Advertisement

கந்த சஷ்டி பாராயணம் கொடியேற்று விழா

Share

பெ.நா.பாளையம்:கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கந்தசஷ்டி பாராயண துவக்க விழாவையொட்டி, பிரம்மாண்ட வேலில், கொடியேற்று விழா நடந்தது.இம்மாதம், 9ம் தேதி இந்து கடவுள் முருகன் பெருமையை போற்றும் வகையில், அனைவரும் தங்களது வீடுகளின் முன், வேல் படம் வரைந்து, கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் துவக்கவிழா, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது.இதில் பிரம்மாண்ட வீரவேல் கம்பத்தில், பா.ஜ., கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், பா.ஜ., கட்சியின், கோவை மாவட்ட செயலாளர் விவேகானந்தன், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோகேஷ், நரசிம்மநாயக்கன்பாளையம் நகர தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement