Advertisement

கடல்பாசியில் தயாரான கோவிட் மருந்து, வீரியமுள்ளதா?

Share

இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை பலரும் பரிசீலிக்க துவங்கியுள்ளனர்.இதேபோல, அமெரிக்காவிலுள்ள ரென்செலேயர் பாலிடெக்னிக்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடல் பாசியின் சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மருந்து, கொரோனாவின் வேகத்தை தணிப்பதில், தற்போது பிரபலமாக உள்ள, 'ரெம்டெசிவிர்' மருந்தைவிட, மிக சக்திவாய்ந்ததாக இருப்பதாக் கண்டறிந்துள்ளனர்.

கடல் பாசியின் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆர்.பி.ஐ.-27 என்ற மருந்துப் பொருள், ஆய்வக சோதனைகளில், ரெம்டெசிவிரைவிட, 10 மடங்கு சக்திவாய்ந்ததாக இருப்பது தெரிய வந்துள்ளது.கொரோனா வைரசின் நீட்சி போன்ற அமைப்புகள், மனித செல்களைப் பற்றிக்கொண்டு, பல்கிப் பெருகுவதை, ஆர்.பி.ஐ.-27 என்ற மருந்து தடுப்பதால், நோய் தொற்று ஏற்படாமல் தப்பிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement