Advertisement

விஞ்ஞானிகளுக்கு பொற்காலம்!

Share

ஒரு பக்கம், நோயாளிகளின் எண்ணிக்கைகளும், மரணங்களும் தொடர்கின்றன. என்றாலும், மறுபக்கம், விஞ்ஞானிகளுக்கு, கொரோனாவால் முடங்கியிருக்கும் தற்போதைய உலகம் மிகவும் உதவிகரமாக உள்ளது.

காற்றில் கரியமில படிமம் குறைந்து, புகை மூட்டம் தணிந்திருப்பது, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களை உற்சாகமூட்டியுள்ளது. அதே போல மட்டற்ற மகிழ்ச்சியில் இருப்போர் நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் தான். முன்பெல்லாம், கால்பந்து, கிரிக்கெட் போன்ற மைதானங்களில் ரசிகர்கள் குதித்து ஆர்ப்பாட்டம் செய்வதைக்கூட, நில அதிர்வு மானிகளால் பதிவு செய்ய முடியும்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு, மனிதர்களால் உருவாக்கப்படும் நில அதிர்வுகளை கண்டுபிடிப்பது மிகவும் குறைந்துவிட்டது. இதனால், தற்போது, சிறிய, தொலை துார நில நடுக்கங்களையும் அவர்களால் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

அதேபோல, இதுவரை நிலநடுக்கமே வந்திராத பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வு மாற்றங்களையும் இந்தக் காலகட்டத்தில் வல்லுனர்களால் அறிய முடியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement