Advertisement

கந்தன் வேல் வரையும் போட்டி: களம் இறங்கிய மாணவர்கள்

Share

கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த, கந்தனின் வேல் வரையும் போட்டியில், பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்று, தாங்கள் வரைந்த படங்கள், வீடியோக்களை அனுப்பியுள்ளனர். வெற்றியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

'தினமலர்' நாளிதழ் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் வகையில், கந்தனின் வேல் வரையும் போட்டி, நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இல்ல நுழைவாயிலில் வேல் படம் வரைந்து, அழகுற வண்ணம் தீட்டலாம் என்றும், 'சார்ட்'டில் வரைந்து அதை தங்கள் வீட்டுச்சுவரில் ஒட்டலாம் என்றும், அதை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஏராளமான மாணவ, மாணவியர், உற்சாகத்துடன் வேல் படம் வரைந்து, வண்ணம் தீட்டிய படங்கள், வீடியோக்களை, நேற்று காலை முதலே குறிப்பிட்ட, 'டெலிகிராம்' எண் வழியாக, அனுப்ப ஆரம்பித்தனர். குறித்த நேரத்தில் மட்டும் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வந்து சேர்ந்து விட்டன.அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலனை செய்து, வெற்றியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. விரைவில், வெற்றி பெற்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement