Advertisement

பொள்ளாச்சியில் 9ம் தேதி கந்த சஷ்டி கவச நிகழ்ச்சி

Share

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கருப்பர் கூட்டத்தை கண்டித்து, கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி வரும், 9ம் தேதி நடக்கிறது.கந்த சஷ்டி கவசத்தின் அருமையை உணர்த்தும் வகையில், தமிழகம் முழுவதும் வரும், 9ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது.பொள்ளாச்சியில் இந்து அமைப்புகள் சார்பில், மக்களிடம் நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.வேல் வழிபாட்டு குழுவின் மாவட்டத்தலைவர் செல்லக்குமார் கூறுகையில், ''வரும் 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, வீட்டு வாசலில், உரிய சமூக இடைவெளியுடன் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வீட்டின் முன் வேல் வரைந்து பூஜை செய்து, கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். முருகனின் பெருமையை உணர்த்த வேண்டும்,'' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement