LOGIN
dinamalar telegram
Advertisement

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க... பேசிய வாய்தனை பெருவேல் காக்க...! முருகனை நினைத்து உருகுகிறார் ஹரிகரன்

Share

''நாம் இன்றைக்கு கொரோனா காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நோய் காலத்தில் முக கவசம் மட்டுமல்ல, கந்த சஷ்டி கவசமும் நம்மை காக்கும்,'' என்கிறார் முருக பக்தர் ஹரிகரன்.'காக்க' என இறைவனை வேண்டிக் கொள்ளும் பாடல்கள், கவசம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த கவசப்பாடல்களில், பால தேவராய சுவாமியால், 19ம் நுாற்றாண்டில் இயற்றப்பட்ட, 'கந்த சஷ்டி கவசம்' பாடல், முருக பக்தர்களால் அதிகம் போற்றி துதிக்கப்படும் பாடலாகும். பக்தர்களுக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் இந்த பாடல்களை, முருகன் மீது பக்தி கொண்ட பல கோடி பக்தர்கள், நோய் தீர்க்கும் மருந்தாக நினைத்து தினமும் துதிக்கின்றனர்.

கோவைபுதுாரில் வசித்து வரும், ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி ஹரிகரன், கந்த சஷ்டி கவசப் பாடலை, தனது பள்ளி பருவம் முதல் பாடி வருகிறார்.இவர், 1920ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பழமையான கந்த சஷ்டி கவச நுால்களை பாதுகாத்து வைத்திருக்கிறார். கந்த சஷ்டி கவசத்தின் மகிமை குறித்து கூறும் ஹரிகரன், ''முருகன், உலகம் முழுவதும் வாழும், இந்து மக்களுக்கான கடவுள். எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்து, முருகனை வணங்கி வருகிறோம்,''''என் தாத்தா காலத்தில் வீட்டில் படிக்கப்பட்ட கந்த சஷ்டி கவச பாடல்களை, இன்றைக்கு என் பேரக்குழந்தைகளும் படிக்கின்றனர். பழனி முருகனும், ஐயப்பனும் நேருக்கு நேர் பார்த்து கொள்ளும் திசையில், அமைக்கப்பட்டு இருப்பதாக ஐதிகம் உள்ளது. கேரள மக்கள், ஐயப்பனுக்கு இணையாக முருகனையும் வணங்குகின்றனர்,''

''கந்த சஷ்டி கவசம், மிகவும் சக்தி வாய்ந்த பாடல். மனிதனின் ஒவ்வொரு அங்கமும் நோய்படும் போது, இந்த பாடலை பாடினால் நோய் மறைந்து போகும். ஏறிய விஷம் கூட இறங்கும். நான் கவச பாடலின் மகிமையை, அனுபவித்து சொல்கிறேன். இந்த கொரோனா நோய் காலத்திலும், நாம் வாய்விட்டு சொல்லும் மந்திரம், கந்த சஷ்டி கவசமாகதான் இருக்க வேண்டும்; நம்பிக்கையுடன் பாடினால், அதுவே மருந்தும் கூட,'' என்கிறார் பரவசத்துடன்.'

மீண்டும் சூரசம்காரம்'ஹரிகரன் கூறுகையில், ''கருப்பர் கூட்டத்தினர் கடவுளை ஆபாசமாக பேசி, அரசியல் செய்கின்றனர். கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தி, பிழைக்கின்ற இந்த கூட்டத்தை, இனியும் மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். பார்த்துக் கொண்டிருங்கள். மீண்டும் சூரசம்காரம் துவங்கும்,'' என, அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் இந்த முருக பக்தர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • 234 லட்சியம் 180 நிச்சயம் வெற்றி - மதராஸ்:-),இந்தியா

  பாவம் இவர் இப்போதான் உருகுகிறார் எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து நாங்கள் கந்தரலங்காரம் கந்தர் அனுபூதி என்றும் உள்ளம் உருகுதிய என்று உருகிக்கொண்டு தான இருக்கிறவம் இந்த ...கள் சொல்லி உருக்கவில்லை

 • Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா - சென்னை,இந்தியா

  முருகன் ஹிந்து கடவுள் அல்ல, தமிழரின் கடவுளும் இல்லை, தமிழர்கள் உருவ வழிபாட்டை கொண்டவர்கள் அல்லர், இறைவனின் பெயர்களில் ஒன்று அழகு , அதை உருவகப்படுத்த பயன்பட்டதே முருகன், மேலும் முருகன் என்ற தமிழ்கடவுளுக்கு எதற்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு?

  • இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்

   அடுத்தவரின் இறை நம்பிக்கையில் தலையிடாமல் இருப்பதே அறிவுடமை.

  • Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா - சென்னை,இந்தியா

   கல்லை கடவுள் என்பது அறிவுடைமையா?

 • samvijayv - Chennai,இந்தியா

  இந்த உலகத்தில் வெல்லமுடியாத சக்தி ஒன்று அதுதான் 'நம்பிக்கை' இதன் பலம் என்னவென்று சொல்லுவது., மன்னிக்கவும் நாசகார 'ஹிட்லர்' ஓர் உதாரணம் சொல்லலாம்.

 • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

  "மீண்டும் சூரசம்காரம் துவங்கும்" துவக்க முடிஞ்சவரு இன்னைக்கு கொரோனாவால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கார்

  • 234 லட்சியம் 180 நிச்சயம் வெற்றி - மதராஸ்:-),இந்தியா

   இது என்னால் கமல் படம் இரண்டாம் பாகமா என்ன , இப்போ இல கணேசு ராம்நாராயன் தான் கூரான அட்மிட் அப்போ கூட வீரமணி சீக்கிரம் குணமடைய உருகியுள்ளார் கவலை வேணாம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement