Advertisement

'தினமலர்' செய்தி எதிரொலி: பால தடுப்பு சுவர் புதுப்பிப்பு

Share

கிணத்துக்கடவு:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டி சிறு பாலத்தின் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.கொண்டம்பட்டியில் இருந்து வடசித்துார் செல்லும் ரோட்டின் குறுக்கே, ஓடை செல்வதால் சிறிய பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிந்துவிட்டது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில், தடுப்பு சுவர் இல்லாததால், ஓடையில் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை துவங்கினர். இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement