Advertisement

ஒரு முட்டை அவசியம் சாப்பிடணும்!

Share

உணவு மூலம் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்பது தான் பலரின் கவலையாக இருக்கிறது. அது பற்றி, பிரபல, 'டயட்டீஷியன்' ஷைனி சுரேந்திரன்: அரிசியுடன் ஒப்பிடும் போது, கோதுமையால் ஆன சப்பாத்தி, உடலுக்கு நல்லது தான். எனினும், தினம் ஒரு வேளை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடை, பசிக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்றுசப்பாத்தி எடுத்துக் கொள்ளலாம். கோதுமைக்கு பதில், சிறு தானியங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.தினமும் பால் அருந்துவதால், பிரச்னை இல்லை. டீ, காபி உடலுக்கு தீங்கானது தான். தவிர்க்கவே முடியாது எனக் கருதுவோர், அதிகபட்சம், இரு வேளை எடுத்துக் கொள்ளலாம். மாலை, 4:00 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோல, வெள்ளை சர்க்கரை, உடல் நலத்திற்கு நல்லதல்ல. தவிர்க்க முடியாதவர்கள், ஒரு ஸ்பூன் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

அதற்குப் பதில், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், காய்கறிகள், பழங்கள், கீரை, பருப்பு வகைகளை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சிறு தானியங்களை, கூழ் வடிவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த நோயாளிகள், தினமும், 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்; இதனால் உடல் எடை அதிகரிக்காது. யோகாசனம் அவசியம் செய்ய வேண்டும்.

குழந்தைகள், வளரும் இளைஞர்கள், ஒரு நாளைக்கு, இரண்டு, மூன்று முட்டைகள் கூட சாப்பிட லாம். நடுத்தர வயதினர், வயதானோர், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டையில் அதிக புரதம் உள்ளது. முடி நன்றாக வளரும்.இறைச்சியில் அதிக புரத சத்து உள்ளது. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், தினமும், கால் கிலோ அளவுக்கு, உணவில் இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம். பிறர், வாரத்தில் ஒரு நாள் சிக்கனும், 10 நாட்களுக்கு ஒரு நாள் மட்டனும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு, வாரத்திற்கு மூன்று நாட்கள் சிக்கன், இரண்டு முறை மட்டன் சாப்பிடலாம்.எனினும், வயதா னோர், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் மருத்துவரின் ஆலோசனைபடி, இறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்திற்கு மிகவும் அவசியமான, வைட்டமின் - டி, சூரிய ஒளி மூலம் நமக்கு இலவசமாக கிடைக்கிறது.

காலை, 6:00 - 10:00 அல்லது மாலை, 4:30 - 6:00 மணியில், சூரிய ஒளி நன்றாக உடலில் படும்படி பார்த்துக் கொண்டால், வைட்டமின் - டி சத்து கிடைக்கும். இதை தவிர்த்து, பால், மீன், காளான் போன்ற உணவுகளை சேர்த்துக் கொண்டால், வைட்டமின் - டி சத்து கிடைக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா

    அது சரி. சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்ன சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கலாம். அல்லது சைவம் சாப்பிடுபவர்களுக்கு உணவு முறை தேவையில்லை என்று விட்டுவிட்டார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement