Advertisement

கைபடாத லிப்ட் பொத்தான்கள்!

Share

டெக்ஸ்மேக்ஸ் சொலுாஷன்ஸ் தரும் இந்த புள்ளி விபரத்தை கேளுங்கள். மாடி ஏற உதவும் லிப்டில் உள்ள பொத்தான்களில் ஒரு சதுர இன்சில், 3.5 ஆயிரம் கிருமிகள் உள்ளன.

ஒரு கழிப்பறையில் உள்ள கிருமிகளை விட, 17 மடங்கு கிருமிகள் லிப்ட் பொத்தானில் உள்ளன. இத்தோடு, நம்ம கோவிட் - 19 யும் சேர்த்தால்..? அதற்குத்தான், நல்ல தடுப்பூசி வருகிற வரையில், லிப்ட் போன்றவற்றில் கைகள் படாமல் பயணிக்கும்படி மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

டெக்மேக்ஸ் சொலுாஷன்சும் தன் பங்கிற்கு, கைபடாமல் இயக்கும் லிப்ட் பொத்தான்களை வடிவமைத்துள்ளது. இந்த பொத்தான்களை, பழைய பொத்தான்களுக்கு அருகே மாட்டி வைக்கலாம். இவற்றை இயக்க, 20 மி.மீ தள்ளி கைவைத்து சமிக்ஞை செய்தாலே போதும். உரிய தளத்திற்கு செல்லலாம்.

இந்திய நிறுவனமான டெக்மேக்ஸ், இத்தகைய கைபடாமல் இயக்கும் லிப்ட் பொத்தான்களை மிகவும் குறைந்த செலவில் நிறுவி வருவதாக சொல்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement