Advertisement

மோப்பம் பிடிக்க நாய்களை பழக்கலாம்! கொரோனா தொற்று

Share

கொரோனா போன்ற சமூக நெருக்கடிகளுக்கு நடுவே தான், திடமான பல கண்டுபிடிப்புகள் பிறக்கும். மிதமிஞ்சிய அழுத்தத்திற்கு நடுவே வைரம் உருவாவதைப்போல.அனிஷா சிங், நிறுவனர், ஷிகேபிட்டல் மருத்துவ உதவியாளர்கள், தொற்று சோதனை மாதிரிகளை நோயாளிகளின், மூக்கில் இடித்து, குறுகுறு செய்து எடுப்பர். அல்லது, ஊசி குத்தி ரத்தம் எடுப்பர். இது போன்ற சோதனைகளுக்கு மாற்று இல்லையா?ஜெர்மனியை சேர்ந்த ஹானோவர் விலங்கியல் பல்கலைக்கழகம், கொரோனா தொற்று உள்ள மாதிரிகளை கண்டுபிடிக்க, நாய்களை பழக்கலாம் என்று காட்டியுள்ளது.

ஹானோவரின் ஆராய்ச்சியாள்கள் பயிற்சி தந்த, ஜெர்மானிய ஆயுதப்படையை சேர்ந்த நாய்கள், ஆயிரம் பேரின் எச்சில் மாதிரிகளை ஒரு சிறு கிண்ணத்தில் வைத்து மோப்பம் பிடித்தன. இந்த கிண்ணங்கள் சிலவற்றில் மட்டுமே கொரோனா தொற்று உள்ளோரின் எச்சில் வைக்கப்பட்டிருந்தன.இந்த சோதனையில், 94 சதவீத துல்லியத்துடன் கொரோனா நோயாளிகளை மோப்ப நாய்கள் அடையாளம் கண்டு அசத்தியுள்ளன.

இந்த சோதனைகளை அடுத்து, இனி, விமான நிலையங்கள், மண்டல எல்லைகள், பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில், விரைவான கொரோனா சோதனைகளுக்கு, கொரோனா நோயறிதலுக்காகவே பயிற்சி தரப்பட்ட மோப்ப நாய்களை அமர்த்தலாம் என்று ஹானோவர் பல்கலைக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement