Advertisement

சி.ஏ., படித்த நான் நட்சத்திர ஓட்டல் சமையல் கலைஞர்!

Share

சி.ஏ., எனப்படும், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் படித்து, சமையல் துறையில், 'கலக்கி' வருவது பற்றி, சென்னையை சேர்ந்த ஸ்ரீபாலா: என் குடும்பத்தில் அனைவரும், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் படித்தவர்கள் என்பதால், நானும், அதே படிப்பை படித்து, பெரிய நிறுவனம் ஒன்றில், கை நிறைய சம்பளத்தில், உயர்ந்த பதவியில் இருந்தேன்.என் தந்தை, 2013ல் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சியில், அம்மாவும் இறந்து விட்டார்.

அந்த இரு இழப்புகளும், என் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டன. எதைப் பற்றி யும் யோசிக்காமல், வேலையை ராஜினாமா செய்து விட்டு, வீட்டில் சும்மா இருந்தேன். இயல்பிலேயே எனக்கு சமையலில் மிகுந்த ஆர்வம் உண்டு. நேரம் போவதற்காக, சமூக வலைதளங்களில், சமையல் குறிப்புகளையும், நான் செய்த சமையல்களையும், 'போஸ்ட்' செய்து வந்தேன். அதற்கு வரும், 'கமென்ட்ஸ்'களில், பல முன்னணி ஓட்டல்களின் சமையல் கலைஞர்களும் பதில் அளித்திருந்தனர்.அப்படியே அவர்களின் நட்பு கிடைத்தது. சமையல் கலைஞராக களம் இறங்குவது என முடிவு செய்தேன்.

சென்னையில் உள்ள ஒரு முன்னணி, ஐந்து நட்சத்திர ஓட்டலில், தலைமை செப் வேலை காலியாக இருந்ததை அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வில், 'சி.ஏ., படித்த உங்களை, இந்த வேலைக்கு எடுக்க முடியாது. மேலும், ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்தால் தான், ஓட்டல்களில் பணியாற்ற முடியும்' என்றனர்.'படிப்புக்கும், தொழிலுக்கும், சமையல் தொழிலில் சம்பந்தம் கிடையாது. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். பிடித்திருந்தால், வேலைக்கு வையுங்கள்' என்றேன்.அதன்படி, வேலை கிடைத்தது.

நான் செய்த சமையலில் அசந்து போன நிர்வாகம், தொடர்ந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தது. அத்துடன் நின்று விடாமல், தமிழ் இலக்கியங்களில் சமையல் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். பழந்தமிழர் உணவு வகைகள் என்ன; அதில் சேர்ந்த ஐட்டங்கள் என்ன; அவற்றிலிருந்து இப்போது எங்கே மாறுபடுகிறோம் என, ஆராய்ச்சி செய்து வருகிறேன்.உணவே மருந்து என்ற ரீதியில், மருந்தாகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். நாட்டின் பல மாநிலங்களில், உணவுத் திருவிழா நடத்தி வருகிறேன். இப்படி பிரபலமானதால், உலகப்புகழ் பெற்ற, 'டிவி' சமையல் நிகழ்ச்சியாளர் ராம்சேயின், 'அன்சார்ட்டர்டு' நிகழ்ச்சியில் பங்கு பெற விண்ணப்பித்தேன்.

ஏகப்பட்ட, 'பார்மாலிட்டீஸ்' முடித்து, என்னை தேர்வு செய்தனர். அவரிடமே நான் வாக்குவாதம் செய்தேன். இந்தியாவின், தென் மாநிலங்களில் உள்ள உணவு வேறு; வட மாநிலங்களில் உள்ள உணவு வேறு. உணவில் பயன்படுத்தும் பொருட்களும் வேறு என்பதை கூறி, மலைக்க வைத்தேன். இப்போது, சங்க இலக்கிய சாப்பாடு, பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவு முறைகளை ஆராய்ச்சி செய்கிறேன்!சொல்கிறார்கள் - அவள் விகடன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    கணக்குப்பண்ணி சமைக்க இதுவாகத்தான் இருக்கும்.

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    வாவ் கிரேட்

  • R S BALA - Tiruvallur,இந்தியா

    சூப்பர் ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement