடத்திலும், என் தந்தை மீதுள்ள மதிப்பால், எனக்கு நல்ல பெயர்; நன்றாக பார்த்துக் கொண்டனர்.எனக்கு, 14 வயது இருக்கும் போது தான், எனக்கொரு தங்கை இருக்கிறார் என்பதே தெரியும். அந்த அளவுக்கு, ஹாஸ்டலில் தனியாக வளர்ந்தேன். என் அம்மா முத்துலட்சுமி, போலீஸ் விசாரணை, வழக்கு, வாய்தா என, அலைந்து கொண்டிருந்தார். எல்லாரையும் போல, அப்பா - அம்மாவுடன் சேர்ந்து வாழத் தான் விரும்பினேன்; அந்த வாழ்க்கை அமையவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், எங்கள் உறவினர், சாய் சுரேசும் அழைத்ததால், பா.ஜ.,வில், கடந்த பிப்ரவரியில் சேர்ந்தேன். எனக்கு இவ்வளவு பெரிய பதவியை கொடுத்துள்ளனர். அதற்காக, எங்கள் கட்சியின் தொண்டர்களிடம், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எவ்வித பலனையும் எதிர்பாராமல், லட்சக்கணக்கான தொண்டர்கள், எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பா.ஜ.,வில் பணியாற்றி வருகின்றனர்; அவர்களின் உழைப்பு, திறமை எனக்கு புரியும். அனைவரின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்றுவேன். தமிழகத்தில், பா.ஜ.,வை வளர்க்க பாடுபடுவேன்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (38)

 • kumaru - TIRUCHIRAPPALLI,இந்தியா

  உனக்கு என் இந்த கேவலமான வேலை உன் சமூகத்திற்கு அரசியல் வாதிகளால் எவ்ளோ கொடுமை நேர்ந்தது அதை மனதில் வைத்து சமூக முன்னேற்றம் வேண்டி சோசியல் சேவை பானுவன்னு பார்த்த விலை போய்ட்டிய

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வீடணன் யாருடைய சகோதரன் என்றறிந்துமே ஸ்ரீ ராமர் அவருக்கும் அடைக்கலம் கொடுத்து உற்றவனாக்கிக்கொண்டாரே .குலம் கோத்திரம் பார்த்து சேர்ப்பது பகுத்தறிவுக்கு எதிரானதாச்சே . பின் ஏன் பகுத்தறிவு செம்மல்கள் எதிர்க்கிறார்கள் ?

 • S. Venugopal - Nagaland,இந்தியா

  கட்சியில் பல ஆண்டுகளாக இருந்த அடிப்படை தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகள்கூட வழஙக முன் வர தயக்கம் ......... ஆனால் பாண்டி விளையாட்டில் தாண்டி வருபவர்களுக்கு பதவி தருவதில் துரிதம்.....

 • பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா

  கருணாநிதி புள்ளைகளே அரசியலை தைரியமாக சுத்திகிட்டு இருக்கும் போது உனக்கென்னம்மா...நல்ல பணிகள் செய்து மக்களிடமிருந்து உன் தந்தையின் அவ செயலுக்கு பரிகாரம் செய்துகொள்ளம்மா

  • s.rajagopalan - chennai ,இந்தியா

   சூப்பர் விஞ்ஞான ரீதியாக கொள்ளை அடித்தாலும் , முரட்டுத்தனமாக கொள்ளை யடித்தாலும் கொள்ளை கொள்ளை தான் என்ன செய்ய? உன் அப்பன் போல் 'புகழ்' பெறாதே .. அப்பனை புகழ்ந்து பேசாதே.. அப்பன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்காதே,அவர் மீது மரியாதையை உன்னுடன் வைத்துக்கொள் .. அரசியலில் வெற்றி பெற உனக்கு இதெல்லாம் வெகு முக்கியம் .. ஜாக்கிரதை

 • Guna - Chennai,இந்தியா

  வீரப்பன் மகள் இல்லை என்றால் ஒரு தேசிய கட்சியில் இவருக்கு இந்த இடம் கிடைத்திருக்குமா ? பாவம் இந்த கட்சியின் நிலைமை இப்படி ஆயிடுச்சே விவஸ்தை கெட்ட விளம்பர அரசியல்.

 • Tamilnesan - Muscat,ஓமன்

  பொதுவாக கட்சி ஆரம்பித்து தான் கொள்ளை அடிப்பார்கள். ஆனால், ஐயகோ.....இவர் தந்தை கொள்ளை முடித்தபின் மகள் கட்சியில் சேருகிறார். இவர் வித்தியாசமானவர். ஒரே மந்தையில் இரண்டு ஆடுகள் .....வேறு வேறு பாதையில் சென்றன. இரண்டும் சந்தித்த போது ........... பேச முடியவில்லையே............

  • chinnathambi 2 - chennai,இந்தியா

   அதி புதிதிசாலி வெங்கடேச பண்ணையாரின் மனைவியை மந்திரியாக்க வில்லையா?

  • Thangaraj S - Pattabiram, Chennai,இந்தியா

   உன் வீட்ல கொள்ளை அடிச்சாரா?

 • Sampath Kumar - chennai,இந்தியா

  பாத்து ஆத்தா ஏற்கனவே நீ சந்தன கடத்தல் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கே இப்போ அங்கே நித்ரேய கடத்தல் வேலை செய்ய ஆளு தேடுறாங்க மாட்டிக்காத்த

  • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,இந்தியா

   Sampath Kumar ஓசி கோட்டர் அடிமையே அவரை பற்றி பேச ஒனக்கு என்ன தகுதி இருக்குனு சொல்லு

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இரெண்டு தடவை பார்த்திருந்தால் பிஜேபி கட்சியில் சேர்ந்திருக்க மாட்டார்

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  சாம்பல் பூலந்தேவி அரசியலில் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் ... தமிழ்நாட்டில் ரெண்டு மூணு பெண் MP க்களும் பாராளுமன்றத்தில் இருந்தார்கள் ..சிலர் இருக்கிறார்கள் ...

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  "எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்" என்று கண்ணபிரானை குறிப்பிட்டாலும் என்ன சாதி என்றும் எங்கிருந்தோ வந்தவள் என்றெல்லாம் எண்ணாமல் பொறுப்புக்களை ஒப்படைத்தது ஒரு புறம். 'தொண்டனாக தொடங்கி, தொண்டனாக வளர்ந்து, தொண்டனாகவே உழைத்து மறையும் தொண்டர்கள் நிறைந்த கட்சிகள்போல் இல்லாது தொண்டர்களுக்கும் காலம் உண்டு என்று கருதும் கட்சியில் வளர்க, வாழ்க பல்லாண்டு வளமுடன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement